ரஜினி வளர்ச்சி ரசிகர்கள் கையில்!| Dinamalar

சிறப்பு பகுதிகள்

சிந்தனைக் களம்

ரஜினி வளர்ச்சி ரசிகர்கள் கையில்!

Added : ஜன 07, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
ரஜினி ,வளர்ச்சி, ரசிகர்கள், கையில்!

புவியீர்ப்பு விசையை பாடங்களில் படித்ததுண்டு. புவியையே ஈர்க்கும் விசையை படங்களில் தான் பார்க்க முடியும். அந்த ஈர்க்கும் சக்தியின் இனிய பெயர், ரஜினி!துாங்கும், எல்.கே.ஜி., பையனை எழுப்பி, 'உனக்கு பிடித்த பாடல் ஒன்று பாடு' எனக் கேட்டால், 'சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறு' என்பான். படங்களில் அவர் பந்தாடும் சண்டை காட்சிகளை பார்த்து, பல் விழுந்த கிழவர்கள் கூட பயில்வான்கள் ஆனதுண்டு.
சினிமா நடந்து வந்த அரை நுாற்றாண்டு கால பயணத்தை திரும்பிப் பார்த்தால், தமிழகத்தின் ரசிகர் பட்டாளம், ரஜினி என்ற ஒற்றை அச்சாணியையே பற்றி, ராட்டினமாய் சுற்றி சுழன்று வந்திருக்கிறது என்பது தெரியும்.கோரிக்கை மனுவோடு கோவிலுக்குள் நுழையும் இன்றைய மனிதர்கள் மத்தியில், தன் ஆத்ம பரிசோதனைக்காக ஆன்மிகத்தை நாடிச் செல்லும் நல்ல மனிதர் ரஜினி.
கனவுத் தொழிற்சாலையாம் சினிமாவில், ஏகபோக அதிபராக மாறி கோடிக்கோடியாக சம்பாதிக்கும் செல்வந்த நிலையிலும், கோவிலுக்கு போவதையும், கடவுளை கும்பிடுவதையும் அவர் குறைத்து கொள்ளவில்லை.தன் படங்களுக்கு, ராகவேந்திரா, அருணாச்சலம், படையப்பா என, தெய்வங்கள் பெயரையே சூட்டுகிறார். அவரது கல்யாண மண்டபத்துக்கும்,ராகவேந்திரர் பெயரையே வைத்திருக்கிறார்.
ஒரு படத்தின் ஆரவாரமான, ஆர்ப்பாட்டமான, 'ஷூட்டிங்' முடிந்ததும், இமயமலைக்கும், அமைதியான ஆசிரமங்களுக்கும் சென்று வரும் பழக்கத்தை கொண்டிருக்கிறார். எப்போதும் நெற்றி நிறைய திருநீறு பூசி, பக்திப் பழமாக காட்சி தருகிறார்.நடிகர்களில் பெரும்பாலோர் மறுபக்கம், மர்மம் நிறைந்ததாக தான் இருக்கும். ஆனால், இவரின் வாழ்க்கை வரலாற்றின் எல்லா பக்கமும், தர்மம் நிறைந்ததாகவே காணப்படுகிறது.
ஒவ்வொரு பிறந்த நாளின் போதும், ஏழை ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்து, சீர் வரிசையும் செய்து வருகிறார். ராகவேந்திரா அறக்கட்டளை, அருணாச்சலா கல்வி அறக்கட்டளையை ஏற்படுத்தி, ஜாதி, மத பேதம் பாராமல், ஏழை மாணவர்களுக்கு உதவி வருகிறார்.சக நடிகர்கள் மற்றும் நண்பர்களின் கஷ்ட காலத்தில், முடிந்த வகையில் உதவியுள்ளார் என்பதை, தமிழ் திரையுலகம் அறியும்.
எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக, படையப்பா படத்தின் வெற்றி விழா மேடையில், 10 கோடி ரூபாய் மதிப்புள்ள, தன், ராகவேந்திரா கல்யாண மண்டபத்தை, நாட்டுக்கு அர்ப்பணித்தவர் அவர்.ஆயிரம் போராட்டம் நடத்தி, நுாறு முறை சிறை சென்று, தலைவர்களில் சிலர் சாதிக்க முடியாததை, சினிமா நட்சத்திரங்கள் அரசியலில் நுழைந்த உடனேயே சுலபத்தில் சாதித்து விடுகின்றனர்.
அதனால், சினிமா நட்சத்திரங்கள் அரசியலுக்கு வரக் கூடாது என, சொல்வதில் எந்த நியாயமும் இல்லை. இந்நாட்டில் வாழும் ஒவ்வொரு குடிமகனும் ஓட்டுப் போட உரிமை பெற்றிருக்கும் போது, நடிகனும் நாட்டின் பிரஜைகளில் ஒருவன் தானே!இன்றுள்ள அரசியல்வாதிகளில் பெரும்பாலோர், அரசியலுக்கு பல்வேறு கீழ்த்தரமான, மிக அசிங்கமான அர்த்தங்களை கற்பித்து கொண்டிருக்கின்றனர் என்பது வேறு விவகாரம்.
அதுபோல, தங்கள் சினிமா கவர்ச்சியை மட்டுமே மூலதனமாக வைத்து, அரசியல் அரங்கில் அங்கீகாரம் பெற முயற்சிக்கும் நடிகர்கள் தான், மக்களுக்கு துரோகம் செய்கிறவர்களாவர்!தனிக்கட்சி தான் என, அவர் அழுத்தமாக தீர்மானித்து விட்டதால், சமூக மாற்றத்திற்கு என்ன கொள்கைகள் வைத்துள்ளார் என்பதை, கட்சி துவங்கும் முன், மக்களின் பார்வைக்கு வைக்க வேண்டும்.
தமிழக அரசியலில் புதிய மாற்றங்களை வரவேற்று தான் பார்ப்போமே!ரஜினி போன்ற நடிகர் மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்படாமல் தடுக்க விரும்பினால், ரசிகர் மன்றங்கள், பால்குடம், கற்பூரம் போன்ற சிறுபிள்ளைத்தனமான செயல்களை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும்.இது மாதிரியான செயல்கள், மக்களிடையே வெறுப்பையும், கோபத்தையும் தான் வளர்க்கும் என்பதை ரசிகர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
அவர்கள் ஒவ்வொருவரின் பணிகளும், செயல்பாடுகளும் தான், ரஜினியை நாடாளக்கூடிய தலைவராக கட்டி எழுப்பும் உண்மையான காரணியாக அமைய முடியும்.
எல்.பிரைட் இ - மெயில்:brightdvk@gmail.com

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamizhan kanchi - Kanchipuram,இந்தியா
08-ஜன-201811:12:42 IST Report Abuse
Tamizhan kanchi குறை ஒன்றுமில்லை நிறை என்று நிஜ வாழ்க்கை கொண்டுள்ள ரஜினி சார் அரசியல் பிரவேசம் வரவேற்கபட வேண்டும்...வாருங்கள்.. ஆதரிக்கிறோம்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X