கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
'ஜெ., மகள்' என உரிமை கோரிய வழக்கு:
அரசு பதில் அளிக்க ஐகோர்ட் அவகாசம்

சென்னை : ஜெயலலிதா மகள் என்பதை நிரூபிக்க, மரபணு பரிசோதனை கோரிய வழக்கின் தகுதி மற்றும் விசாரணைக்கு ஏற்பது குறித்து, அரசு தரப்பு பதில் அளிக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விசாரணையை, பிப்., 3க்கு தள்ளிவைத்துள்ளது.

அ.தி.மு.க, A.D.M.K, ஐகோர்ட், High Court,ஜெயலலிதா,Jayalalithaa , ஜெயலலிதா மகள், Jayalalitha daughter,மரபணு பரிசோதனை, genetic examination,  சென்னை உயர் நீதிமன்றம், Chennai High Court, அம்ருதா , Amruta,லலிதா,  Lalita, ரஞ்சனி , Ranjani, நீதிபதி வைத்தியநாதன், Justice Vaidyanathan,


பெங்களூருவைச் சேர்ந்த, அம்ருதா மற்றும் லலிதா, ரஞ்சனி ஆகியோர், தாக்கல் செய்த மனு: முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் மகள், அம்ருதா. நாங்கள், ஜெயலலிதாவின் குடும்ப உறுப்பினர்கள். மரணமடைந்த ஜெ.,க்கு, வைஷ்ணவ அய்யங்கார் குல வழக்கப்படி, இறுதி சடங்குகளை செய்ய வேண்டும். அதற்கு, அனுமதி அளிக்க கோரியும், போலீஸ் பாதுகாப்பு கோரியும் அளித்த மனுவை பரிசீலிக்கும்படி, அரசுக்கு உத்தரவிட வேண்டும்.


நான், ஜெயலலிதாவின் மகள் என்பது, அரசின் முக்கிய பொறுப்பில் இருக்கும் சிலருக்கு தெரியும். ஜெ., என் தாயார் என்பதை நிரூபிக்கவே, மரபணு பரிசோதனை நடத்தக் கோருகிறேன். அவரது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கம், எனக்கு இல்லை. எனவே, ஜெ., மகள் என்பதை நிரூபிக்க, மரபணு பரிசோதனைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இம்மனு, நீதிபதி, வைத்தியநாதன் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், மூத்த வழக்கறிஞர், வி.பிரகாஷ், அரசு தரப்பில், அட்வகேட் ஜெனரல், விஜய் நாராயண் ஆஜராகினர். அரசு தரப்பில் பதில் அளிக்க, அட்வகேட் ஜெனரல் அவகாசம் கோரினார்.

இதையடுத்து, நீதிபதி, வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவு: இவ்வழக்கில், தீபா மற்றும் தீபக் சார்பில் பதில் அளிக்க, வழக்கறிஞர்கள், சாமி சின்னபிள்ளை, ஜி.தண்டபாணி ஆகியோர், 'நோட்டீஸ்' பெற்று கொள்ள வேண்டும். இந்த வழக்கில் இணைத்து கொள்ள கோரி, ஜோசப் என்பவர் தாக்கல்

Advertisement

செய்த மனுவுக்கு, மனுதாரர் தரப்பில் ஆஜரான, மூத்த வழக்கறிஞர், பிரகாஷ் ஆட்சேபனை தெரிவித்தார். மேலும், ஆவணங்கள் தரப்படவில்லை என்றும் கூறினார்.

இந்த வழக்கு விசாரணை, பிப்., 3க்கு தள்ளி வைக்கப்படுகிறது. வழக்கின் தகுதி, விசாரணைக்கு ஏற்புடையது தானா என்பது குறித்து, வரும், 25ம் தேதிக்குள், அரசு தரப்பிலும், தீபா மற்றும் தீபக் தரப்பிலும் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். அதற்கு, மனுதாரர் தரப்பில் பதில் அளிக்க வேண்டும் என்றால், பிப்., ௨க்குள் தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


Advertisement

வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Richie Rich SYD - Penalty not for others,ஆஸ்திரேலியா
07-ஜன-201801:42:30 IST Report Abuse

Richie Rich SYDஎன்ன வாழ்கை இது? நடிப்பு, அரசியல், சிறை, லஞ்சம்ஊதாரித்தனமாக மக்கள் பணத்தை செலவு செய்து ஒரு கல்யாணம், தன் பெயரில், தண்ணி etc .... அதை ஆராய்வதற்கு ஒரு அரசு, அதற்கு மக்கள் பணம் செலவு ...தமிழ் நாட்டை அடிச்சிக்க முடியாது.. பாவம் தமிழர்கள் ....

Rate this:
karthi - chennai,இந்தியா
06-ஜன-201822:58:16 IST Report Abuse

karthiஅம்ருதா கோரிக்கையை நீதி மன்றம் ஏற்கவேண்டும். அம்ருதா உண்மையிலேயே ஜெயலலிதாவின் மகளாக இருக்க வாய்ப்பு இருக்கிறது. உடனே அவர் கோரிக்கையை ஏற்று விசாரித்து, அவர் ஜெயலலிதாவின் மகளாக இருக்கும் பட்சத்தில், ஜெயலலிதாவின் அனைத்து சொத்துக்களுக்கும் அவரை வாரிசாக்க வேண்டும். இலையென்றால் ஜெயலலிதாவின் அனைத்து சொத்துக்களையும் வேலைக்காரி சசிகலா கும்பல் விழுங்கி விடும். அதற்க்கு நீதி மன்றம் இடம் தர கூடாது.

Rate this:
s.rajagopalan - chennai ,இந்தியா
06-ஜன-201819:32:34 IST Report Abuse

s.rajagopalanபுகைப்படமே அம்ருதா யார் என்று பறை சாத்துகிறாற்போல் இருக்கிறதே ? சந்தேகமே இல்லை அம்ருதா 'ஜெ' யின் மகள்தான்

Rate this:
மேலும் 26 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X