இந்திய படையினர் பதிலடி : பாக்., வீரர்கள் 10 பேர் பலி

Updated : ஜன 05, 2018 | Added : ஜன 04, 2018 | கருத்துகள் (36) | |
Advertisement
ஸ்ரீநகர்: எல்லையில், இந்திய வீரர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாக்., ராணுவ தளவாடங்களை தாக்கி அழித்த, பி.எஸ்.எப்., வீரர்கள், அந்நாட்டு வீரர்கள், 10 பேரை சுட்டுக் கொன்றனர்.ஜம்மு - காஷ்மீரில், முதல்வர், மெஹபூபா முப்தி தலைமையில், பி.டி.பி., - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள, இந்தியா - பாக்., எல்லையோர கிராமங்களில், பாக்., படையினர், தொடர்ந்து அத்துமீறி
இந்தியா,India,  பாகிஸ்தான்,Pakistan,  பிஎஸ்எப்,BSF,  பதுங்கு குழிகள்,பாகிஸ்தான் ராணுவம், Pakistan Army, இந்திய எல்லை பாதுகாப்பு படை,Indian Border Security Force, காஷ்மீர், Kashmir, ஐ.ஜி ராமவதார் ,  IG Ramavathar,

ஸ்ரீநகர்: எல்லையில், இந்திய வீரர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாக்., ராணுவ தளவாடங்களை தாக்கி அழித்த, பி.எஸ்.எப்., வீரர்கள், அந்நாட்டு வீரர்கள், 10 பேரை சுட்டுக் கொன்றனர்.

ஜம்மு - காஷ்மீரில், முதல்வர், மெஹபூபா முப்தி தலைமையில், பி.டி.பி., - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள, இந்தியா - பாக்., எல்லையோர கிராமங்களில், பாக்., படையினர், தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்துகின்றனர். புத்தாண்டில் முதன்முறையாக, நேற்று முன்தினம், சம்பா பகுதியில், பாக்., ராணுவம் தாக்குதல் நடத்தியது.

இதில், எல்லையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த, எல்லை பாதுகாப்பு படை தலைமை காவலர், ஆர்.பி.ஹர்சா, 50, மீது துப்பாக்கிக் குண்டு பாய்ந்தது. பிறந்த நாளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஹர்சா, பாக்., ராணுவத்தின் தாக்குதலில் பலியானார்.


இந்திய வீரர் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும், நம் வீரர்கள் நேற்று முன்தினம் இரவு, விடிய விடிய தாக்குதல் நடத்தினர். இதில், அந்நாட்டு வீரர்கள், 10 பேர் கொல்லப்பட்டனர். இதற்கிடையே, சர்வதேச எல்லையை கடந்து, நம் நாட்டிற்குள் ஊடுருவ முயன்ற, ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endless - Chennai,இந்தியா
05-ஜன-201807:08:58 IST Report Abuse
Endless என்னப்பா இது ? கருத்துக்கள் மொத்தமும் நம்முதவே இருக்கு ? "ஆர்சனிக்" கூட்டமும், "சயனைடு" கூட்டமும் எங்கப்பா...என்ன எல்லாரும் லீவில போயிருக்காங்களா?
Rate this:
Cancel
மிளிர்வன் - AKL,நியூ சிலாந்து
05-ஜன-201800:38:52 IST Report Abuse
மிளிர்வன் ஏதோ ஒரு சாக்கை வைத்து பக்கி'களின் கட்டுமானத்தை தகர்த்து 10 பேரை பொலி போட்டிருக்கிறார்கள்.. இது சில நாட்களுக்கு முன் நம் 4 வீரர்கள் கொல்லப்பட்டதின் தாக்கமும் தான்.. அப்போது ஊளையிட்ட கருத்துகக்கிகள் அவர்கள் மூஞ்சி'யை எங்கே வைத்துள்ளார்கள்? குல்லா'வோடு கழட்டி கக்கத்திலா?
Rate this:
Cancel
தாமரை செல்வன்-பழநி - பழநி,இந்தியா
04-ஜன-201822:11:10 IST Report Abuse
தாமரை செல்வன்-பழநி ஒன்றுக்குப் பத்து சரிதான் இன்னமும் கூடுதலாகப் போட்டுத் தள்ள வேண்டும்.ஜெய் ஹிந்த்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X