பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
ரூ.2,000 கள்ள நோட்டு
வங்கிகளில் ஊடுருவலா?

வங்கிகளுக்கு நேரடியாக சென்று வாங்கும், 2,௦௦௦ ரூபாய் நோட்டுகளில், கள்ள நோட்டு கலந்திருப்பது, வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ரூ.2000,கள்ள நோட்டு,வங்கி,ஊடுருவலா?


வங்கி ஏ.டி.எம்.,களில், கள்ள நோட்டு கலந்து வருவது வாடிக்கையாகி விட்டது. சமீப காலமாக, வங்கிக் கிளைகளில், நேரடியாக பணம் எடுப்போருக்கும், கள்ள நோட்டு கிடைப்பது தான் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

குறிப்பாக, 2,000 ரூபாய் நோட்டுகள் தான், இப்படி கலந்து வருகின்றன. அவற்றை

திருப்பிக் கொடுத்தால், அதை அந்த கிளையிலேயே மாற்றித் தர மறுக்கின்றனர். அத்துடன், காவல் நிலையத்திலும் புகார் தருவர். தங்கள் சேமிப்பில் இருந்த பணத்தை இழந்தது மட்டுமின்றி, காவல் நிலையத்திற்கும் அலைய வேண்டியுள்ளதால், மக்கள் அவதிப்படுகின்றனர்.

சமீபத்தில், சென்னையில், தேசியமய வங்கி வாடிக்கையாளர் ஒருவருக்கு, அதன் கிளையில் தரப்பட்ட பணத்தில், 2,000 ரூபாய் கள்ள நோட்டு வந்தது. வங்கி ஊழியர்கள், சிரத்தையாக இருந்திருந்தால், அந்த நோட்டு, கிளைக்குள் வந்திருக்காது என, அவரை போல் ஏமாந்தவர்கள், புகார் கூறுகின்றனர்.

இது குறித்து, அகில இந்திய வங்கி ஊழியர் சம்மேளன பொதுச் செயலர், வெங்கடாசலம் கூறியதாவது: வங்கி ஊழியர்கள், கள்ள நோட்டுகள் சரிபார்க்கும் இயந்திரத்தில், சோதித்து பார்த்த பிறகே, அவற்றை வாங்க வேண்டும். எனினும், தமிழகத்தில் உள்ள, 16

Advertisement

ஆயிரம் கிளைகளில், பல கிளைகளில், அந்த கருவிகள் இல்லை. அவற்றை, அரசு வழங்க வேண்டும்.

மேலும், வரிசையில் நிற்கும் வாடிக்கையாளர்களும் பொறுமை காப்பதில்லை; அவசரப்படுத்துவதால், ஊழியர்கள், கள்ள நோட்டை வாங்க நேரிடுகிறது. இருப்பினும், வங்கி ஊழியர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
saravanan - basra,ஈராக்
30-ஜன-201813:46:22 IST Report Abuse

saravananவங்கி ஊழியர்களின் கைவண்ணம்

Rate this:
Murugan - Boissy- saint- leger,பிரான்ஸ்
03-ஜன-201821:38:00 IST Report Abuse

Murugan500 , 1000 என அடித்தவனுக்கு வசதியாக 2000 ருபாய் நோட்டை கொடுத்து நல்ல வசதி செய்து விட்டது .................

Rate this:
Sulikki - Pudukkottai,இந்தியா
03-ஜன-201818:59:28 IST Report Abuse

Sulikkiநம் நாட்டில் எல்லாமே குளறுபடி, கொள்ளை கூட்டம்தான். எல்லாமே திருடர்கள்தான். மனசாட்சி, நேர்மை, நியாயம் ஒரு சொட்டு கூட கிடையாது. இதில் வங்கிகள் சட்டப்படி அங்கீகரிக்கப்பட்ட திருடர்கள் அவ்வளவுதான். SBI இன் 2017 MAB வசூல் மட்டும் 1700 கோடிக்கும் மேல். நியாமான லாபத்தைவிட அதிகம்.

Rate this:
மேலும் 24 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X