எங்களுக்கு துணிவு இல்லையா: நீதிபதிகள்| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

எங்களுக்கு துணிவு இல்லையா: நீதிபதிகள்

Added : ஜன 12, 2018 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

சென்னை: 'நீதிமன்றத்துக்கு துணிவு இல்லை' என விமர்சித்த, தொழிற் சங்க நிர்வாகிக்கு, சென்னை உயர் நீதிமன்றம்கண்டனம் தெரிவித்தது. 'நீதிமன்ற உத்தரவால் தான், ௭௨௦ கோடி ரூபாய் நஷ்டஈடு தொகை வழங்கப்பட்டது' என, நீதிபதிகள், காட்டமாக பதில் அளித்தனர்.
போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் குறித்த வழக்கு விசாரணை, நீதிபதிகள், மணிக்குமார், கோவிந்தராஜ் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், நேற்று
நடந்தது. அட்வகேட் ஜெனரல், விஜய் நாராயண் வாதிடும் போது, ''போராட்டத்தை புரிந்து கொள்ள, நீதிமன்றம்
தவறுகிறது; ஆறு மாதங்
களாக, வழக்கு நிலுவையில் உள்ளது என, எல்.பி.எப்., தொழிற்சங்க நிர்வாகி தெரிவித்துள்ளார். அவர் பேசியதை, எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்கிறேன்; வீடியோ காட்சியும் உள்ளது,'' என்றார்.
இதையடுத்து, நீதிபதிகள், 'மனுவாக தாக்கல் செய்யுங்கள். ஆறு மாதங்களாக, வழக்கை நிலுவையில் வைத்தோமா; எங்
களுக்கு துணிவு இல்லை என, தொழிற்சங்க நிர்வாகி கூறியுள்ளார். எங்கள் உத்தரவால் தான், விபத்து வழக்குகளில், ௭௨௨ கோடி ரூபாய், இழப்பீடு
வழங்கப்பட்டது. அரசியல்வாதிகள் எதை வேண்டு
மானாலும் பேசலாமா...
''எங்களுக்கு துணிவு இருக்கிறதா, இல்லையா என, பின்னர் பார்ப்போம். தொழிற்சங்க நிர்வாகி
களுக்கு, வழக்கறிஞர்கள் அறிவுறுத்த மாட்டீர்களா...; அவ்வப்போது, நாங்கள் உத்தரவுகள் பிறப்பித்து வருகிறோம்,'' என காட்டமாக பதில்
அளித்தனர்.
சி.ஐ.டி.யு., தொழிற்சங்கம் சார்பில் ஆஜரான, வழக்கறிஞர், என்.ஜி.ஆர்.பிரசாத், ''தொழிற் சங்கங்களின் கோரிக்கைகள் அனைத்தையும், மத்தியஸ்தர் விசாரணைக்கு அனுப்புங்கள்; நாளை முதல், பஸ்கள் ஓடுமாறு செய்யுங்கள்,'' என்றார். அதற்கு, நீதிபதிகள், 'நீங்கள் தொழிலாளர்கள் தரப்பில் இருந்து மட்டுமே பேசுகிறீர்கள்; பொது மக்களை பார்ப்பதில்லை. பஸ்கள் இயக்குவது குறித்து தான் தொடர்ந்து கூறி வரு
கிறோம்' என்றனர்.
உடனே, வழக்கறிஞர், அய்யாதுரை, ''பொது
மக்கள், எங்களை விமர்சிக்கவில்லை. தொழி
லாளர்களுக்கு வர வேண்டிய, ௫,௦௦௦ கோடி ரூபாயை அரசு எடுத்துக் கொண்டதாக, அவர்களே கூறுகின்றனர்,'' என்றார்.
அப்போது, நீதிபதிகள், ''தொழிற்சங்க தலைவர்கள் எல்லாம், ஏழு ஆண்டுகளாக, அமைதியாக இருந்தீர்கள். ௭௨௦ கோடி ரூபாய் நஷ்டஈடு வழங்க, நீதிமன்றம் தான் உத்தரவிட்டது. விபத்துக்களுக்கு யார்
காரணம்,'' என கேள்வி எழுப்பினர். உடனே, வழக்கறிஞர், பிரசாத், ''ஓட்டை உடைசல் பஸ்கள், தரமற்ற உதிரி பாகங்களை வழங்குகின்றனர். இந்த பஸ்களை வைத்து எப்படி
ஓட்டுவது,'' என்றார்.
இந்த வழக்கில், தொழிற் சங்கங்கள் தரப்பில், மூத்த வழக்கறிஞர், வி.பிரகாஷ், வழக்கறி
ஞர்கள், என்.ஜி.ஆர்.பிரசாத், அஜய் கோஷ், அய்யாதுரை, சந்திரசேகர், ஜார்ஜ் வில்லியம்ஸ், அரசு தரப்பில், அட்வகேட்
ஜெனரல், விஜய் நாராயண் ஆஜராகினர்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
12-ஜன-201809:00:34 IST Report Abuse
அப்பு தொழிலாளர்கள் பொதுமக்கள் இல்லியா?
Rate this:
Share this comment
Cancel
skv - Bangalore,இந்தியா
12-ஜன-201806:59:43 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> OTTAI ODASAL NU SOLLURAANGKALE ITHUKKU YAARELLAAM KAARANAM POTHUJANAM THAAN MAANAVARALETHAAN ENBEN KOVAM VANDHAAL ADI UDHAI ENRU MARANA ADI VAANGKARTHE PERUNTHUKAL THAANE ??/SILAR KOBAM VANDHAAL THAN VEETTU COSTLY THINGS ELLAAM ADICHCHU UDAI[[PPAANUKA THERIYUMAA ADHEPOLA THAAN MAANAVARKALETHAAN INTHAKOBAKKAARA PANRIKAL . ITHANAAL ENNA LAABAM NAMMANAATTIN SOTHTHUKALAIYELLAAM ALIKKARADHUTHAAN NEEDHIYAA
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
12-ஜன-201816:11:18 IST Report Abuse
தமிழ்வேல் ஓட்டை உடைசல் னு சொல்லுறாங்களே இதுக்கு யாரெல்லாம் காரணம் பொதுஜனம் தான் மாணவராலேதான் என்பேன் கோவம் வந்தால் அடி உதை என்று மரண அடி வாங்கறதே பேருந்துகள் தானே ??/சிலர் கோபம் வந்தால் தன் வீட்டு COSTLY THINGS எல்லாம் அடிச்சு உடை ப்பானுக தெரியுமா அதேபோல தான் மாணவர்களேதான் இந்தகோபக்கார பன்றிகள் . இதனால் என்ன லாபம் நம்மநாட்டின் சொத்துகளையெல்லா ம் அழிக்கறதுதான் நீதியா...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X