பொது செய்தி

இந்தியா

கிரிக்கெட்டால் சமாதானமான காரோ, ரப்பா பழங்குடியினர்

Updated : பிப் 23, 2011 | Added : பிப் 22, 2011 | கருத்துகள் (5)
Advertisement

கவுகாத்தி: கிரிக்கெட் போட்டியின் மூலம், மேகாலயா மற்றும் அசாம் மாநிலத்தை சேர்ந்த காரோ, ரப்பா பழங்குடியின மக்களிடையே, எல்லைப் பாதுகாப்புப் படையினர் சமாதானம் ஏற்படுத்தியுள்ளனர்.

மேகாலயா மாநிலத்தை சேர்ந்த காரோ பழங்குடியினருக்கும், அசாமில் உள்ள ரப்பா பழங்குடிகளுக்கும் இடையே கடந்த டிசம்பரில் இனக் கலவரம் வெடித்தது. இதில், குடியிருப்புகளும், வணிக வளாகங்களும் தீக்கிரையாக்கப்பட்டன; 12 பேர் கொல்லப்பட்டனர்; 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து, அகதிகளாகினர். இதையடுத்து, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, எல்லைப் பாதுகாப்புப் போலீசார் குவிக்கப்பட்டனர். தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளால், வன்முறைச் சம்பவங்கள் தடுக்கப்பட்டாலும், இரு தரப்பினரும் சமாதானம் அடையவில்லை. இதைக் கவனித்த எல்லைப் பாதுகாப்புப் படையினர், இரு தரப்புக்கும் இடையில் கிரிக்கெட் போட்டி நடத்தி, பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.


இது குறித்து பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் கூறியதாவது: பெரும்பாலான இந்திய மக்கள் கிரிக்கெட்டை விரும்புகின்றனர். குறிப்பாக, வட மாநிலத்தவர், கிரிக்கெட்டை, எல்லைகள் கடந்த ஒரு விளையாட்டாக பார்க்கின்றனர். கிரிக்கெட்டுக்கு மக்களிடம் உள்ள செல்வாக்கை பயன்படுத்தி, ரப்பா மற்றும் காரோ பழங்குடியினர் இடையில் சமாதானம் ஏற்படுத்த முடிவு செய்தோம். அதன்படி, காரோ மற்றும் ரப்பா இனத்தவர்களில் இருந்து இரண்டு அணிகளை தேர்வு செய்து, கடந்த வாரம் நடந்த மாவீரர் தின கொண்டாட்டத்தில், "டென்10' போட்டி ஒன்றை நடத்தினோம். இனக் கலவரத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட மெண்டிபதார் பகுதியிலேயே, போட்டி நடந்தது. இதில், ஐபிஎல் போட்டிகளில் வரும் "சியர் லீடர்ஸ்' போன்று, இரு தரப்பில் இருந்தும் தேர்வு செய்யப்பட்ட பெண்கள் நடனமாடி வீரர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் உற்சாகம் அளித்தனர். பாலிவுட் நடிகர் அமீர்கான் நடிப்பில், வெளி வந்த "லகான்' திரைப்படம் தான் இதற்கு காரணம். போட்டி முடிந்த பின், இருதரப்பு மக்களும் சமாதான உறுதி எடுத்துக் கொண்டனர். இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raghu Nandan Muthukumar - Chennai,இந்தியா
23-பிப்-201110:41:10 IST Report Abuse
Raghu Nandan Muthukumar இது நல்ல யோசனையா இருக்கு - பாராட்டுகள்
Rate this:
Share this comment
Cancel
Mahesh Kumar - chennai,இந்தியா
23-பிப்-201110:20:24 IST Report Abuse
Mahesh Kumar விளையாட்டு சமாதானத்துக்கு பயன்பட்டத நெனச்சா சந்தோசமா இருக்கு :) வாழ்த்துக்கள் .
Rate this:
Share this comment
Cancel
Ranjith Rajan - CHENNAI,சிங்கப்பூர்
23-பிப்-201107:07:05 IST Report Abuse
Ranjith Rajan சூப்பர். வெரி குட் கமெண்டோஸ்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X