புதுடில்லி : 'தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் இருந்து, 500 மீட்டர் தொலைவுக்குள் செயல்பட, மதுக்கடைகளுக்கு விதிக்கப்பட்ட தடை, தமிழகத்தில், இந்த சாலைகள் குறுக்கிடும் நகராட்சி பகுதிகளுக்கு பொருந்தாது' என, உச்ச நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது.
நகராட்சி பகுதிகளில், தேசிய நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகள் அமைப்பதற்கு, தமிழக அரசு பிறப்பித்த ஆணையை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த, சென்னை உயர் நீதிமன்றம், கடந்தாண்டு, ஜூலை, 11ல்,
'தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் இருந்து, 500 மீட்டர் தொலைவுக்குள் மதுக்கடைகளுக்கு விதிக்கப்பட்ட தடை, சண்டிகரில் உள்ள நகராட்சி பகுதிகளுக்கு மட்டுமே பொருந்தாது.
'பிற பகுதிகளில், இந்த தடை அமலில் உள்ளது' எனக் கூறி, தமிழக அரசின் அறிவிப்புக்கு இடைக்கால தடை விதித்தது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.
வழக்கை பரிசீலித்த, உச்ச நீதிமன்ற நீதிபதிகள், தீபக் மிஸ்ரா, நீதிபதிகள், ஏ.எம்.கன்வில்கர், சந்திரசூட் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு: கடந்த, 2016, டிச., 15ம் தேதி, நகரங்கள், கிராமங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலைகளில், மது விற்பனையை தடுக்கும் நோக்கில், உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவு, நகராட்சி எல்லைக்குட்பட்ட
பகுதிகளில், 'லைசென்ஸ்' பெற்று செயல்படும் மதுக்கடைகளுக்கு பொருந்தாது.
இந்த உத்தரவு, சண்டிகரில் உள்ள நகராட்சிகளுக்கு மட்டும் அல்லாது நாட்டின் அனைத்து பகுதிகளில் உள்ள நகராட்சிகளின் அதிகாரத்தின் கீழ் உள்ள மதுக்கடைகளுக்கு தடை இல்லை என்பதை தெளிவாக்குகிறது. இதுபோன்ற வழக்குகள், நாட்டின் பிற பகுதிகளில் தொடரப்படுவதை தடுக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த விளக்கம் அளிக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (20)
Reply
Reply
Reply