கோத்ரா ரயில் எரிப்பு : 59 பேரை கொன்ற வழக்கில் தீர்ப்பு ; 31 பேர் குற்றவாளிகள்: 63 பேர் விடுவிப்பு

Updated : பிப் 22, 2011 | Added : பிப் 22, 2011 | கருத்துகள் (30) | |
Advertisement
ஆமதாபாத்: கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தில் 59 பேரை கொன்ற வழக்கில் 31 பேர் குற்றவாளிகளாவும், 63 பேர் விடுவிக்கப்படுவதாகவும் இன்று விரைவு சிறப்பு கோர்ட் தீர்ப்பளித்து. கடந்த 2002-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27-ம் தேதியன்று உ.பி. மாநிலம் அயோத்தி சென்று சபர்மிதி எக்ஸ்பிரஸ் மூலம் ஏராளமான சாதுக்கள் திரும்பிக்கொண்டிருந்தனர். குஜராத் கோத்ரா ரயில் நிலையத்தில் வன்முறை கும்பல் ஒன்று
Verdict on 2002 Godhra train burning case today, கோத்ரா ரயில் எரிப்பு : 59 பேரை கொன்ற வழக்கில் இன்று தீர்ப்பு: மாநிலம் முழுவதும��

ஆமதாபாத்: கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தில் 59 பேரை கொன்ற வழக்கில் 31 பேர் குற்றவாளிகளாவும், 63 பேர் விடுவிக்கப்படுவதாகவும் இன்று விரைவு சிறப்பு கோர்ட் தீர்ப்பளித்து.

கடந்த 2002-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27-ம் தேதியன்று உ.பி. மாநிலம் அயோத்தி சென்று சபர்மிதி எக்ஸ்பிரஸ் மூலம் ஏராளமான சாதுக்கள் திரும்பிக்கொண்டிருந்தனர். குஜராத் கோத்ரா ரயில் நிலையத்தில் வன்முறை கும்பல் ஒன்று ரயிலுக்கு தீ வைத்து எரித்தது. இதில் 59 பேர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து மாநிலத்தில் பெரும் கலவரம் ஏற்பட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் ஐ.எஸ்.ஐ., அமைப்பு தலைமறைவில் இந்த சதி திட்டம் நடந்ததாக வழக்கு தொடரப்பட்டது.


வழக்கு தொடர்பாக சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டு அதன் தலைவர் மாஜி சி.பி.ஐ. இயக்குனர் ராகவன் தலைமையில் விசாரணை நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை சமபர்மதி ஜெயில் வளாகத்தில் உள்ள விரைவு சிறப்பு கோர்ட்டில் நடந்தது.


மொத்தம் எத்தனை ‌பேர் :இந்த வழக்கில் மொத்தம் 134 பேர் சேர்க்கப்பட்டனர். 16 பேர் தலைமறைவாக உள்ளனர். 13 பேர் ஆதாரமின்மையால் விடுவிக்கப்பட்டனர். 80 பேர் சிறையில் உள்ளனர். 15 பேர் ஜாமீனில் உள்ளனர்.


இன்று 95 பேர் மீதான குற்றத்தில் இன்று தீர்ப்பளித்தது. இதில் 31 பேர் குற்றவாளிகர் என்றும், 63 பேர் விடுவிக்கப்படுவதாகவும் நீதிபதி தீர்‌ப்பளித்தார். 31 பேருக்கான தண்டனை வரும் வெள்ளிக்கிழதமை ( 25 தேதி ) அறிவிக்கப்படுகிறது. தீர்ப்பு இன்று வெளியாவதையொட்டி மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இது தொடர்பான படங்கள் செய்திகள் ஆகியவற்றுக்கு அம்மாநில அரசு பத்திரிகைக்கு தடை விதித்துள்ளது.இந்த வழக்கில் ரயிலை எரித்து 59 பேரை கொன்ற சதித்திட்டம் உண்மைதான் என கோர்ட் ஏற்றுக்கொண்டது. இதற்கான ஆதாரங்களை நம்பத்தகுந்ததாக இருந்ததாக கோர்ட் தனது தீர்ப்பில் கூறியிருக்கிறது என அரசு தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் தெரிவித்தார்.


Advertisement
வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thirumurugan - tamilnadu,இந்தியா
23-பிப்-201104:05:06 IST Report Abuse
Thirumurugan அண்ணே செல்வமன்னே நீங்க சும்மா இல்லாம என்னதயவாவது சொல்லி வைக்க அதை பற்றி இங்கே கருத்து சொல்றாங்க எல்லாரும். உலகம் தெரியாத ஆளு நீங்க. இது நடந்த சம்பவத்தன்று நீங்க எங்க இருந்தீங்க? வீட்ல? அலுவலகத்தில? இல்ல குடும்பத்தோட எங்கேயாவது வெளிய போயிட்டீங்கள? அன்னைக்கு அனைத்து தொலைகாட்சிகளும் ஊடகங்களும் நமக்கு காட்டியது என்ன? கொஞ்சம் அங்கே வலியோடும், தீயினால் காயம் வந்து அதை தாங்கி இருகிறீர்கள? அன்றைய தினம் ஒரு கால் முழுவதும் வெந்தும் உயிரோடு தூக்கிவரும் பொது ஒரு பெரியவர் சொன்னாரே " உன்னுடைய இறைவன் உன்னை தண்டிப்பான்" என்று, மறந்து இருப்பீர்கள் உங்களுக்கு தான் அன்று என்ன நடந்தது என்று தெரியாதே. இன்றைக்கு ஒரு புகை படத்தை பார்த்து கருத்து கூறுகிறீர்களே. உங்களுக்காக நான் இறைவனை வேண்டிகொள்கிறேன். அன்றைய சம்பவத்தில் பகுதி உடல்கள் கருகிய நிலையிலும் தன்னை எரித்தவனை இறைவன் மன்னிப்பான் என்று சொன்னார்களே. இவ்வளவு நடந்த பிறகும் அதை ஆராய்ந்து நல்ல தீர்ப்பு வழங்க தானே இத்தனை நாட்கள் எத்தனையோ அதிகாரிகள் எத்தனையோ காவலர்கள் இரவு பகலாக உழைத்து உண்மை வெளி கொண்டு வந்தார்கள். திரு. ஹசன் அவர்களே, உங்களுக்கு கருத்து கூற எனக்கு இரண்டு வரி போதும். 1 நீங்கள் யாரை சிறுபான்மையினர் என்று கூறுகிறீர்கள்? நீங்கள் கூறும் யாரும் இங்கே அவ்வாறு நடத்தப்படவில்லை. நகர் மன்ற உறுப்பினர் முதல் நாட்டின் குடியரசு தலைவர் வரை, நீங்கள் நீங்கள் நீங்கள் தன்னை தானே தாழ்த்தி கொண்டு இருக்கும் திரு. ஹசன் அவர்கள் கூறும் அந்த சிறுபான்மையினர்கள் இருந்திருகிறார்கள். 2 நீங்கள் அன்றைய தின விடியோவை கிடைத்தால் பாருங்கள். அதற்க்கு முன் நீங்கள் புனித உங்கள் மத நூலையும் படியுங்கள்.
Rate this:
Cancel
islam india - tirupur,இந்தியா
22-பிப்-201123:37:34 IST Report Abuse
islam india தவறு யார் செய்தாலும் தவறு தவறு தான், ஆனால் செய்தது யார் என்பதை சட்டம் சரியாக விசாரிக்க வேண்டும் ,
Rate this:
Cancel
krishna - Theni - Riyadh,சவுதி அரேபியா
22-பிப்-201122:11:24 IST Report Abuse
krishna - Theni முஸ்லிமா இருந்தாலும் இந்துவா இருந்தாலும் உயிர் உயிர்தாணு நினச்சு பேசுங்க செல்வம். அப்போதான் நாம கும்புடுற எந்த கடவுளா இருந்தாலும் அவர் நம்மை நேசிப்பார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X