பெட்ரோல், டீசலுக்கு, தினமும் விலை நிர்ணயம் செய்யும் முறை அமலுக்கு வந்த ஏழு மாதங்களில், சென்னையில், முதல் முறையாக, 1 லிட்டர் டீசல் விலை, 65 ரூபாயை தாண்டியுள்ளது.
இந்தியன் ஆயில், பாரத், இந்துஸ்தான் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப, மாதந்தோறும், பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்தன. சில ஆண்டுகளுக்கு முன், அவற்றின் விலை, மாதத்திற்கு, இரு முறை மாற்றப்பட்டன.
எண்ணெய் நிறுவனங்கள், 2017 ஜூன், 16ல் இருந்து, பெட்ரோல், டீசல் விலையை, தினமும்
நிர்ணயம் செய்து வருகின்றன. இதனால், அவற்றின் விலை, தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதன்படி, 2017 ஜூன், 16ல், சென்னையில், 1 லிட்டர் பெட்ரோல், 68.02 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
புதிய முறை அமலுக்கு வந்து, ஏழு மாதங்கள் முடிந்த நிலையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு, 5.78 ரூபாய் உயர்ந்து, தற்போது, 73.80 ரூபாயாக உள்ளது. கடந்த, 2013 செப்., 14ல், 1 லிட்டர் பெட்ரோல், 79.55 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இதுவே, இதுவரை உச்ச அளவாக உள்ளது.
சென்னையில், 2017 ஜூன், 16ல், 1 லிட்டர் டீசல், 57.41 ரூபாய்க்கு விற்கப்பட்டது. தற்போது, இதன் விலை, 7.67 ரூபாய் அதிகரித்து, முதல் முறையாக, 65.08 ரூபாயாக உயர்ந்து, புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இதற்கு முன், டீசல் விலை, 64 ரூபாய்க்கு கீழ் இருந்தது.
இது குறித்து, தமிழ்நாடு பெட்ரோலியம் டீலர்ஸ் கூட்டமைப்பின் தலைவர், கே.பி.முரளி கூறியதாவது: மாதத்திற்கு, இரு முறை விலை நிர்ணயம் செய்ததில் இருந்து
தான், பெட்ரோல், டீசல் விலை அதிகமாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக, டீசல் விலை, அதிகமாக உயர்ந்துள்ளது. இதனால், அவை, என்ன விலைக்கு விற்கப்படுகிறது என்ற விபரம், மக்களுக்கு தெரிவதில்லை.
சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய், என்ன விலைக்கு வாங்கப்படுகிறது; பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்வது எப்படி உள்ளிட்ட விபரங்களை, மூன்று பொதுத்துறை நிறுவனங்களும், மக்களுக்கு தெரிவிப்பது இல்லை. இந்த விபரங்களை, தினமும் தெரிவிக்கவில்லை என்றாலும், மாதத்திற்கு ஒரு முறையாவது தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (23)
Reply
Reply
Reply