ரஜினி கட்சியில் சேர 'மாஜி'க்கள் தூது! Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
ரஜினி கட்சியில் சேர 'மாஜி'க்கள் தூது!

நடிகர் ரஜினி, தனிக்கட்சி அறிவிப்பை வெளியிட்ட பின், அவரது கட்சியில் இணைவதற்கு, அ.தி.மு.க., - தி.மு.க., கட்சிகளை சேர்ந்த, 'மாஜி' அமைச்சர்கள் சிலர், துாது அனுப்பிய தகவல் வெளியாகியுள்ளது.

 ரஜினிகாந்த்,Rajinikanth, தனிக்கட்சி, முன்னாள் அமைச்சர்கள்,Former ministers, ஆன்மிக அரசியல் ,aanmeega arasiyal, அ.தி.மு.க., ADMK, தி.மு.க.,DMK,  ரஜினி மன்றம்,rajini mandram, நடிகர் ரஜினி, actor Rajini,  ரஜினி அரசியல்,Rajini politics, Rajini,Kollywood,


வரும் சட்டசபை தேர்தலுக்கு முன், தனிக்கட்சி துவக்கி, 234 தொகுதிகளிலும் போட்டியிடப்போவதாக, ரஜினி அதிரடியாக அறிவித்தார். அந்த அறிவிப்பை, அவரது ரசிகர்கள், திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர்.

அ.தி.மு.க.,வில், ஜெயலலிதா மறைவுக்கு பின், கட்சியை வழிநடத்தி செல்ல,

வசீகர தலைவர்கள் யாரும் இல்லை என்ற குறை, தொண்டர்கள் மத்தியில் நீடிக்கிறது. அ.தி.மு.க., தொண்டர்களை பொருத்தவரையில், திராவிட கொள்கை, கோட்பாடுகள் சார்ந்து, வளர்ந்தவர்கள் அல்ல. சினிமாவில்,எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் படங்களை பார்த்து, ரசிகர்களாக வளர்ந்தவர்கள். அதன் வெளிப்பாடாக தான், சமீபத்தில், கூட்டுறவு அமைச்சர் ராஜு பேசுகையில், 'நானும் ரஜினி ரசிகன்' என, பிரகடனப்படுத்திக் கொண்டார்.

ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது, ஓரங்கட்டி வைக்கப்பட்ட, சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த, மாஜி அமைச்சர் ஒருவரும், தி.மு.க.,விலிருந்து நீக்கப்பட்ட, தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த, முன்னாள் அமைச்சர்ஒருவரும், ரஜினியை சந்திக்க, நேரம் கேட்டு உள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம், காங்கிரஸ் வட்டார தலைவர்கள் சிலர், தங்களின் பதவிகளை ராஜினாமா செய்து விட்டதாக,

Advertisement

ரஜினி மன்றத்திற்கு தகவல் அனுப்பியுள்ளனர். திருநெல்வேலி, துாத்துக்குடி மாவட்ட அ.தி.மு.க., பிரமுகர்கள், பா.ஜ.,வில் இணைய திட்டமிட்டிருந்தனர்.

தற்போது, அத்திட்டத்தை உதறிவிட்டு, ரஜினி துவக்கவுள்ள கட்சியில் சேர தயராகியுள்ளனர். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள, தி.மு.க., பிரமுகர்களும், ரஜினி பக்கம் ஓட்டம் பிடிக்க, தன் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி உள்ளனர்.
- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (52)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mano - Chennai  ( Posted via: Dinamalar Android App )
04-ஜன-201822:51:59 IST Report Abuse

manoRAJINI sir Evanume onnum panna mudiyathu and my age 23

Rate this:
venkatesh - coimbatore,இந்தியா
04-ஜன-201820:59:42 IST Report Abuse

venkateshஇவர் அரசியலுக்கு லாயக்கு இல்லை .பாருங்கள் .கொஞ்ச நாளில் பரட்டை தலையில் இருக்கு நாலு முடியும் விழுந்து பைத்தியமா சுத்தப்போறார்.

Rate this:
S Rama(samy)murthy - karaikudi,இந்தியா
04-ஜன-201820:57:19 IST Report Abuse

S Rama(samy)murthyதிரு ரஜனி வருகை , ஒட்டுண்ணி , முட்டை பூச்சி களுக்கு கலக்கத்தை ( கழகங்களுக்கு ) ஏற்படுத்தியுள்ளது .வெற்றி நிச்சயம் ரஜினி .சுபராம காரைக்குடி

Rate this:
மேலும் 49 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X