பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
புத்தாண்டில் விபத்துகள்:
9 பேர் பலி

புத்தாண்டில் நடந்த பல்வேறு விபத்துகளில், தம்பதி உட்பட, ஒன்பது பேர் உயிரிழந்தனர்.கோவையைச் சேர்ந்த, தம்பதி சந்திரசேகரன், 33, விஜயலட்சுமி, 33; தனியார் நிதி நிறுவன ஊழியர்கள்.

விபத்து, Accident,  புத்தாண்டு கொண்டாட்டம் , new year celebration,   மருத்துவமனை, hospital,ஆம்புலன்ஸ்,ambulance, போலீஸ் ,police,   புத்தாண்டு ,new year,


இருவரும், ராயல் என்பீல்டு புல்லட்டில், திருவண்ணாமலை சென்று விட்டு, நேற்று முன்தினம் இரவு, வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.நேற்று அதிகாலை, 1:00 மணியளவில், சேலம் - கோவை புறவழிச்சாலை, வட்டமலை பேருந்து நிறுத்தம் அருகே, பின்னால் வந்த ஆம்புலன்ஸ் மோதியது. இதில் துாக்கி வீசப்பட்ட தம்பதி, சம்பவ இடத்திலேயே பலியாகினர். ஆம்புலன்ஸ் டிரைவர், கோகுல்ராஜ், 24, ஈரோடு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார்.

கட்டட தொழிலாளிஈரோடு மாவட்டம், கோபியைச் சேர்ந்தவர், அருள், 47; கட்டட தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் இரவு, 10:10 மணியளவில், கோபி கரட்டடிபாளையம் அருகே, காலேஜ் பிரிவு பஸ் ஸ்டாப்பில், நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, 17 - 18 வயதுடைய மூன்று வாலிபர்கள், கே.டி.எம்., டியூக் என்ற பைக்கில் வந்தனர்.

நடந்து சென்ற அருள் மீது, பைக் மோதியது. பின், சிறிது துாரத்தில் நின்றிருந்த, மினிஆட்டோ மீதும் பலமாக மோதியது. இதில், நடந்து சென்ற அருள் மற்றும் பைக்கில் பயணித்த மூவரும் பலத்த காயமடைந்தனர். கோபி அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில்,அருள், ஒரு வாலிபர் உயிரிழந்தனர்.

2 பேர் பலிகரூர் மாவட்டம், பசுபதிபாளையம் தொழிற்பேட்டையைச் சேர்ந்தவர், துரைராஜ், 54; கரூர் அரசு போக்குவரத்து பணிமனையில், மெக்கானிக்காக வேலை செய்து வந்தார். இவர், நேற்று முன்தினம் இரவு, 11:30 மணிக்கு, ஸ்பிளண்டர் பைக்கில், 48 வயது மனைவி, 18 வயது உறவினர் பெண்ணுடன், வடக்கு பசுபதிபாளையத்தில் உள்ள சர்ச்சுக்கு சென்றார்.

அப்போது, கரூரைச் சேர்ந்த மகேந்திரன், 19, என்பவர், அதே வயது நண்பர் ஒருவருடன், பஜாஜ் பல்சர் பைக்கில் எதிரே வந்தார். இரு வாகனங்களும், தொழிற்பேட்டை டாஸ்மாக் அருகே, நேருக்கு நேர் மோதின. இதில், துரைராஜ், மகேந்திரன் படுகாயமடைந்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர்.


புது மாப்பிள்ளை


தர்மபுரி மாவட்டம், மொரப்பூரைச் சேர்ந்தவர், ரஞ்சித்குமார், 25; ஈரோட்டில், தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி, இந்துமதி, 24, அதே நிறுவனத்தில் பணிபுரிகிறார்.காதலர்களான இருவரும், ஆறு மாதங்களுக்கு முன், திருமணம் செய்து, ஈரோட்டில் வசித்து வந்தனர்.

புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, நேற்று அதிகாலை, 2:30 மணிக்கு, தன்னுடன் பணியாற்றும், அருள் குமார், 25,என்பவருடன், மாருதி செலிரியோ காரில், ரஞ்சித்குமார் சித்தோடு நோக்கி சென்றார். காரை, அருள்குமார் ஓட்டினார்.

வழியில், கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர புளிய மரத்தில் மோதியது. இதில், காரில் இருந்த ரஞ்சித்குமார், தலையில் பலத்த அடிபட்டு, சம்பவ இடத்திலேயே பலியானார். காயங்களுடன், ஈரோடு அரசு மருத்துவமனையில், அருள்குமார் சிகிச்சை பெறுகிறார்.

2 மாணவர்கள்கடலுார் மாவட்டம், கொள்ளிடத்தைச் சேர்ந்தவர், அப்துல் ரகுமான், 20; சிதம்பரத்தைச் சேர்ந்தவர், செல்வகணபதி 20; நண்பர்களான இருவரும், சிதம்பரம் கீரப்பாளையத்தில் உள்ள, தனியார் கல்லுாரியில் படித்து வந்தனர்.புத்தாண்டை கொண்டாட, இருவரும், புதுச்சேரி கடற்கரைக்கு, நேற்று முன்தினம் சென்றுள்ளனர். கொண்டாட்டங்களை முடித்து, நேற்று முன்தினம் நள்ளிரவே இருவரும், பஜாஜ் பல்சர் பைக்கில், ஊர் திரும்பி கொண்டு இருந்தனர்.புதுச்சேரி - கடலுார் சாலை, அரியாங்குப்பம் பாலத்தில் சென்ற போது, கட்டுப்பாட்டை இழந்த பைக், சாலை தடுப்புக் கட்டையில் மோதி, இருவரும் உயிரிழந்தனர்.

23 சதவீதம் அதிகரிப்பு?

புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, '108' ஆம்புலன்ஸ் சேவையை பயன்படுத்தியோர் எண்ணிக்கை, 2017ஐ விட, இந்தாண்டு, 23 சதவீதம் அதிகரித்துள்ளது.தமிழகம் முழுவதும், 2017 புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, 527 பேர் விபத்தில் படுகாயமடைந்து, மருத்துவமனை செல்ல, '108' ஆம்புலன்ஸ் சேவையை பயன்படுத்தினர். இந்தாண்டு, நேற்று முன்தினம் இரவு, புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடந்தன. இரவு, 11:00 மணி முதல், 2:00 மணி வரை, சாலை விபத்து, அடிதடி போன்றவற்றால், 650 பேர் படுகாயம் அடைந்து, '108' சேவையை பயன்படுத்தி உள்ளனர்.
இது, 2017ல் காட்டிலும், 23 சதவீதம் அதிகம். சென்னையில், சாலை விபத்து, அடிதடி போன்றவற்றில் சிக்கி, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில், 84 பேர்; ராயப்பேட்டையில், 155; கீழ்ப்பாக்கத்தில், 27; ஸ்டான்லியில், 51; கஸ்துாரிபா காந்தி மருத்துவமனையில், மூன்று பேர் என, 320 பேர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர். சிகிச்சை பெற்றவர்களை சந்தித்து, சுகாதாரத் துறை அமைச்சர், விஜயபாஸ்கர் ஆறுதல் கூறினார்.

Advertisementசென்னையில் எவ்வளவு?புத்தாண்டு கொண்டாட்டம் காரணமாக, நேற்று முன்தினம் இரவில் இருந்து, நேற்று அதிகாலை வரை, சென்னையில், 179 வாகன விபத்துகள் ஏற்பட்டுள்ளன. இதில், இருவர் உயிரிழந்துள்ளனர்.சென்னையில், புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, 179 இடங்களில், சாலை விபத்து நடந்துள்ளது; இருவர் பலியாகி உள்ளனர். காயமடைந்த, 82 பேர், அரசு மருத்துவமனைகளில், உள்நோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர். சிறு காயங்கள் ஏற்பட்ட, 84 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பி உள்ளனர்.

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர், ராய்மேன், 29. அவர், சில தினங்களுக்கு முன், புதுப்பேட்டை காவலர் குடியிருப்பில் உள்ள, உறவினர் வீட்டுக்கு வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு, இவர், தன் நண்பர்களுடன் மது அருந்தியதாக கூறப்படுகிறது; பின், புத்தாண்டு கொண்டாட்டத்திலும் ஈடுபட்டுள்ளார்.

எழும்பூர் எல்.ஜி., சாலையில், ராய்மேன், இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தபோது, நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில், தலையில் பலத்த காயமடைந்தவர், சம்பவ இடத்திலேயே பலியானார். அண்ணா சதுக்கம் போக்குவரத்து போலீசார் விசாரிக்கின்றனர்.

அதேபோல், திருமுல்லைவாயல், இ.எஸ்.ஐ., அண்ணா நகர், சர்ச் தெருவைச் சேர்ந்தவர், பவுல், 24; தனியார் நிறுவன ஊழியர். புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்ட இவர், தன் இருசக்கர வாகனத்தில், நண்பர் பிரான்சிஸ் மற்றும், 17 வயது சிறுவனுடன், பட்டாபிராமில் உள்ள தேவாலயத்திற்கு சென்றுள்ளார்.

மூவரும், இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பினர். ஆவடி போக்குவரத்து கழக பணிமனை அருகே சென்றபோது, மையத்தடுப்பு மீது மோதி கீழே விழுந்தனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில், பவுல் இறந்தார். மற்றவர்களுக்கு காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர்.இச்சம்பவம் குறித்து, பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரிக்கின்றனர்.

- நமது நிருபர் குழு -


Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
02-ஜன-201807:14:52 IST Report Abuse

Loganathan Kuttuvaஇரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் தான் அதிகம் விபத்திற்குள்ளாகிறார்கள்.போதை விபத்தை கூட்டுகிறது.

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X