அரசியல் செய்தி

தமிழ்நாடு

'வேகத்தடை வேண்டும்'; மா.கம்யூ., வலியுறுத்தல்

Added : ஜன 02, 2018
Share
Advertisement
அவிநாசி :அவிநாசி அருகே ராக்கியாபாளையத்தில், தேவையான இடங்களில் வேகத்தடை அமைக்க வலியுறுத்தி, மா.கம்யூ., கட்சியினர் நேற்று கையெழுத்து இயக்கம் நடத்தினர்.திருமுருகன்பூண்டி பேரூராட்சி, ராக்கியாபாளையத்தில் அகலமான தார்ரோடு இருந்தும், அதிக எண்ணிக்கையில், வளைவுகளும், தாழ்வான பகுதிகளும் உள்ளன. போக்குவரத்து குறியீடு, வேகத்தடைகள் இல்லாததால், அடிக்கடி விபத்து

அவிநாசி :அவிநாசி அருகே ராக்கியாபாளையத்தில், தேவையான இடங்களில் வேகத்தடை அமைக்க வலியுறுத்தி, மா.கம்யூ., கட்சியினர் நேற்று கையெழுத்து இயக்கம் நடத்தினர்.திருமுருகன்பூண்டி பேரூராட்சி, ராக்கியாபாளையத்தில் அகலமான தார்ரோடு இருந்தும், அதிக எண்ணிக்கையில், வளைவுகளும், தாழ்வான பகுதிகளும் உள்ளன. போக்குவரத்து குறியீடு, வேகத்தடைகள் இல்லாததால், அடிக்கடி விபத்து நடக்கிறது.
இந்தாண்டில் நடந்த நான்கு விபத்துகளில், உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது.எனவே, ராக்கியாபாளையம், கே.ஆர்.ஜி., நகர் சந்திப்பு, அம்மன் நகர் சந்திப்பு, விநாயகர் கோவில், பஸ் ஸ்டாப் கார்னர், மகாலட்சுமி நகர், பாலாஜி நகர் பகுதிகளில் வேகத்தடை அமைக்க வேண்டும். தேவையான இடங்களில், பாலம் அமைக்க வேண்டுமென, மா.கம்யூ., கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி நேற்று, கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.ராக்கியாபாளையம் பிள்ளையார் கோவில் அருகே பொதுமக்கள், கையெழுத்திட்டனர். அம்மனுவை, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்காதபட்சத்தில், பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படுமென, அவிநாசி ஒன்றிய மா.கம்யூ., செயலாளர் வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X