பாபா முத்திரை யாருக்கு சொந்தம்? - கிளம்பியது புது சர்ச்சை| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பாபா முத்திரை யாருக்கு சொந்தம்? - கிளம்பியது புது சர்ச்சை

Added : ஜன 08, 2018 | கருத்துகள் (40)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
பாபா முத்திரை,Baba logo, ரஜினி மக்கள் மன்றம்,rajini makkal mandram, நடிகர் ரஜினிகாந்த், Actor Rajinikanth,யாஷ் மிஸ்ரா,Yash Mishra, ஆன்மீக அரசியல் ,aanmeega arasiyal ,  ரஜினி அரசியல், Rajini Politics, ரஜினி மன்றம், ,rajini mandram, Spiritual Politics,

புதுடில்லி : ரஜினி மக்கள் மன்றத்தின், 'பாபா முத்திரை' சின்னம், தங்கள் நிறுவனத்தின், 'லோகோ'வைப் பார்த்து, காப்பி அடிக்கப்பட்டு உள்ளதாக, மும்பையைச் சேர்ந்த, ஒரு நிறுவனம் கூறியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப் போவதாக சமீபத்தில் அறிவித்ததில் இருந்தே, அவரது, 'பாபா முத்திரை' சின்னமும் பிரபலமாகி வருகிறது.


சின்னம்

அவரது மக்கள் மன்றத்துக்கு கூட, அதையே தான், சின்னமாக பயன்படுத்துகிறார். கடந்த, 2002ல் வெளியான, பாபா திரைப்படத்துக்கு பின், ரஜினி ரசிகர்கள் இந்த சின்னத்தை அதிகம் பயன்படுத்த துவங்கினர். இந்நிலையில், மும்பையைச் சேர்ந்த, 'வொக்ஸ்வெப்' என்ற, சமூக ஊடக நிறுவனம், தங்கள் மொபைல் போன், செயலிக்கு, இந்த பாபா முத்திரையை தான், 'லோகோ'வாக வைத்து உள்ளது.


பதில் இல்லை

இந்த நிறுவனத்தின் உரிமையாளர் யாஷ் மிஸ்ரா, இதுகுறித்து, நடிகர் ரஜினி தரப்புக்கு எழுதியுள்ள கடிதத்தில்,'ஒன்றரை ஆண்டுகளுக்கு முன், எங்கள் நிறுவனத்தின் லோகோவாக, இதை பயன்படுத்துகிறோம்' என, தெரிவித்து உள்ளார்.

ஆனால், ரஜினி தரப்பிலிருந்து, இதுவரை பதில் எதுவும் வரவில்லை என, அந்த நிறுவனம் தெரிவித்து உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (40)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vadamalai Sathyamurthy - Chennai,இந்தியா
08-ஜன-201822:41:28 IST Report Abuse
Vadamalai Sathyamurthy சைவ சித்தாந்த நூற்பதிப்பு கழகம் வளையாபதி அடிகள் நூலில் சிவபூஜை முத்திரைகளில் 64 நிலைகள் படங்களுடன் வெளியிடப்பட்டுள்ளன..மோதிர விரல் மற்றும் நடுவிரல் இரண்டையும் கட்டைவிரலால் தொடும் முத்திரைக்கு பெயர் "மிருக முத்திரை" என்று விளக்கப்பட்டுள்ளது.. ஆகம நூல்களில் உள்ள முத்திரைகளுக்கெல்லாம் யாரும் சொந்தம் கொண்டாட முடியாது.. ஐம்புலன்களின் ஆசைகளை முற்றிலுமாக தவிர்ப்பதும் எவர் மீதும் தனிப்பட்ட பாசம் வைக்கா திருப்பதும் தான் உண்மையான யோகிகள் கடைபிடிக்கும் ஆண்மீகம்.. உண்மையான ஆண்மீக வாதியோ யோகியே இன்று யாராவது இருப்பார்களேயானால் அவர் அண்ட சராசரங்களை படைத்த பகவானுக்கு நிகரானவர் என்பதில் ஐயமில்லை.. பிறவி ஒருமுறைதான் .இறப்பது நிச்சயம்..யாராக இருந்தாலும் ? " ஒன்றே குலம் ஒருவனே தேவன்" .என்ற திருமூலரின் மந்திரம் உலக மாந்தரால் உணரப்படும் நாள் வருமா ?
Rate this:
Share this comment
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
08-ஜன-201817:32:37 IST Report Abuse
இந்தியன் kumar இந்த நிறுவனம் ரஜினியை வைத்து தன்னை விளம்பரப்படுத்தி கொள்கிறது.
Rate this:
Share this comment
Cancel
mindum vasantham - madurai,இந்தியா
08-ஜன-201817:21:01 IST Report Abuse
mindum vasantham Zeeman mattum Stalin pathra maththu thangam
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X