"2ஜி' விவகாரத்தில் நடவடிக்கை விவரம்: கோர்ட்டில் சி.பி.ஐ., அறிக்கை தாக்கல்

Added : பிப் 22, 2011 | கருத்துகள் (3) | |
Advertisement
புதுடில்லி: ஸ்பெக்ட்ரம் "2ஜி' முறைகேடு குறித்த வழக்கில், விசாரணையின் தற்போதைய நிலை குறித்து, டில்லி கோர்ட்டில், சி.பி.ஐ., சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஸ்பெக்ட்ரம் "2ஜி' ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு குறித்து, முன்னாள் தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ராஜாவிடம் விசாரணை நடத்த வலியுறுத்தி, ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணியசாமி, டில்லி சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில்
"2ஜி' விவகாரத்தில் நடவடிக்கை விவரம்: கோர்ட்டில் சி.பி.ஐ., அறிக்கை தாக்கல்

புதுடில்லி: ஸ்பெக்ட்ரம் "2ஜி' முறைகேடு குறித்த வழக்கில், விசாரணையின் தற்போதைய நிலை குறித்து, டில்லி கோர்ட்டில், சி.பி.ஐ., சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


ஸ்பெக்ட்ரம் "2ஜி' ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு குறித்து, முன்னாள் தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ராஜாவிடம் விசாரணை நடத்த வலியுறுத்தி, ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணியசாமி, டில்லி சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தொடர்பான முந்தைய விசாரணையின் போது, "ஸ்பெக்ட்ரம் முறைகேட்டால், நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக சுப்ரமணியசாமி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அந்த கோணத்திலும் விசாரணை நடத்தப்படுகிறதா' என, சி.பி.ஐ.,யிடம் கோர்ட் விளக்கம் கேட்டிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு விசாரணையின் தற்போதைய நிலை குறித்து சி.பி.ஐ., சார்பில் நேற்று கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.


அதில் கூறப்பட்டுள்ளதாவது: ஸ்பெக்ட்ரம் முறைகேடு குறித்த வழக்கு பதிவு செய்யபட்டவுடன், தொலைத்தொடர்பு துறை அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சி.பி.ஐ., சோதனை நடத்தியுள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் உட்பட பலருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்த சோதனைகளின் போது, ஏராளமான ஆவணங்களை சி.பி.ஐ., கைப்பற்றியுள்ளது. இது தொடர்பாக பலரிடம் விசாரணையும் நடத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கில், ராஜா உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஸ்பெக்ட்ரம் முறைகேட்டால், உள்நாட்டு பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக சுப்ரமணியசாமி புகார் தெரிவித்துள்ளதாக கூறப்படுவது குறித்த விவரங்களை சி.பி.ஐ., அறிந்திருக்கவில்லை. இது தொடர்பான அவரின் புகார் மனுவின் நகல்கள் எங்களுக்கு கிடைக்கவில்லை. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சுப்ரமணியசாமி தரப்பில், "ஸ்பெக்ட்ரம் "2ஜி' முறைகேடு தொடர்பாக ராஜா மீதும் மற்றவர்கள் மீதும் தொடர்ந்துள்ள வழக்கையும், நான் தனியாக அளித்துள்ள புகார் மீதான வழக்கையும் ஒன்றாக சேர்த்து விசாரிப்பதில் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. பொதுமக்கள் நலனுக்காகவே நான் உழைக்கிறேன்' என கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. இதன்பின், நீதிபதி பிரதீப் சத்தா கூறுகையில், "ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஷாகித் பால்வாவுக்கு சொந்தமாக, குஜராத்தின் பலான்பூரில் சட்ட விரோதமாக விமான நிலையம் செயல்பட்டு வருவதாக சுப்ரமணியசாமி புகார் தெரிவித்துள்ளார். அதுகுறித்தும் தகவல் தரலாம் என நீதிபதி தன் உத்தரவில் குறிப்பிட்டிருக்கிறார்.


Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kalyanakrishnan R - Chennai,இந்தியா
23-பிப்-201104:56:27 IST Report Abuse
Kalyanakrishnan R சுப்ரமணிய சுவாமி போன்றோரால்தான் இனனும் நம் நாட்டின் எதிர்காலம் குறித்த நம்பிக்கை வைக்கமுடிகிறது. அவர் நீண்ட ஆயுளுடனும், ஆரோக்யத்துடனும் வளர்ச்சி பெற வேண்டும். அவரது முயற்ச்சிகள் பேரியக்கமாக மாற வேண்டும்.
Rate this:
Cancel
Chandra - Denver,யூ.எஸ்.ஏ
23-பிப்-201100:17:56 IST Report Abuse
Chandra The Telecom companies, which allegedly benefited in 2G spectrum allocation, on Tuesday questioned the findings of the CAG report and contended in the Supreme Court that the licences issued to them cannot be cancelled on its basis. The six companies — Videocon, Uninor, Idea, Shyam Telelink Ltd and Aircel — filed their affidavits in response to the apex court’s notices. Electronic company Videocon, in its 16-page affidavit, submitted the petition seeking cancellation of its licence was based on “incorrect” facts and it should be dismissed. “CAG report contains flawed and misconceived findings regarding its eligibility in getting 2G spectrum,” Videocon said. The company pleaded that the government has already served a notice for cancellation of licence and it has filed a detailed response to the Centre. Uninor in its 29-page affidavit, said the “CAG report was made without seeking any clarification and explanation from it and so adverse inference cannot be drawn against it on the basis of the report.” All Techinical analyst knows, this is for benefit of the people. Only medias are creating big issue. At the end, CBI would come up with a report that no illegal transaction and all will be set to free..
Rate this:
Cancel
appu - madurai,இந்தியா
23-பிப்-201100:03:36 IST Report Abuse
appu நாடகத்தின் நடுபகுதியோ? நீதிபதி அய்யாவும் சி பி ஐ ஐயாவும் ரொம்ப பவ்யமா பகிர்துகிறத லைவான பாணியில் வாசகர்களுக்கு கொடுத்த தினமலருக்கு நன்றி...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X