பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
'போட்டுக் கொடுத்தார்' கவர்னர் புரோஹித்
தமிழக அரசியலில் பரபரப்பு

தமிழக அரசு நிர்வாக ஊழல்கள் மற்றும் அரசியல் குழப்பங்கள் குறித்து, பிரதமர் மோடியிடம், தமிழக கவர்னர், பன்வாரிலால் புரோஹித், விரிவாக பேசிய தகவல் தெரிய வந்துள்ளது.

கவர்னர் பன்வாரிலால் புரோஹித், Governor Banwarilal Purohit, தமிழக அரசியல், Tamil Nadu Politics,தமிழக அரசு,Tamilnadu Government,  ஊழல்கள் , Scam, பிரதமர் மோடி, PM Modi,ஆளுநர்,  பா.ஜ.,BJP,  மத்திய அரசு,Central Government,  மணல், Sand, குட்கா, Gudka,


இது தொடர்பாக, டில்லி வட்டாரங்கள் கூறியதாவது: ஊழல் ஒழிப்பை பிரதானமாக வைத்து, பா.ஜ., அரசு இயங்கி வருகிறது. ஆனால், மத்திய அரசுடன் இணக்கமாக

இருக்கும் தமிழக அரசில், ஊழல் புகார்கள் அதிகமாக இருப்பதை, கவர்னர் அறிந்துள்ளார்.


மணல், 'குட்கா' என, பல விஷயங்கள், அவரது கவனத்திற்கு வந்தன. மேலும், பல்வேறு மாவட்டங்களில் மேற்கொண்ட ஆய்வின்போது, சில ஊழல்களை, கவர்னர் உறுதி செய்துள்ளார்.


ஆளுங்கட்சியில் நிலவும் குழப்பங்கள், ரஜினி - கமல் அரசியல் பிரவேசம், சட்டம் - ஒழுங்கு குறித்த அறிக்கைகள், அவர் கையில் உள்ளன. அவர், பிரதமர் மோடியை சந்தித்தபோது, அவை அனைத்தையும் தந்துள்ளார். அப்போது, பிரதமர் மோடி, அரசு மற்றும் அரசியல் போக்கை தொடர்ந்து கவனிக்க, கவர்னருக்கு உத்தரவிட்டு உள்ளார்.


Advertisement


மேலும், தமிழக அரசு நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்படுகிறதா என பார்க்க, சிறிது அவகாசம் தரலாம் என்றும், கவர்னரிடம் கூறியதாக தெரிகிறது. மாநில அரசின் போக்கை பொறுத்து, மத்திய அரசின் நடவடிக்கை அமையும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.

- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (55)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
16-ஜன-201821:17:56 IST Report Abuse

அப்புபாம்பின்கால் பாம்பறியும்... ஒரு ஊழல் அரசியல்வாதியைப் போட்டுக் குடுக்க இன்னொரு ஊழல் அரசியல்வாதி...

Rate this:
venkatesh - coimbatore,இந்தியா
16-ஜன-201820:54:53 IST Report Abuse

venkateshமோடிஜி பொறுத்திருந்து ,பொறுத்திருந்து இரண்டு சதவிகிதம் வாக்கும் காணாமல் போன பின்னால் நடவடிக்கை எடுப்பார்.

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
16-ஜன-201818:32:54 IST Report Abuse

Pugazh V//பிரதமர் மோடி, அரசு மற்றும் அரசியல் போக்கை தொடர்ந்து கவனிக்க, கவர்னருக்கு உத்தரவிட்டு உள்ளார்.// கவர்னருக்கு இதுவா வேலை.? இதற்காகவா மக்கள் பணத்தில் சம்பளம்? இது தப்பில்லையா?

Rate this:
மேலும் 52 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X