பொது செய்தி

இந்தியா

குறைந்தபட்ச இருப்பு தொகையை குறைக்க எஸ்.பி.ஐ., திட்டம்

Added : ஜன 05, 2018 | கருத்துகள் (17)
Advertisement
மினிமம் பேலன்ஸ்,குறைக்க,எஸ்.பி.ஐ.,திட்டம்,SBI,minimum balance

புதுடில்லி : ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, வாடிக்கையாளர்களின் சேமிப்பு கணக்கில், பராமரிக்க வேண்டிய குறைந்தபட்ச இருப்புத் தொகையை குறைப்பது குறித்து, பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.

இவ்வங்கி, 2017 ஏப்., 1ல், வங்கிக் கணக்கில் மாதாந்திர சராசரி இருப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதன்படி, நகர்ப்புறங்களில், குறைந்தபட்சம், 5,000 ரூபாய்; கிராமப்புறங்களில், 1,000 ரூபாய் என, வாடிக்கையாளர்கள், தங்கள் சேமிப்பு கணக்கில் வைத்திருக்க வேண்டும். இத்தொகை குறைந்தால், அபராதம் விதிக்கப்படும்.

இப்படி அபராதம் வசூலித்ததில் மட்டும், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவுக்கு, 8 மாதங்களில், 1,772 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. இது, ஜூலை - செப்., வரையிலான, இரண்டாவது காலாண்டில், இவ்வங்கி ஈட்டிய, 1,581 கோடி ரூபாய் நிகர லாபத்தை விட அதிகம். அத்துடன், செப்., வரையிலான, ஆறு மாதங்களில் ஈட்டிய, 3,586 கோடி ரூபாய் நிகர லாபத்தில், 50 சதவீதமாகும்.

இந்நிலையில், வாடிக்கையாளர்களின் எதிர்ப்பால், அக்டோபரில், நகர்ப்புற வங்கிக் கணக்கின் இருப்புத் தொகை வரம்பு, 3,000 ரூபாயாக குறைக்கப்பட்டது.தற்போது, இத்தொகையை, 1,000 ரூபாயாக குறைப்பது குறித்து, ஸ்டேட் பேங்க் பரிசீலிப்பதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, 'பிரதமரின் ஜன்தன் யோஜனா' திட்டத்தில் துவக்கப்படும் சேமிப்பு கணக்கு, ஓய்வூதியதாரர்கள், சமூக பயனாளிகள் குழந்தைகள் மற்றும் அடிப்படை சேமிப்பு கணக்குகளுக்கு, குறைந்தபட்ச இருப்பில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளதாக, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது.


மிக அதிகம்:

பொதுத் துறையில், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் தான், சேமிப்பு கணக்கிற்கான குறைந்தபட்ச இருப்பு, 3,000 ரூபாய் என, அதிகமாக உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
JeevaKiran - COONOOR,இந்தியா
06-ஜன-201814:49:13 IST Report Abuse
JeevaKiran அபராதமே அதன் லாபத்தை விட அதிகம். இப்படி கீழ் தட்டு மக்களிடம் அடாவடியாக பிடுங்கி கார்போரேட்டுகளுக்கு கொடுக்கவா? SBI ஒரு அரசு வங்கி என்பதை அதனை நிர்வகிப்பவர்கள் நினைவில் கொள்ளணும்.
Rate this:
Share this comment
Cancel
தமிழன் - தூத்துக்குடி,இந்தியா
06-ஜன-201810:12:14 IST Report Abuse
தமிழன் பொதுத்துறை வங்கியான IDBI வங்கியில் குறைந்தபட்ச இருப்புத்தொகை 5000 ரூபாய்.
Rate this:
Share this comment
Cancel
SSrinivasan -  ( Posted via: Dinamalar Android App )
06-ஜன-201808:15:02 IST Report Abuse
SSrinivasan we have to close our account once it is reduced this useless bank earning from common people and fails to collect from business houses. we all should come forward and like revolution in single day more than one crore account to be closed then only this bank management and useless govt. will do something
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X