பொது செய்தி

தமிழ்நாடு

கொத்து கொத்தாக காய்த்துள்ள அத்திப்பழம்:ஊடுபயிராக விளைவித்தால் விவசாயிகளுக்கு பயன்

Added : ஜன 14, 2018
Share
Advertisement
குன்னுார்:குன்னுாரில் அத்திப்பழ சீசன் முன்னதாக துவங்கி உள்ளது.குன்னுார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் அத்திப்பழ மரங்கள் அதிகளவில் உள்ளன. குறிப்பாக, குன்னுார் - மேட்டுப்பாளையம் சாலை, வண்டிச்சோலை, மவுன்ட்ரோடு, காந்திபுரம், அருவங்காடு, ஓட்டுப்பட்டறை, கரடிபள்ளம் உட்பட பல இடங்களிலும் இந்த மரங்கள் காணப்படுகின்றன. தற்போது, பூக்கள் பூத்து, காய்கள் கொத்து கொத்தாக

குன்னுார்:குன்னுாரில் அத்திப்பழ சீசன் முன்னதாக துவங்கி உள்ளது.குன்னுார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் அத்திப்பழ மரங்கள் அதிகளவில் உள்ளன. குறிப்பாக, குன்னுார் - மேட்டுப்பாளையம் சாலை, வண்டிச்சோலை, மவுன்ட்ரோடு, காந்திபுரம், அருவங்காடு, ஓட்டுப்பட்டறை, கரடிபள்ளம் உட்பட பல இடங்களிலும் இந்த மரங்கள் காணப்படுகின்றன.
தற்போது, பூக்கள் பூத்து, காய்கள் கொத்து கொத்தாக காய்த்துள்ளன. இன்னும் சில நாட்களில் இவை பழமாகும் நிலையில் உள்ளது. தற்போது, சாலையோரங்களில் உள்ள மரங்களில் இருந்து இவற்றை, சுற்றுலா பயணிகள் அதிகளவில் பறித்து ருசித்து செல்கின்றனர்.அத்திமரத்தில் சீமை அத்தி, நாட்டு அத்தி, வெள்ளை அத்தி என பல வகைகள் உள்ளன. மழை அதிகம் இருந்தால் ஆண்டிற்கு இரு முறை காய்க்கும். மரத்தின் கிளையில் தொங்கியபடி, பழுத்தும் உட்புறம் சிவப்பாக உள்ளது. ஆண்டிற்கு இரு முறை வளரக்கூடியது. நல்ல மணத்துடன் இருந்தாலும் அதற்குள் மெல்லிய பூச்சிகள், புழுக்கள் இருக்கும். அவற்றை நீக்கி பதப்படுத்திய பிறகே உண்ண முடியும்.
ஒரு மரத்தில் இருந்து, 180 முதல் 360 கிலோ வரை பழங்கள் தருகிறது. நடவு செய்த நான்கு ஆண்டு முதல் மகசூல் தரக்கூடிய வாய்ப்புகள் உள்ளதால் இதனை குன்னுார் பகுதிகளில் அதிகளவில் வளர்க்கலாம்.கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, தாது உட்பட அனைத்து சத்துக்கள் நிறைந்துள்ளதால் மருத்துவ குணம் வாய்ந்ததாகவும் உள்ளது. ரத்த உற்பத்தி அதிகரிப்பு, உடல் வளர்ச்சி, எலும்பு வளர்ச்சி, பலம், சுறுசுறுப்பு உட்பட பல்வேறு பயன் இருப்பதை சித்தா டாக்டர்கள் தெளிவுபடுத்துகின்றனர்.
குன்னுார் தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் சிவதாஸ் கூறுகையில், ''வனப்பகுதிகளில் உள்ள அத்தி மரங்கள் மண்ணின் தாய் எனவும், பல்லுயிர்களின் தாய் மரம் எனவும் அழைக்கப்படுகிறது. பல்லுயிர் பெருக்கத்திற்கு முக்கியமானதாக உள்ளது. தேனீக்கள், இருவாச்சி பறவை எனப்படும் 'ஹார்ன்பில்' போன்றவை இந்த பழங்களை ருசிக்க வருகின்றன. அத்தி மரங்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மருத்துவத்துக்கும் உதவி புரிந்து வருகின்றன,'' என்றார்.
விவசாயிகள் கூறுகையில், 'இதுபோன்ற மரங்களை பாதுகாக்க வேண்டியது அவசியம். இந்த ஒரு மரம் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவின் வளத்திற்கு பயன்தரக்கூடியது. ஆனால், இவற்றின் மதிப்பு தெரியாமல் பல இடங்களிலும் வெட்டப்படுகின்றன. இந்த மரங்கள் அதிகளவில் வளருவதற்கான காலநிலை உள்ள நீலகிரியில், இந்த மரங்களை அதிகரிக்க, தோட்டக்கலை துறை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது. இதனை அதிகரிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகள் ஊடுபயிராகவும் வளர்க்கவும் ஊக்குவிப்பு அளிக்க வேண்டும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X