அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
கட்சிபெயர்,சின்னம்,நடிகர்,Rajini,Rajinikanth,ரஜினி,ரஜினிகாந்த்,பளிச்

அரசியலில் குதித்துள்ள, நடிகர் ரஜினி, தன் கட்சியின் பெயர், சின்னம் குறித்து, தனக்கு எதுவும் தெரியாது; போக போக தெரியும் என, நேற்று காலையில், சினிமா பாணியில் தெரிவித்தார். மாலையில், 'கட்சி கொடி தயாரிக்கும் பணி நடக்கிறது. பெயர், சின்னம் பற்றி விரைவில் அறிவிப்பேன்' என, பதில் அளித்தார். அதோடு, 'ஆன்மிக அரசியல்' குறித்தும் விரிவான விளக்கம் அளித்தார். தன் அரசியல் பிரவேசத்தை, உலகறிய செய்ததற்காக, பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவித்ததுடன், தொடர்ந்து ஆதரவு தரவும், வேண்டுகோள் விடுத்தார்.

கட்சிபெயர்,சின்னம்,நடிகர்,Rajini,Rajinikanth,ரஜினி,ரஜினிகாந்த்,பளிச்


நடிகர் ரஜினியின், அரசியல் பிரவேசம், அவரது ரசிகர்களிடம் உற்சாகத்தையும், அரசியல் கட்சிகளிடம் கலக்கத்தையும் ஏற்படுத்தி உள்ளது. அதையடுத்து, அவர், அடுத்த கட்ட நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகிறார்.

தன் ரசிகர்களையும், பொது மக்களையும் ஒருங்கிணைப்பதற்காக, ரசிகர் மன்றம் பெயரில், இணைய தளம் மற்றும், 'மொபைல் ஆப்' உருவாக்கி உள்ளார்.அதைத் தொடர்ந்து, மன்றத்தில் உறுப்பினர்களை சேர்க்கும் பணி வேகம் பெற்றுள்ளது. அவரது ரசிகர்கள் மட்டுமின்றி, அனைத்து தரப்பினரும், ஆர்வமுடன் உறுப்பினராகி வருகின்றனர்.

நேற்று காலையில், சென்னை, போயஸ் கார்டனில் உள்ள வீட்டின் முன், நிருபர்களிடம் பேசிய ரஜினி, ''என் கட்சி பெயர், சின்னம் குறித்து எனக்கே தெரியாது; போக போக தான் தெரியும்,'' என்றார்.


கொடி தயாரிப்பு :


'ஆன்மிக அரசியல்' கடுமையாக விமர்சிக்கப்படுவது குறித்து கேட்ட போது, 'உண்மையான, நேர்மையான, நாணயமான, ஜாதி, மதச் சார்பற்ற அரசியலே, ஆன்மிக அரசியல்' என, பதில் அளித்தார். சென்னையில், நேற்று மாலை, பத்திரிகையாளர்களை சந்தித்தபோது, 'கட்சி பெயர், சின்னம், கொடி தயாரிப்பு பணி நடந்து வருகிறது' என்றார்.

சென்னையில் ரசிகர்களை சந்தித்து, புகைப்படம் எடுத்துக் கொண்டது போல், பத்திரிகையாளர்களை சந்தித்து, தனித்தனியே பேசி, புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

அப்போது, அவர் பேசியதாவது: சென்னையில், ஆறு நாட்களாக, ரசிகர்களை சந்தித்து பேசிய விபரங்களை, உலகமறிய செய்த பத்திரிகைகளுக்கு நன்றி. நானும் சிறு வயதில், பத்திரிகையில் பிழை திருத்துபவராக பணியாற்றி உள்ளேன். நண்பர் ராமசந்திர ராவ், என்னை கன்னட தினசரி பத்திரிகை ஒன்றில், பிழை திருத்துனராக சேர்த்து விட்டார். அங்கு, இரண்டு மாதம் பணியாற்றினேன்.

தமிழ் வார இதழ் ஒன்றுக்கு, 1976ல், பேட்டி கொடுத்தேன். அதன் பின், 1996ல், பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. அதன் பின், இன்று வரை, அறிக்கை மட்டுமே கொடுத்து வருகிறேன். பத்திரிகையாளர்களை எப்படி கையாள வேண்டும் என, எனக்கு தெரியவில்லை. நான் ஏதாவது சொன்னால், அது, பெரிய விவாதமாகி விடுகிறது. இந்த சந்திப்பு, மரியாதை நிமித்தமானது மட்டுமே. நான் ஏதாவது தவறாக செய்திருந்தால் மன்னிக்கவும்.

நம் எல்லாருக்கும் ஒரு கடமை உள்ளது. சுதந்திரப் போராட்டத்தை போல்,

Advertisement

தற்போது, ஜனநாயகப் போராட்டம் துவங்கி உள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க, நிறைய போராட்டங்கள், தமிழகத்திலிருந்து தான் துவங்கி உள்ளன.

அரசியல் புரட்சி:


இங்கிருந்து, அரசியல் புரட்சி துவங்க வேண்டும் என்பதே, என் ஆசை. இந்த தலைமுறையில், இந்த போராட்டம் துவங்கினால், வரும் தலைமுறையினரும் சந்தோஷப்படுவர். அதற்கு, உங்கள் ஒத்துழைப்பு தேவை. விரைவில், பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பேன். இவ்வாறு அவர் பேசினார்.

தனி விதம்!

நடிகர் ரஜினி, யாரை சந்திக்கிறாரோ, அது தொடர்பான விஷயங்களை நினைவுகூர்வதை வழக்கமாக்கி உள்ளார். சமீபத்தில், நெல்லை, கோவை, மதுரை, சென்னை மாவட்ட ரசிகர்களை சந்தித்த ரஜினி, அந்தந்த மாவட்ட மக்கள் குறித்தும், அந்தந்த ஊரில் நடந்த சம்பவங்களையும் கோடிட்டு காட்டிய பின்னரே, பேச்சை துவக்கினார். நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தபோதும், இரண்டு மாதம், கன்னட பத்திரிகையில் வேலை பார்த்ததாக கூறினார்.பல ஆயிரம் பேர் :

ரஜினி ஆரம்பித்துள்ள மன்றத்தில், இதுவரை, பல ஆயிரம் பேர் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. ரஜினி மன்றம் பெயரில், இணையதளம் மற்றும், 'மொபைல் ஆப்' செயலியை துவக்கியுள்ள ரஜினி, அதில் சேருமாறு அனைவருக்கும் அழைப்பு விடுத்தார். அதன்படி, ரசிகர் மன்ற உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் என, பல ஆயிரம் பேர் இணைந்திருப்பதாக, ரஜினி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (144)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை

ரவிச்சந்திரன் முத்துவேல் (தோழர் சே பீனிக்ஸ்) தெரியாதா ? ரகசியம் காக்கிறாரா?

Rate this:
ஈரோடுசிவா - erode ,இந்தியா
04-ஜன-201800:23:29 IST Report Abuse

 ஈரோடுசிவாஅட ... திராவிச பாம்புகளே ... ரஜினி அரசியலில் இறங்கி தேர்தலை சந்தித்து ஆட்சியை பிடிக்க முடிவெடுத்திருக்கிறார் ... இதைக்குற்றம் என்று யாரும் சொல்ல முடியாது ... இந்திய அரசியல் சாசனப்படி இது ஒரு இந்திய பிரஜையின் உரிமை ... விருப்பமிருந்தால் மக்கள் தேர்ந்தெடுக்கட்டும் ... இல்லாவிட்டால் போகட்டும் ... இது ரஜினி பாடு ... மக்கள் பாடு ... நடுவில் இங்கே சிலர் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொள்வது ஏனோ ... ?

Rate this:
raghavan - Srirangam, Trichy,இந்தியா
03-ஜன-201819:31:04 IST Report Abuse

raghavanகாஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் சிலை மாற்றி பெரும் ஊழல் நடந்திருப்பதாக செய்திகள் சொல்கின்றன. இவர் ஏதாவது போராட்டம் செய்து தொண்டர்களை திரட்டி உண்மையை வெளி கொண்டுவருவாரா???

Rate this:
Ramesh Lal - coimbatore,இந்தியா
08-ஜன-201822:16:29 IST Report Abuse

Ramesh Lalரஜினிக்கு போராட்டம் செய்வது பிடிக்காது பேச்சுவார்த்தை மூலம் கண்டுபிடிப்பார். இப்போது இருக்கும் பிரச்னை குறித்தும் பேசமாட்டார். எம்.எல். எ . தேர்தல் வரும்போது கட்சி ஆரம்பிப்பார். எல்லோரும் அவருக்கே ஒட்டு பொடுரோம். அவர் முதல்வர் ஆவார். ...

Rate this:
மேலும் 140 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X