அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
மக்களிடம் கையேந்துவதா?
நடிகர்களுக்கு வலுக்கும் எதிர்ப்பு

நடிகர் சங்க கட்டடத்தால் மக்களுக்கு என்ன பயன், அதை கட்டுவதற்கு நிதி திரட்ட, லட்சம், கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்களிடம் வசூலிப்பதை விடுத்து, கலை நிகழ்ச்சி, கிரிக்கெட் நடத்துகிறேன் என்ற பெயரில் பணம் வசூலிப்பது ஏன்? என மக்கள் மத்தியில் குரல்கள் ஒலிக்க துவங்கியுள்ளன. இதுதொடர்பாக சமூக வலைதளங்களிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

நடிகர் சங்க கட்டடம்,Actors Association building, கலை நிகழ்ச்சி, கிரிக்கெட்,Cricket,   விஷால் , Vishal,  பொன்வண்ணன், Ponvannan, எஸ்வி.சேகர், SV Sekar, மலேஷியா,Malaysia, அஜித், Ajith,


தென்னிந்திய நடிகர் சங்கத்தில், குழப்பம் உருவாகி விட்டது. விஷாலின் சமீபத்திய செயல்பாடுகளால் நடிகர் சங்க நிர்வாகிகள், அதிருப்தி தெரிவிக்க ஆரம்பித்தனர். துணை தலைவர் பொன்வண்ணன், ராஜினாமா செய்வதாக சமீபத்தில் அறிவித்தார். பின் சங்கத்தின் நலனுக்காகவும், நடிகர் சங்க கலை நிகழ்ச்சிக்காகவும் ராஜினாமாவை வாபஸ் பெற்றார்.

நடிகர் சங்கத்தில் அறங்காவலர் குழுவில் உறுப்பினராக இருந்த எஸ்வி.சேகர், ராஜினாமா செய்துள்ளார். ராஜினாமா கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: சங்க தேர்தல் முடிந்த பின், என்னை சங்க டிரஸ்டிகளில் ஒருவனாக நியமித்து அறிவுரை, ஆலோசனை, வழி நடத்துதல் தேவை என கேட்டுக் கொண்டீர்கள். ஒரு ஆண்டில் பல மாற்றங்கள். கையெழுத்திடுவதற்கு மட்டும் டிரஸ்டி என்ற நிலை வந்தது. நான் அனுப்பிய மெயில்களுக்கு பதில் அளிக்காமல் விளக்கம் கேட்டு எனக்கு கடிதம் அனுப்பினீர்கள்.

தடை வந்தால் என்னவாகும்


நம் சங்கம் 5 கிரவுண்டு அளவில் 30 கோடி ரூபாய் மதிப்பு உள்ள சாலையை ஆக்கிரமித்துள்ளதாக வந்த புகாரைப்பற்றி கேட்டபோது, .

அப்படி ஒன்றும் இல்லையென்று விஷாலும்,கார்த்தியும் கூறினர். தற்போது அது தொடர்பான வழக்கு, சுப்ரீம் கோர்ட் செல்ல உள்ளது அங்கு தீர்ப்பு பாதகமாக வந்தால் நடிகர் சங்கம், செலவழித்த பணம் என்ன ஆகும்? கலைஞர்கள் அவமரியாதைசமீபத்தில் நடந்த மலேஷிய கலைவிழாவிலும் பல குளறுபடிகள். பல கலைஞர்கள் மரியாதைக் குறைவாக நடத்தப்பட்டு அவமானப்படுத்தப்பட்டனர் என தெரிந்து கொண்டேன்.

விழாவுக்கு முன்பே ஓட்டலில் இவ்வளவு ரூம்கள் போட்டு டிரஸ்ட் பணம் ஏன் செலவழிக்கப் பட வேண்டும்.

பிச்சை எடுத்த கேவலம்


மலேஷியாவில் உள்ள தமிழ் பத்திரிகையில், பாத்திரம் நிரப்ப பாத்திரம் ஏந்தும் நட்சத்திரங்கள் என வந்த செய்தியை பார்க்கவில்லையா? மலேஷிய தமிழர்கள் மூலம் சம்பாதிக்கும் நாம், நலிந்த மலேசிய தமிழ் குழந்தைகள் கல்விக்கு ஒரு கோடி ரூபாய் கொடுத்தால் என்ன?சுய மரியாதையை விற்று சம்பாதிப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே டிரஸ்டி பதவியை ராஜினாமா செய்கிறேன்.

அடுத்த முறை தேர்தலில் நீங்கள் யாரும் ஜெயிக்க முடியாது. இவ்வுலகில் யாரும் நிரந்தரமில்லை என்பதை காலமும் அனுபவமும் உங்களுக்கு உணர்த்தும். இவ்வாறு ராஜினாமா கடிதத்தில் கூறியிருக்கிறார்.

விருப்பம் இல்லை


பின் நிருபர்களிடம் அவர் கூறும்போது, 'நட்சத்திர கலை விழாவில் கலந்து கொள்ள அஜித்தை அழைத்தனர். விருப்பம் இல்லை என்று தெரிவித்த அஜித், ''ஏற்கனவே படங்களுக்கு மக்களிடம் பணம் வாங்குகிறோம்.
''இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தி அதற்கும் கட்டணம் பெறுவது எதற்காக?, நன்றாக சம்பாதிக்கிறோம். நாம், 10 பேர் பணம் போட்டு கட்டடத்தை கட்டுவோம்'' என்றார். இவ்வாறு எஸ்.வி.சேகர் கூறினார்.

Advertisementகூட்டம் இல்லை


கலை நிகழ்ச்சியை கோலாலம்பூரில் உள்ள புக்கிட் ஜலிங் மைதானத்தில் நடத்தினர். 40 ஆயிரம் முதல் 60 ஆயிரம் ரசிகர்கள் வருவர் என எதிர்பார்க்கப்பட்டது. வந்ததோ வெறும் 5 ஆயிரம் ரசிகர்கள் தான் என்று கூறப்படுகிறது.நடிகர்கள் கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் நிலையில் இன்னும் ரசிகர்களின் பணத்தை சுரண்ட நினைப்பது ஏன் என மலேஷிய ரசிகர்கள் கருதியதாகவும்...மலேஷியாவில் உள்ள நுாற்றுக்கும் மேற்பட்ட தமிழ் பள்ளிகளை சரி செய்வதை விடுத்து, நட்சத்திர விழாக்களை புறக்கணிக்கும் படி.

சமூக வலைதளங்களில் பரவிய கருத்துக்களாலும் ரசிகர்கள் கூட்டம் சேரவில்லை என செபராங் பெராய் மாகாண உறுப்பினர் சதீஷ் முனியாண்டி தெரிவித்துள்ளார்.

மலேஷியாவிற்கு சுமார் 300 கலைஞர்கள் அழைத்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இவர்களுக்கு விமான டிக்கெட், தங்கும் விடுதி, உணவு உள்ளிட்ட செலவுகள், நிகழ்ச்சி தொடர்பாக சென்னை நட்சத்திர ஓட்டலில் ஆலோசனை நடத்திய செலவுகளை வைத்தே நடிகர் சங்கத்தில் உள் அரங்குகளை கட்டிவிடலாம் என்கின்றனர்.

நடிகர் சங்கம், இதை புரிந்து கொண்டு, மக்களிடம் பணத்தை வசூலிக்காமல், தங்கள் சொந்த பணத்தில் கட்டடம் கட்டுவதே சிறந்தது என, பரவலாக விவாதிக்கப்படுகிறது.


Advertisement

வாசகர் கருத்து (67)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sithu Muruganandam - chennai,இந்தியா
14-ஜன-201815:17:14 IST Report Abuse

Sithu Muruganandamபிச்சைக்காரப்பயல்கள் புத்தி எல்லோருக்கும் இப்போது தெரிந்துவிட்டது.

Rate this:
APJ AK - AP,இந்தியா
13-ஜன-201800:28:29 IST Report Abuse

APJ AK1) அதிக சத்ததுடன் தும்மினால் எக்ஸ்கூஸ்மீ (Excuse Me) சொல்லறோம் 2) முன் பின் அறிமுக இல்லாத நபர் சாவு பற்றி கேட்க நேரிட்டால், "ஐயோ சாரி" (Oh Sorry) சொல்லறோம் 3) என்னதான் நாம் வயதில் பெரியவராக இருந்தாலும், சார் மே இ கம் இன்? கேட்டு செல்கின்றோம் 4) இந்த அளவுக்கு அடுத்தவர் மனம் நோகாமல் பார்த்து பேசுவது, நடந்து கொள்வது தான் பண்பாடு 5) இந்துக்கள் பெரும்பான்மை உள்ள இந்து நாட்டில், இந்துக்களின் மிக உயர்ந்த கடவுள் ஆண்டாளை ஒரு தாசி என்று எப்படி சொல்ல முடிந்தது? 6) இந்துக்கள் மனம் மிக பெரிய காயத்தில்….. இனிமேல் மன்னிப்பு கேட்டால் என்ன? கேட்கவிட்டால் என்ன?

Rate this:
Agrigators - Chennai,இந்தியா
13-ஜன-201800:14:44 IST Report Abuse

Agrigatorsகூத்தாடிகளை கூத்தடியாகவே பாருங்கள் தமிழர்களே கருமவீரர் காமராஜர் அய்யாவிற்கு செய்த துரோகம் தான் இன்னும் தமிழ்நாடு தருத்திரத்தில் உள்ளது. எனவே சிந்தனையை சுத்தமாக்கி சேவை செய்யும் மனப்பான்மை உள்ள சுத்தமான தலைவரை உருவாக்குங்கள் மீண்டும் கூத்தாடிகளை ஆதரித்தால் கோமணம் கூட மிஞ்சாது கவனமாய் செயல்படுங்கள். மலேஷியா மக்கள் பாடம் புகட்டிவிட்டார்கள். தாய் தமிழக மக்களே நீங்கள்?

Rate this:
மேலும் 64 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X