திருமண ஆசை காட்டி இன்ஜினியர்களிடம் மோசடி : கோவையில் இளம்பெண் உட்பட 4 பேர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திருமண ஆசை காட்டி இன்ஜினியர்களிடம் மோசடி : கோவையில் இளம்பெண் உட்பட 4 பேர் கைது

Added : ஜன 12, 2018 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
திருமண ஆசை காட்டி இன்ஜினியர்களிடம் மோசடி : கோவையில் இளம்பெண் உட்பட 4 பேர் கைது

கோவை: சேலம் மாவட்டம், இடைப்பாடியைச் சேர்ந்தவர், பாலமுருகன், 25. சாப்ட்வேர்
இன்ஜினியரான இவர், ஜெர்மனியில் பணியாற்றுகிறார்.
பாலமுருகனுக்கு திருமணம் செய்து வைக்க, அவரது குடும்பத்தினர் பெண் பார்த்து வந்தனர்.
இந்நிலையில்,இணையதளம் மூலம், 'மேட்ரிமோனியல்' பகுதியில், மணமகள் தேவை என, பாலமுருகன், அவரது புகைப் படத்துடன், அவரை பற்றிய தகவலை பதிவிட்டார்.
கோவை, அவினாசி ரோடு, நவ இந்தியா, அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் சுருதி, 21, மேட்ரிமோனியல் விளம்பரத்தை பார்த்து, பாலமுருகன் மொபைல் போனுக்கு தொடர்பு கொண்டுபேசினார்.
பின், 'வாட்ஸ் ஆப்'பில், பாலமுருகனுக்கு, 'மாடலிங்' உடையில் எடுத்த, பல போட்டோக்களை அனுப்பினார். இதை பார்த்த பாலமுருகன், 'உங்களை பிடித்து இருக்கிறது; திருமணம் பற்றி பேசலாம்' என, தெரிவித்து உள்ளார்.
கோவையில் உள்ள, ஓர் ஓட்டலுக்கு, பாலமுருகனை வரவழைத்தார் சுருதி.அப்போது, சுருதியுடன் வந்த சித்ரா, 48, பிரசன்ன வெங்கடேசன், 50, ஆகியோரை பெற்றோர் என்றும், சுபாஷ், 23, என்பவரை சகோதரர் என்றும் அறிமுகம் செய்து வைத்தார். அதன்பின்,திருமணம் பற்றி பேசினர்.
அப்போது, 'தாய், சித்ராவுக்கு மூளையில் கட்டி இருப்பதால், அறுவை சிகிச்சை செய்வதற்கு, 45 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது.
'பணம் கொடுத்து உதவி னால், அறுவை சிகிச்சை முடிந்து, திருமணம் வைத்துக் கொள்ளலாம்' என, தெரிவித்தனர். இதை நம்பிய பாலமுருகன், 45 லட்சம் ரூபாய் கொடுத்தார்.
அதன்பின், சுருதியின் புகைப்படத்தை, தன் நண்பருக்கு அனுப்பிய பாலமுருகன், இந்த பெண்ணை திருமணம் செய்யப் போவதாக தெரிவித்து உள்ளார்.
இதை பார்த்த நண்பர் அதிர்ச்சி அடைந்தார். 'ஏற்கனவே, பல ஆண்களிடம் திருமணம் செய்து கொள்வதாக கூறி, பணத்தை வாங்கி மோசடி செய்தபெண்' என, தெரிவித்து உள்ளார்.
இது குறித்து, கோவை சைபர் கிரைம் போலீசில், பாலமுருகன் புகார்அளித்தார்.
சுருதி உட்பட, நான்கு பேரையும் பிடித்து நேற்று விசாரித்த போது, ஏற்கனவே பல ஆண்களிடம், திருமண ஆசை காட்டி, கோடிக்கணக்கில் சுருட்டியது தெரிய வந்தது. நான்கு பேரையும், போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
புதுமுக நடிகை: கோவை மற்றும் சென்னையில் திருமண ஆசை காட்டி, இன்ஜினியர்களிடம் பணம் பறித்த சுருதி, சினிமா நடிகை என்பது தெரிந்துள்ளது. ஆடி போனா ஆவணி என்ற படத்தில் அறிமுகம் ஆனார். ஜே.எம்., என்பவர் இயக்கிய இந்தப்படம் இன்னும் திரைக்கு வரவில்லை.
இப்படத்தை, 'ஸபா சினி ஆர்ட்ஸ்' என்றநிறுவனம் தயாரித்துள்ளது. சென்னையில் சினிமாவில் நடித்து கொண்டே, பலரை திருமணம் செய்து கொள்வதாக கூறி மோசடியில் ஈடுபட்டது தெரிந்துள்ளது.

'வாடகை' பெற்றோர் : போலீசார் கூறியதாவது: இணையதளத்தில் பெண் தேடும், வசதி படைத்த இன்ஜினியர்களை குறிவைத்து, சுருதி மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார். கோவையில், அபார்ட்மென்ட்டில் வாடகைக்கு குடியிருந்து வந்த இவர்கள், ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என, பொய்யான தகவலை அளித்துள்ளனர். சித்ராவும், பிரசன்ன வெங்கடேசனும், சுருதிக்கு உண்மையான பெற்றோர் இல்லை.

பெற்றோராக நடித்து, மோசடியில் ஈடுபட்டுள்ளனர். சுபாஷ் என்பவரும் சகோதரர் போல நடித்து, மோசடிக்கு உடந்தையாக இருந்துள்ளார். பிரசன்ன வெங்டேசன், துபாயில், பிசினஸ் செய்வதாகவும், விலை உயர்ந்த கார் இருப்பதாகவும், வசதியானவர்கள் போல நாடகமாடி மோசடியில் ஈடுபட்டு உள்ளனர். மைதிலி உட்பட பல்வேறு பெயர்களில், சுருதி மோசடி செய்துள்ளது தெரிய வந்துள்ளது. பெண் தேடும் ஆண்களுக்கு, 'வாட்ஸ் ஆப்'பில் கவர்ச்சியான போட்டோவை அனுப்பி, நேரில் வரவழைத்து உள்ளனர். இது போல, எத்தனை பேரை ஏமாற்றி உள்ளனர் என்பது குறித்து, தொடர்ந்து விசாரணை நடக்கிறது. இவ்வாறு போலீசார் கூறினர்.

இன்ஜினியர்களுக்கு, 'குறி' : நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலுாரைச் சேர்ந்த, சாப்ட்வேர் இன்ஜினியர், சந்தோஷ்குமார், 30, என்பவரிடமும் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, சுருதி ஏமாற்றி உள்ளார். அவரிடமும், தாய் மூளையில் கட்டி என, பொய் தகவல் கூறி, 43 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளார். இது தொடர்பாக, 2016 பிப்., 27ல், சுருதி மீது சந்தோஷ்குமார், சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார்.

இதே போல், ஐதராபாதில், சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வரும், சிதம்பரத்தைச் சேர்ந்த, அருள்குமரன் குருராஜாவிடம், 28, திருமண ஆசை காட்டி, 20 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளதும் தெரிய வந்துள்ளது. சந்தோஷ்குமார் அளித்த புகாரின்படி, அவர்களை போலீசார் தேடி வந்துள்ளனர். அப்போது, கோர்ட்டில் முன்ஜாமின் பெற்று, தலைமறைவான நான்கு பேரும்,
தற்போது போலீசில் சிக்கி உள்ளனர்.

போலீசாரை மிரட்டியதால் தனி வழக்கு : திருமணம் செய்து கொள்வதாக ஆசை காட்டி, இன்ஜினியரிடம் மோசடி செய்தது தொடர்பாக, சுருதி, சித்ரா, பிரசன்ன வெங்கடேசன், சுபாஷ் ஆகியோரை கைது செய்வதற்கு, நேற்று முன்தினம் இரவில், போலீசார், சுருதி வீட்டுக்கு சென்றனர்.

அப்போது அங்கிருந்த, சென்னை, அண்ணா நகரைச் சேர்ந்த, சபரிநாத், 23, என்பவர், இன்ஸ்பெக்டர், கலையரசியை வீட்டுக்குள் விடாமல் தடுத்தார். பாதுகாப்புக்கு வந்த ஆயுதப்படை போலீஸ்காரர், ஷாகுல் என்பவரை தாக்கினர். இதில், அவருக்கு காயம் ஏற்பட்டது.
இது குறித்து, ரேஸ்கோர்ஸ் போலீசில், இன்ஸ்பெக்டர், கலையரசி புகார் அளித்தார். இது தொடர்பாக, தனி வழக்கு பதிவு செய்த போலீசார், சபரிநாத், சுருதி உட்பட ஐந்து பேரையும் கைது செய்தனர். சபரிநாத், சென்னையைச் சேர்ந்த, கலால் வரித்துறை அதிகாரி ஒருவரின் மகன்என்றும், சுபாஷின் நண்பர் என்றும் கூறப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
13-ஜன-201803:49:50 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் இது கைதேர்ந்த கும்பலாக இருக்கிறது. 2016 வழக்கின் விசாரணையின் போதே கோர்ட்டில் முன்ஜாமின் பெற்று, தலைமறைவானார்களாம். ஜாமீன் கொடுத்த அந்த நீதிபதியை பிடித்து, உரித்து நொங்கெடுத்தால் நல்லது. அந்த மாதிரி நாதாரி அநீதிபதிகளால் தான் இவர்களின் ஆட்டம் நீண்டிருக்கிறது. நடந்ததையெல்லாம் பார்த்தால், போலீசும் இவர்கள் கேங் போலத்தான் தெரிகிறது. இப்பவும் எவனாவது லஞ்சத்துக்கு இவர்களை விட்டுவிடுவார்கள் என்றே தோன்றுகிறது.
Rate this:
Share this comment
Cancel
ramasamy naicken - Hamilton,பெர்முடா
12-ஜன-201805:23:53 IST Report Abuse
ramasamy naicken Even now if Shruthi smile at a Judge, the judge is again going to grant bail.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X