தினகரனுக்கு வணக்கம் போடாதீங்க; எம்.எல்.ஏ.,க்களுக்கு முதல்வர் உத்தரவு Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
தினகரனுக்கு வணக்கம் போடாதீங்க!
எம்.எல்.ஏ.,க்களுக்கு முதல்வர் உத்தரவு

சென்னை : ''சட்டசபையில், அரசை குறை கூறி, தினகரன் பேசினால், எம்.எல்.ஏ.,க்கள் யாரும் எழுந்து, குரல் கொடுக்க வேண்டாம்,'' என, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களுக்கு, முதல்வர், பழனிசாமி அறிவுரை கூறி உள்ளார்.

 Dinakaran, MLA,TTV Dinakaran,எம்.எல்.ஏ.,டி.டி.வி. தினகரன்,தினகரன்

அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், சென்னை, ராயப்பேட்டையில் உள்ள, அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், நேற்று நடந்தது. காலை, 10:00 மணிக்கு துவங்கும் என, அறிவிக்கப்பட்டிருந்தது.

தகுதி நீக்கம்

ஆனால், 10:30க்கு தான், கட்சி ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான பன்னீர்செல்வம் வந்தார். காலை, 10:45 மணிக்கு, முதல்வர், பழனிசாமி வந்தார். அவர் வந்ததும் கூட்டம் துவங்கியது.அ.தி.மு.க.,விற்கு, சட்டசபையில், சபாநாயகர் தவிர்த்து, 134 எம்.எல்.ஏ.,க்கள் இருந்தனர். அவர்களில், 18 பேர், தினகரனை ஆதரித்ததால், தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.,க்கள் மூன்று பேர். தினகரன் ஆதரவாளர்கள், அறந்தாங்கி - ரத்தினசபாபதி, விருத்தாசலம் - கலைச்செல்வன் தவிர, மீதம், 111 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர்.

அவர்களில், அமைச்சர்கள் உட்பட ஏழு பேர், பல்வேறு காரணங்களால், கூட்டத்தில் பங்கேற்கவில்லை. மற்ற எம்.எல்.ஏ.,க்கள், 104 பேர் பங்கேற்றதாக தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில், முதல்வர், பழனிசாமி பேசுகையில், ''சுயேச்சை எம்.எல்.ஏ., தினகரன், சட்டசபைக்கு வரும்போது, அவருக்கு யாரும் வணக்கம் செலுத்த வேண்டாம். அவர் ஏதாவது பேசினால், அமைச்சர்கள் பதில் அளிப்பர்.''அரசை குறை கூறினாலும், எம்.எல்.ஏ.,க்கள் எழுந்து கூச்சல் எழுப்ப வேண்டாம். அதேபோல், எதிர்க்கட்சி, எம்.எல்.ஏ.,க்களின் கேள்விகளுக்கு, சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள், பதில் அளிப்பர்; மற்றவர்கள் அமைதியாக இருக்க வேண்டும்,'' என்றார். அத்துடன், கட்சிக்கு தனி, 'டிவி'யும், நாளிதழும் துவங்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், அவர் தெரிவித்தார்.

சிண்டு முடிவர்

துணை முதல்வர், பன்னீர்செல்வம் பேசியதாவது:சென்னை, ஆர்.கே.நகரில் நாம் தோல்வி அடைந்ததற்கு, நம் மெத்தனமே காரணம்.ஆட்சிக்கும், கட்சிக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில், யாரும் செயல்பட வேண்டாம். சட்டசபையில், எதிர்க்கட்சிகள் பிரச்னையில் ஈடுபட்டாலும், நீங்கள் அமைதி காக்க வேண்டும்.எதிர்க்கட்சியினர் கேள்விகளுக்கு, அமைச்சர்கள் பதில் அளிப்பர். தி.மு.க.,வினர், நமக்குள் சிண்டு முடித்து விட பார்ப்பர்; அதற்கு இடம் அளிக்கக் கூடாது.கூட்டத்தொடர் முடியும் வரை, விடுப்பின்றி அனைவரும் சபைக்கு வர வேண்டும். சபை முடியும் வரை இருக்க வேண்டும். தீர்மானங்கள் நிறைவேற்றும்போது, அனைவரும் சபையில் இருக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement

அசைக்க முடியாது!

அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், அமைச்சர் ஜெயகுமார் அளித்த பேட்டி: தினகரன், சட்டசபைக்கு வருவதால், எந்த பாதிப்பும் கிடையாது. 'நாம் ஒருவர்; நமக்கு ஒருவர்' கதை தான். கட்சியும், ஆட்சியும், ஜெ., கூறியதுபோல், நுாறு ஆண்டுகள் தழைத்தோங்கும். இந்த இயக்கத்தை யாரும் அசைக்க முடியாது. தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலினும், தினகரனும் சேர்ந்து முயன்றாலும், அரசை கவிழ்க்க முடியாது. அனைத்து, எம்.எல்.ஏ.,க்களும் ஒன்றிணைந்து, ஜெ., அரசு தொடர விரும்புகின்றனர். மொத்தம், 104 எம்.எல்.ஏ.,க்களில், 'ஸ்லீப்பர் செல்' யாரும் இல்லை. அரசியல் என்பது கடல் போன்றது; யார் வேண்டுமானாலும் குதிக்கலாம். ஆனால், மூழ்கி விடக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

ஏழு பேர் 'ஆப்சென்ட்!'

அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில், ஏழு பேர் பங்கேற்கவில்லை. கூட்டுறவுத் துறை அமைச்சர், ராஜு, எம்.எல்.ஏ.,க்கள் பிரபு, பவுன்ராஜ் ஆகியோர், சபரிமலை சென்றுள்ளனர். கவுண்டம்பாளையம், எம்.எல்.ஏ., ஆறுகுட்டி, மொடக்குறிச்சி, எம்.எல்.ஏ., சிவசுப்ரமணியம் ஆகியோர், உடல் நலக்குறைவு காரணமாக, மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். செய்தித்துறை அமைச்சர், ராஜு, கதர் துறை அமைச்சர், பாஸ்கரன் ஆகியோர், சிவகங்கை மாவட்டத்தில், வீரமங்கை வேலுநாச்சியார் பிறந்த நாள் விழாவில் பங்கேற்க சென்றிருந்ததால், கூட்டத்திற்கு வரவில்லை.


Advertisement

வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
murugan - chennai,இந்தியா
04-ஜன-201820:09:33 IST Report Abuse

muruganஎதையும் சொல்லிடாதீங்க... அடிச்சி கூட கேப்பாங்க... அப்பவும் சொல்லிடாதீங்க

Rate this:
Appavi Tamilan - Chennai,இந்தியா
04-ஜன-201820:06:18 IST Report Abuse

Appavi Tamilanஎடப்பாடி சொன்னது, தினகரன்கூட யாரும் பேசக்கூடாது, சிரிக்கக்கூடாது, அன்னம் தண்ணி புழங்க கூடாது. மீறின அவங்களையும் கட்சிய விட்டு விலக்கி வைப்போம். ஓபிஎஸ் சொன்னது, அரசரப்பட்டு அப்பிடி சொல்லாதீங்க. இதுதான் சாக்குன்னு எல்லோரும் அவரு பக்கம் போய்ட போறாங்க.

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
04-ஜன-201816:35:48 IST Report Abuse

Endrum Indianஜெயா சட்டசபையில் எழுந்தால், பேசினால், தும்மினால் கூட மேஜை தட்டி தட்டி பழக்கப்பட்டவர்களுக்கு இதெல்லாம் சகஜம் தான்.

Rate this:
மேலும் 19 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X