பொது செய்தி

தமிழ்நாடு

மின் பற்றாக்குறையால் விவசாயிகள் புலம்பல்

Updated : பிப் 23, 2011 | Added : பிப் 22, 2011 | கருத்துகள் (8)
Share
Advertisement

மின் பற்றாக்குறை காரணமாக விவசாயத்துக்கு வழங்கும் மின்சாரத்தின் அளவு குறைந்ததாலும், எப்போது மின்சாரம் வரும் என தெரியாததாலும், இரவில் வயல் வரப்புகளில் தூங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதால், விவசாயிகள் விரக்தியடைந்துள்ளனர்.

தமிழகத்தில், 18 லட்சத்து 80 ஆயிரம் விவசாய மின் இணைப்புகள் உள்ளன. விவசாயத்துக்கு அரசு நாள்தோறும், 12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கியது.மின் உற்பத்தியை விட தேவை அதிகரித்ததால், இரு ஆண்டாக விவசாயத்துக்கு வழங்கும் மும்முனை மின்சார அளவு நாள்தோறும், 10 மணிநேரமாக குறைக்கப்பட்டது. கோடைகாலம் துவங்கி விட்டதால், தற்போது மின் நுகர்வு மேலும் அதிகரித்துள்ளது. நாள்தோறும் சராசரியாக, 1,700 மெகாவாட் மின்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.பற்றாக்குறையை சமாளிக்க, இரண்டு மணிநேரமாக இருந்த வீடுகளுக்கான மின்தடையை, வாரியம் கடந்த ஒரு வாரமாக மூன்று மணிநேரமாக அதிகரித்துள்ளது. அதுபோல, விவசாயத்துக்கான மின் வினியோக அளவையும் குறைத்து விட்டது. அந்த மின்சாரமும் எப்போது வரும் என தெரியாததால், வழக்கமாக இரவில் வீடுகளில் தூங்கும் விவசாயிகள், மும்முனை மின்சாரத்தை எதிர்பார்த்து வயல்களிலும், வரப்பிலும் காத்திருக்கின்றனர்.


இது குறித்து கொளத்தூரை சேர்ந்த, செல்லியம்மன் உழவர் மன்ற ஒருங்கிணைப்பாளர் சுந்தரம் கூறியதாவது:எங்கள் பகுதியில் விவசாய பம்ப் செட்கள் அதிகமாக உள்ளன. விவசாயிகள் மஞ்சள், வாழை போன்ற பயிர்களை சாகுபடி செய்துள்ளனர். கடந்த மாதம் வரை தினமும் பகலில், 6 மணி, இரவில் 4 மணி நேரம் மும்முனை மின்சாரம் தொடர்ச்சியாக வழங்கப்பட்டது. அதனால், விவசாயிகள் எளிதாக கிணற்றில் நீர் இறைக்க முடிந்தது.ஆனால், கடந்த ஒரு வாரமாக மும்முனை மின்சாரம் பகலில் சில சமயங்களில் மூன்று மணிநேரம் வினியோகம் செய்யப்படுகிறது. இரவில் எப்போது மும்முனை மின்சாரம் வரும் என்றே தெரியவில்லை. திடீரென ஒரு மணிநேரம் வருகிறது; பின்பு ரத்து செய்யப்படுகிறது. மீண்டும் நள்ளிரவிலோ அல்லது அதிகாலையிலோ மின்சாரம் வருகிறது.மும்முனை மின்சாரம் எப்போது வரும் என்பது தெரியாததால் விவசாயிகள் பம்ப் செட் அருகிலும், வரப்பிலுமே இரவு முழுவதும் விழித்து கொண்டிருக்க வேண்டியுள்ளது.இவ்வாறு சுந்தரம் கூறினார்.


- நமது சிறப்பு நிருபர் -


Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sasi - kuwait,குவைத்
23-பிப்-201119:40:27 IST Report Abuse
Sasi நீங்க இலவசந்தான கேட்டீங்க, மின்சாரமா கேட்டீங்க. எங்களுக்கு எதுவுமே சும்மா வேண்டாம் னு சொல்லியிருந்தா இப்ப நீங்க வரப்புகள்ளே தூங்க வேண்டாமில்ல??
Rate this:
Cancel
கிராமத்தான் - kattur,இந்தியா
23-பிப்-201115:03:53 IST Report Abuse
கிராமத்தான் பத்து வருடங்களுக்கு முன்னால் 2500 கோடி ரூபாய் நஷ்டத்தில் இருந்த குஜராத் மின்சார வாரியம் தற்போது 500 கோடி ரூபாய் லாபத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது. இத்தனைக்கும் மின்சாரக் கட்டணம் கடந்த 10 ஆண்டுகளாக உயர்த்தப்படவில்லை. “ஜோதிக்ராம் யோஜனா” என்ற திட்டத்தின் கீழ் குஜராத்தில் உள்ள 18000 கிராமங்களுக்கும் 24 மணிநேரமும் 3 Phase மின்சாரம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தை அமல்படுத்தச் சொல்லி இந்திய அரசு மற்ற மாநில அரசுகளுக்கு பரிந்துரைத்திருக்கிறது. பெரும்பான்மையான மாநில அரசுகள் விவசாயிகளுக்கு இலவசமாக மின்சாரம் தருவதாகச் சொல்லிக்கொண்டு, பல நேரங்களில் மின்தடை மூலம் விவசாய உற்பத்தியைப் பாழ்படுத்திக் கொண்டிருக்கும்போது, மோடி அரசு 24 மணிநேரம் மின்சாரமும் பாசனத்திற்குத் தங்குதடையின்றி நீரும் கொடுத்து, மின்கட்டணம் கட்டாத விவசாயிகளுக்கு அபராதம் விதிக்கிறது. குஜராத்தில் 185 சிற்றாறுகளும் 8 அழியாத ஆறுகளும் உள்ளன. இவற்றை இணைத்ததன் மூலம் நிலத்தடி நீர் பெருமளவில் அதிகரித்துள்ளது. மோடி தலைமையேற்று கடந்த 10 ஆண்டுகளில் விவசாயப் பொருளாதார வளர்ச்சி 9% ஆக (தேசிய சராசரி 2% தான்) உயர்ந்துள்ளது.
Rate this:
Cancel
boopathi - Salem,இந்தியா
23-பிப்-201111:59:55 IST Report Abuse
boopathi இதுவே விவசாயியின் நிலைமை ......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X