தியேட்டர்களில் தேசிய கீதம் கட்டாயமில்லை

Updated : ஜன 10, 2018 | Added : ஜன 09, 2018 | கருத்துகள் (29)
Advertisement
தேசிய கீதம், National Anthem, சினிமா தியேட்டர்கள், Cinema Theaters, சுப்ரீம் கோர்ட், Supreme Court,இளைஞர்கள் , Youth,மாணவர்கள்,Students,  மத்திய அரசு , Central Government, மத்திய உள்துறை அமைச்சகம் , Ministry of Home Affairs,

புதுடில்லி: 'சினிமா தியேட்டர்களில், திரைப்படம் திரையிடுவதற்கு முன், தேசிய கீதம் இசைப்பது கட்டாயமல்ல' என, உச்ச நீதிமன்றம், புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த, 2016 நவம்பரில், உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், 'சினிமா தியேட்டர்களில், திரைப்படம் திரையிடுவதற்கு முன், தேசிய கீதத்தை இசைக்க வேண்டும்; அப்போது, ரசிகர்கள் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும்' என, கூறப்பட்டிருந்தது.
கடந்தாண்டு அக்டோபரில், ஷ்யாம் நாராயண் என்பவர், உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த பொதுநல வழக்கில், 'பொழுது போக்கிற்காகவே, தியேட்டர்களுக்கு மக்கள் செல்கின்றனர். 'தங்கள் நாட்டுப்பற்றை வெளிப்படுத்த, தேசிய கீதம் இசைக்கப்பட்டு, அப்போது, மக்கள் எழுந்து நிற்க தேவையில்லை. விரும்பிச் செய்வது வேறு; அதை கட்டாயப்படுத்துவது வேறு. 'தேசப்பற்றை மக்கள், தங்கள் தோள்பட்டை யில் சுமந்து செல்ல வேண்டாம்' என, நீதிபதிகள் கருத்து தெரிவித்திருந்தனர்.

தியேட்டர்களில் தேசிய கீதத்தை இசைப்பது கட்டாயமில்லை என தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு உத்தரவிட்டது

இந்நிலையில், இந்த வழக்கு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன், நேற்று முன்தினம், விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான, அட்டர்னி ஜெனரல், கே.கே.வேணுகோபால், 'தியேட்டர்களில் தேசிய கீதம் இசைப்பதற்கு, மக்கள் எழுந்து நிற்பது தொடர்பாக ஆய்வு செய்ய, மத்திய அரசு, 12 உறுப்பினர் குழுவை அமைக்க உள்ளது. 'அக்குழு, ஆறு மாதங்களில் அறிக்கையை தாக்கல் செய்யும். அதுவரை, 2016 நவ., 30ல், உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பிப்பதற்கு முந்தைய நிலை தொடர்வது பற்றி பரிசீலனை செய்ய வேண்டும்' என்றார்.
இதை ஏற்ற நீதிபதிகள், 'மத்திய அரசு அமைக்கும் குழு, அறிக்கை தாக்கல் செய்யும் வரை, தியேட்டர்களில் தேசிய கீதம் இசைப்பது கட்டாயமல்ல. 'மேலும், தியேட்டர்களில் தேசிய கீதம் இசைக்கும் போது, மாற்றுத்திறனாளிகளுக்கு அளிக்கப்பட்ட விதிவிலக்கு, மத்திய அரசு நியமிக்கும் குழு தக்க முடிவு எடுக்கும்வரை தொடரும்' என, உத்தரவிட்டனர்.

Advertisement
வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
thonipuramVijay - Chennai,இந்தியா
10-ஜன-201800:06:00 IST Report Abuse
thonipuramVijay சினிமா தியேட்டர் என்பது கூத்தடிக்கும் இடம் ...அங்கே போய் தேசியகீதத்தை ஒலித்து தான் நாட்டுப்பற்றை வழக்கவேண்டுமேயென்று எப்படி இந்த நீதிமான்களுக்கு தோன்றியதோ....கூறுகெட்ட மான்கள்
Rate this:
Share this comment
Cancel
Siva - Aruvankadu,இந்தியா
09-ஜன-201823:32:11 IST Report Abuse
Siva ஸ்மார்ட் போன் டேப் இன்னும் பல நவீன தொழில் நுட்பம் வந்து விட்டது.சனிமாவாம்.தியேட்டராம். திருந்தி விட்டோம் நாங்கள் பலநாட்கள் முன்னே.
Rate this:
Share this comment
Cancel
09-ஜன-201822:39:08 IST Report Abuse
kulandhaiKannan Issues like singing National Anthem, Jallikattu, beef ban are the creation of courts. Hereafter Governments should ask the Courts to apply its mind, before implementing its orders
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X