அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
தயார்!
தமிழகத்தில் தொழில் துவங்க 15 நிறுவனங்கள்
ரூ.25 ஆயிரம் கோடி முதலீடு வரும் என்கிறார் சம்பத்

சென்னை : ''தமிழகத்தில், 25 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில், தொழில்கள் துவங்க, 15 நிறுவனங்கள் தயாராக உள்ளன,'' என்று, சட்டசபையில், தொழில் துறை அமைச்சர், எம்.சி.சம்பத் தெரிவித்தார்.

 தமிழகம்,Tamil Nadu,  தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத்,
Industry Minister MC Sampath, அமைச்சர் பாண்டியராஜன், Minister Pandiarajan, அ.தி.மு.க.,AIADMK, துணை முதல்வர் பன்னீர்செல்வம்,Deputy Chief Minister Panneerselvam,  பழனிவேல் தியாகராஜன், Palanivel Thiyagarajan, தமிழ்நாடு,TN,


சட்டசபையில் நடந்த விவாதம்:


தி.மு.க., - பழனிவேல் தியாகராஜன்: வரும் ஆண்டுகளில், எந்த மாதிரியான திட்டங்களை, அரசு நிறைவேற்ற உள்ளது; அரசின் கொள்கை என்ன என்ற விபரங்கள், கவர்னர் உரையில் இடம்பெற வேண்டும். இடம் பெறவில்லைஆனால், கவர்னர் உரையில், ஒரு சில திட்டங்கள் மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளன. பெரிய திட்டங்கள் எதுவும், கவர்னர் உரையில் இடம்பெறவில்லை.

அமைச்சர் பாண்டியராஜன்: மாநிலத்தில் உள்ள, 26 மாவட்டங்களில், தொழில் முனைதல் மற்றும் ஊரகத் தொழில்களை ஊக்குவிப்பதற்காக, உற்பத்தியாளர் கூட்டமைப்பு நிறுவனங்கள் துவக்கப்பட உள்ளன. இத்திட்டத்திற்கு, உலக வங்கி, 6,400 கோடி ரூபாய் வழங்க முன்வந்துள்ளது. இதுவரை, எந்த கவர்னர் உரையிலும் இடம்பெறாத அளவிற்கு, மிகப்பெரிய தொகையில் செயல்படுத்தப்பட உள்ள இந்த திட்டம், தற்போது இடம்பெற்றுள்ளது.

பழனிவேல் தியாகராஜன்: கவர்னர் உரையில் உள்ள குறைபாடுகளை, நிறைகளை, ஆளும்கட்சி, எதிர்க்கட்சி பாரபட்சமின்றி, சுட்டிக்காட்ட வேண்டும். இங்கு, ஆளும் கட்சியினர் கருத்துக்கள் எதுவும் கூறுவதில்லை. அதேபோல், கொள்கை ரீதியாக, என்ன மாற்றங்கள் செய்ய வேண்டும் என, திருத்தம் கொடுக்க வேண்டும். இங்கு பெரும்பாலும், கழிப்பறை வேண்டும்; ஆரம்ப சுகாதார நிலையம் வேண்டும் என்றே, திருத்தம் கொடுக்கின்றனர். நான் கொள்கை ரீதியாக, திருத்தங்கள் கொடுத்துள்ளேன்.

தி.மு.க., ஆட்சியில், சட்டசபை கூட்டம், அதிக நாட்கள் நடந்துள்ளது. அ.தி.மு.க., ஆட்சியில், குறைந்த நாட்களே நடக்கிறது. சட்டசபை கூட்டத்தை, அதிக நாட்கள் நடத்த, அரசு முன்வர வேண்டும்.

துணை முதல்வர், பன்னீர்செல்வம்: சட்டசபை கூட்டம், காலை, 10:00 மணிக்கு துவங்கி, 2:00 மணிக்கு முடிய வேண்டும். நேற்று முன்தினம், மாலை, 4:45 மணி வரை கூட்டம் நடந்தது. எனவே, நேரத்தை கணக்கிட்டு பார்த்தால், அ.தி.மு.க., ஆட்சியில் தான், அதிக நேரம் கூட்டம் நடந்துள்ளது.

பழனிவேல் தியாகராஜன்: நீங்கள் இவ்வாறு கூறுவீர்கள் என தெரிந்தே, மணி கணக்கையும் எடுத்து வைத்துள்ளேன். அதன்படி பார்த்தாலும், தி.மு.க., ஆட்சியில் தான் அதிக நேரம் கூட்டம் நடந்துள்ளது.

துணை முதல்வர்: தேவைப்பட்டால் புள்ளிவிபரம் எடுத்து வருகிறேன்.

பழனிவேல் தியாகராஜன்: உயர் கல்வியில், மாணவர் சேர்க்கை, 48 சதவீதமாக உயர்ந்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. அதேநேரம், பட்டப்படிப்பு முடிப்போருக்கு, வேலை வாய்ப்பு குறைவாக உள்ளது. அவர்கள், வேலைவாய்ப்பு பெறும் வகையிலான கல்வியை தர வேண்டும்.

அமைச்சர் பாண்டியராஜன்: படித்து முடித்த இளைஞர்கள், வேலைவாய்ப்பு பெறும் வகையில், அவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது.
வேலைவாய்ப்பை உருவாக்க, அரசு மேற்கொண்டுள்ள முயற்சிகள் குறித்த விபரங்கள், கவர்னர் உரையில், 30ம் பக்கம் இடம் பெற்றுள்ளன.


குறைந்துள்ளது


பழனிவேல் தியாகராஜன்: தமிழக அரசுக்கு வருவாய் பற்றாக்குறை அதிகரித்துள்ளது; நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தமிழகத்திற்கு வரும் அன்னிய முதலீடு குறைந்துள்ளது; தொழில் வளர்ச்சி குறைந்துள்ளது.

Advertisementஅமைச்சர் எம்.சி.சம்பத்: ஓராண்டில் வரும் முதலீட்டை வைத்து, தொழில் வளர்ச்சியை கணக்கிடக் கூடாது. தமிழகத்திற்கு தொடர்ந்து, அன்னிய முதலீடுகள் வந்தபடி உள்ளன.இந்த ஆண்டு, உலக தொழில் முதலீட்டாளர் மாநாடு நடத்த உள்ளோம். தற்போதே, 15 நிறுவனங்கள், 25 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில், தொழில் துவங்க முன்வந்துள்ளன.

பழனிவேல் தியாகராஜன்: மத்திய அரசின் செயல்பாடு, மாநில அரசின் உரிமைக்கு விரோதமாக உள்ளது. அதை விட்டு கொடுக்காதீர்கள்.துணை முதல்வர்: மாநில உரிமையை, அ.தி.மு.க., என்றும் விட்டுக் கொடுத்ததில்லை. மாநில உரிமைகளை, அதிகம் பெற்று கொடுத்தவர் ஜெ., முல்லை பெரியாறு அணை நீர் மட்டத்தை உயர்த்தவும், காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை, மத்திய அரசிதழில் வெளியிடவும், நடவடிக்கை எடுத்தார்.

தி.மு.க., - துரைமுருகன்: காவிரியின் அனைத்து உரிமைகளையும் பெற்று தந்தது, கருணாநிதி. முல்லை பெரியாறு அணை நீர் மட்டத்தை உயர்த்த, நீங்கள் மனு செய்தீர்கள். எங்கள் ஆட்சியில், கருத்துக்களை எடுத்து வைத்து வாதாடினோம். தீர்ப்பு, உங்கள் ஆட்சியில் வந்தது.

துணை முதல்வர்: காவிரியின் குறுக்கே, கர்நாடக அரசு, அணை கட்ட அனுமதித்ததும், உங்கள் ஆட்சியில் தான்.இவ்வாறு விவாதம் நடந்தது.


Advertisement

வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
13-ஜன-201811:50:17 IST Report Abuse

pradeesh parthasarathyதொழில் துவங்க முன்வந்த அந்த பதினைந்து நிறுவனங்களின் பெயரை அரசு வெளியிடுமா ...? ....

Rate this:
Anbu - Kolkata,இந்தியா
12-ஜன-201823:01:08 IST Report Abuse

Anbuமகா ஜனங்களே இதன்மூலம் அறிவிப்பது என்னவென்றால், நமது சட்டமன்ற உறுப்பினர்களின் சம்பளம் இருமடங்காக அதாவது ஒரு லட்சத்துக்கும் மேல் தானாகவே தீர்மானம் நிறைவேற்றி அதிகரித்துக் கொண்டமையால் இனிமேல் நமது சட்டமன்ற உறுப்பினர்கள் லஞ்சம் வாங்க மாட்டார்கள் என்றும், சட்டமன்றத்தில் எதற்கும் வெளிநடப்பு செய்யமாட்டார்கள் என்றும் மக்கள் ப்ரச்சினைகளை உடனுக்குடன் தீர்த்து வைப்பார்கள் என்றும் தனக்கோ தன் உறவினர்களுக்கோ தன் நண்பர்களுக்கோ தன் கட்சித் தொண்டர்களுக்கோ தன் ஜாதி மக்களுக்கோ ஆதாயம் தரும் எந்த விதத்திலும் நடக்கமாட்டார்கள் என்றும் எந்த ரிசார்ட்டிலும் தங்கமாட்டார்கள் என்றும் நம்புவோமாக.

Rate this:
Prem - chennai,இந்தியா
12-ஜன-201817:33:08 IST Report Abuse

PremTholil thodanga tamilnadu sirandha manailamaga vilangugirathu

Rate this:
மேலும் 12 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X