கமிஷனரிடம் ‛தகரமா' அடி வாங்குது ‛லகரம்'

Added : ஜன 16, 2018 | |
Advertisement
திருப்பூரிலிருந்து சற்று தள்ளியுள்ள கிராமம் அது. அங்கிருந்த கோவில் திடலில், மக்கள் கூட்டம். வண்ண வண்ண ஆடையணிந்து துள்ளிக்குதிக்கும் சிறுவர், சிறுமியர், மெகா சைஸ் கோலம் போடும் பெண்கள், பாவாடை தாவணியுடன் இளைஞிகள், வேட்டி, சட்டை அணிந்து பரபரப்பாக அங்குமிங்கும் செல்லும் இளைஞர்கள் என, அந்த இடேம, உற்சாகத்தில் ததும்பி கொண்டிருந்தது.கூட்டத்தோடு கூட்டமாக, சித்ரா, மித்ராவும்,
கமிஷனரிடம் ‛தகரமா' அடி வாங்குது ‛லகரம்'

திருப்பூரிலிருந்து சற்று தள்ளியுள்ள கிராமம் அது. அங்கிருந்த கோவில் திடலில், மக்கள் கூட்டம். வண்ண வண்ண ஆடையணிந்து துள்ளிக்குதிக்கும் சிறுவர், சிறுமியர், மெகா சைஸ் கோலம் போடும் பெண்கள், பாவாடை தாவணியுடன் இளைஞிகள், வேட்டி, சட்டை அணிந்து பரபரப்பாக அங்குமிங்கும் செல்லும் இளைஞர்கள் என, அந்த இடேம, உற்சாகத்தில் ததும்பி கொண்டிருந்தது.
கூட்டத்தோடு கூட்டமாக, சித்ரா, மித்ராவும், பட்டுப்புடவை பள பளக்க அமர்ந்திருந்தனர். அப்ேபாது, "ஓலையக்கா கொண்டையிலே ஒரு கூட தாழம்பூ..., தாழம்பூ சித்தாட தல நெறையா முக்காடு...' என்று பெண்கள் கும்மிடியத்து கொண்டே பாட, மித்ராவும் சேர்ந்து பாடினாள்.
""என்ன, மித்ரா. உனக்கு பூரா பாட்டும் தெரியுமா?'' என்றாள் சித்ரா.
""ம்..ம்... தெரியுங்க,"" மித்ரா பதில் கூறி, அங்கு வந்த தள்ளுவண்டிய பார்த்ததும்,""பாதுகாப்பு... பாதுகாப்புனு சொல்லி இப்படியா அநியாயம் பண்ணுவாங்க?'' என்றாள் மித்ரா.
""என்ன சொல்றே. புரியும்படியா சொல்லு,'' என்றாள் சித்ரா.
""புட் சேப்டி ஆபீஸ் மேட்டரத்தான் சொல்றேன். நான் வழக்கமா சிக்கன் வாங்கற கடைக்காரரு, பங்களா ஸ்டாப்ல இருக்கற புட் சேப்டி ஆபீசுல போயி, பதிவு செய்யணும்னு கேட்டிருக்காரு. உள்ள இருந்த ஆபீசரு, "வெளியே இருக்கற ஒருத்தர்கிட்ட, 1,100 ரூபா கொடுத்துட்டு போங்க, நாங்களே பதிவு செஞ்சிடறோம்னு, சொல்லிட்டு உள்ளே போயிட்டாராம்,'. அவரு சொன்னமாதிரியே, வெளியே இருந்த வயசானவருட்ட, "மொய்' வச்சுட்டு வந்தாராம்''
""உணவு பாதுகாப்பு பதிவுக்கு, 100 ரூபா மட்டும்தான். அதிகமா கொடுக்காதீங்கன்னு' நோட்டீஸ் அடிச்சு கொடுக்கறாங்க. ஆனா, இப்படி கணக்கில்லாம வாங்கறாங்க. ஐந்து வருஷத்துக்கு சேர்த்து, பதிவு செஞ்சாலும், 500 ரூபா தானே ஆகும்? என்ன கணக்குல வாங்கினாங்கனு யாருக்கு தெரியும்? இதனாலதான், மத்த வியாபாரிங்க பதிவு பண்ண தயங்குறாங்க,'' என்று விளக்கினாள் மித்ரா.
""நேரடி மேயர்னு அறிவிச்சதும்... ஆளுங்கட்சியில சிலர் "குஷி'யாகிட்டாங்க,'' என்று பாலிடிக்ஸ் பேசிய சித்ரா, "" மேயர் "சீட்'டுக்கு காத்திருக்கறவங்க "பீதி'யாகிட்டாங்க. வார்டுல ஜெயிச்சு, ஈஸியா மேயர் ஆகியிருக்கலாம். ஒரு வார்டுக்கு செலவு செஞ்சா போதும். இனி, 60 வார்டுக்கும் செலவு பண்ணித்தானே ஆகணும். இதனால, வார்டில் போட்டியிடறவங்க, குஷியாயிட்டாங்களாம். ஆனா, நம்ம மாஜிதான், இப்படியாயிடுச்சேன்னு, பீல் பண்றாராம்,'' என்று, "ஆனந்தமாக' கூறினாள்.
அப்போது, வழுக்கு மரம் ஏறுதல் போட்டி குறித்து அறிவிக்கப்பட்டது. உடேன, இருவரும் அதைப்பார்க்க ஆர்வமான போது, ""மேலிடத்துல சேர்ந்தாலும், திருப்பூர்ல முட்டல், மோதல் இருந்துட்டேதான் இருக்கு,'' என்று புதிர்ேபாட்டாள் மித்ரா.
""மித்து, நீ ஆளுங்கட்சி மேட்டரைத்தாேன சொல்ற?'' என்றாள் சித்ரா.
""அதேதான். முதல்வர், துணை முதல்வர் ஒண்ணா சேர்ந்து இயங்க ஆரம்பிச்சாலும், கீழ்மட்டத்துல இன்னும் யாரும் இணையவில்லை போல் தெரிகிறது.
பொங்கலுக்கு, ஓ.பி.எஸ்., ஆதரவாளருங்க, எல்லா நிர்வாகிகள் போட்டோவோட "பேனர்' வச்சாங்க. காலையிலே பார்த்தால், முக்கிய பிரமுகர் உருவத்தை மட்டும், கிழிச்சு எடுத்துட்டு போயிட்டாங்க. இதனால், பேனர் வச்சவர் கடுப்பாயிட்டாராம். அதை போட்டோ எடுத்து, பேஸ்புக், வாட்ஸ்அப்பில் போட்டு, மன ஆறுதல் அடைஞ்சிட்டாராம்,'' என, முழு சம்பவத்தையும் சொன்னாள் மித்ரா.
பொங்கல் விளையாட்டு போட்டி களை கட்டி கொண்டிருந்த நிலையில், "எல்லாரும் பொங்கல் வாங்கி சாப்பிடுங்க. அப்புறமாக, பாக்கி வெளையாட்ட வச்சுக்கலாம்,' என்று ஒலி பெருக்கியில் அறிவிப்பு வந்தது. இருவரும் வரிøசயில் நின்று, பொங்கலை வாங்கி, மரத்தடியில் அமர்ந்து சாப்பிட துவங்கினர்.
அப்போது, ""அரசு பஸ் ஊழியர் போராட்டம் முடிவுக்கு வந்ததால் பொங்கல் பிரச்னையின்றி கொண்டாட முடிஞ்சுது,'' என்று சுடச்சுட நெ# மணக்கும் பொங்கலை சுவைத்தவாறே, சித்ரா பேசினாள்.
""ஸ்டிரைக்கால, பள்ளி மாணவர்களுக்கு கூடுதலாக ஒரு நாள் லீவு கிடைச்சுடுச்சே,'' என்றாள் மித்ரா.
"ஆமாம். ஸ்டிரைக் தொடர்ந்தால், தனியார் பள்ளி கல்லூரி வாகன டிரைவர்களை வைத்து சமாளிக்கலாம், என்று ஒரு ஐடியா இருந்துதாம். ஆனால், அதுக்கு, வேலையில்லாமல் போய் விட்டது,'' என்றாள் சித்ரா.
""போலீஸ்காரங்க திடீர்னு ரொம்ப சுறுசுறுப்பா வேலை செய்வாங்க போலிருக்கே,'' என்று கூடையிலிருந்து முறுக்கை கடித்து கொண்டே கேட்டாள் மித்ரா.
""ஒரு வாரத்தில் மட்டும் நாலு இடங்களில், திருட்டு ஆசாமிகளை பிடிச்சிருக்காங்க. எல்லாம் பழைய கேஸ் தான். கடந்த ஒரு வருஷமாவே, திருட்டு சம்பவம் அதிகமாயிடுச்சு. வழக்கு பதிவு செய்வதிலோ, குற்றவாளிகளைப் பிடிக்கறதுலயோ, அதிகாரிகளும், ேபாலீசாரும் அக்கறை காட்டுறதில்லை. அடுத்தடுத்து பெரிய திருட்டு நடந்ததால், அதிகாரிகள் லேசா, உஷாராயிட்டாங்க,'' என்றாள் சித்ரா.
""ஓஹோ. அது தான் அங்கங்கே கிடைச்ச ஆட்களை "அரெஸ்ட்' பண்ணி, கணக்கு காட்டிட்டாங்களா?'' என்று ேகள்வி எழுப்பினாள் மித்ரா.
இருவரும், பொங்கல் சாப்பிட்டு முடித்ததும், மைதானத்துக்கு சென்று கொண்டிருந்தனர். ""சிட்டியில ரெண்டு இடங்களில் ஒரு அமைப்பின் கூட்டத்தில் மற்றொரு அமைப்பு சேர்ந்த நபர்கள் உள்ளே புகுந்து ரெண்டு இடத்திலும் கலாட்டாவாக மாறிடுச்சாமே,'' என்றாள் சித்ரா.
""ஆமாம். எந்த மத அமைப்பின் கூட்டம் என்றாலும் அங்கு ஐ.எஸ்., மற்றும் கம்யூனல் விங்க் போலீசார் தீவிர கண்காணிப்பில் இருப்பது வழக்கம். ஆனால், காங்கயம் ரோ, வள்ளியம்மை நகரில் நடந்த ஒரு அமைப்பு கூட்டத்தில், மாற்று அமைப்பினர் உள்ளே புகுந்து கலாட்டா ஏற்பட்டுச்சு. இதை தெரிஞ்ச உடேன, "ஏன் இப்படி நடந்தது. ஏன், இவ்ளோ அசால்ட்டா இருக்கீங்க?'ன்னு கேட்டு, ஹையர் அபிஷியல்ஸ், ரெண்டு பிரிவு போலீஸ்காரர்களை, தாளிச்சு எடுத்துட்டாங்களாம்,'' என்று மித்ரா விளக்கினாள்.
""நானும் கேள்விப்பட்ேடன். பெரிய அதிகாரிகளுக்கு, எப்பவும் "லாவணி' பாடிட்டு இருந்தா, இப்படிதான் நடக்கும். "சாட்டை' சுழற்றினால் மட்டுமே, வேலை நடக்கும்,'' என்று சித்ரா கூறவும், கயிறு இழுக்கும் போட்டி துவங்கவும் சரியாக இருந்தது.
அதை பார்த்து கொண்டே, ""வீரபாண்டி ஸ்டேஷனில், ஒரு ஏட்டு, "பெட்டி' கேஸ்களில் சம்பந்தப்பட்ட நபர்களிடம் ஆயிரக்கணக்கில், "வைட்டமின் "ப' வாங்கி கொண்டு அனுப்பிடுவாராம். இப்போ, அதே ஏட்டு, கோர்ட் டியூட்டிக்கு மாத்திட்டாங்களாம். அங்கேயும் போயி, "கல்லா' கட்டுறாராம். இவரை விட்டா, வேற ஆளே இல்லாத மாதிரி நடந்துக்குறாராம். சிட்டியில, எல்லா ஸ்டேஷனிலும்,இதே நிலைமைதானாம்,'' என்று சித்ரா போலீஸ் மேட்டரை ஆரம்பித்தாள்.
அப்போது, "கயிறு இழுக்கும் போட்டியில், அகஸ்டியன் அணி முதலிடம்,'' என்று அறிவிப்பு வந்தது.
""ஓ.., அப்படியா, சங்கதி,'' என்ற மித்ரா, ""தெற்கு பகுதியிலுள்ள ஒரு அதிகாரிக்கு, கமிஷனர்கிட்ட தினமும் அர்ச்சனை கிடைக்குதாம். இதனாலே, என்ன öச#யறதுன்னு முழிக்கிறாராம். "பாவம், பல லகரம் கொடுத்து, இங்க வந்து, மாட்டிக்கிட்டாரு'ன்னு, அவேராட அனுதாபிகள் வெளிப்படையாவே பேசறாங்களாம்,'' என்ற ஒரு தகவலை சொல்லவும், "பானை உடைத்தல் போட்டியில், தங்கேவல் முதலிடம்,' என்று அறிவிப்பு வந்தது.
""அவரு அப்படின்னா. வெண்ணெய்க்கு பேர் போன ஊர்ல உள்ள ஸ்டேஷன் அதிகாரி, வசூலில் கலக்குறாராம்,'' என்று மித்ரா சொன்னதும்,
""கொஞ்சம் புரியும்படியா, சொல்லு,'' என்று சலித்து கொண்டாள் சித்ரா.
""அவேராட, லிமிட்டில, லாட்டரி விற்பனை சக்கைப்போடு போடுதாம். யாரும் கண்டுக்கறதில்லையாம். இதே, லாட்டரிக்காரங்க, சிட்டி லிமிட்டில் விற்பது தெரிஞ்சு, சரமாரியாக கேஸ் போட்டு உள்ளே தள்ளறாங்களாம். அதுக்கு பயந்துட்டு, அவுட்டரில் வந்து, "ஓஹோஹான்னு' விக்கிறாங்களாம்,"" என்றாள் மித்ரா.
""ஓ... அவரா? அவரை பத்தி நானும் ஒரு விஷயம் சொல்றேன் கேளு. அந்த அதிகாரி, ரூரல் லிமிட்டில் உள்ள கடைகளில், கா#கறி, பொருள் வாங்கிட்டு, பணம் தரதில்லையாம். மீறி, வியாபாரிங்க கேட்டா, "நான், சீக்கிரமா, ரூரலுக்கு வந்துடுவேன்னு,' சொல்லி மிரட்டுறாராம்,'' என்று சித்ராவும் தன் பங்குக்கு சொன்னாள்.
விளையாட்டு போட்டி முடிந்து, பரிசளிப்பு விழா துவங்கியது. ""புதையல் வேட்டை போட்டியில், சுந்தரபாண்டியன் அணிமுதலிடம்,'' என்று அறிவிக்கேவ, அந்த அணியினர் ஓடிச்சென்று, கை நிறைய பரிசுகளை வாங்கி சென்றனர். இருள் சூழ துவங்கியதும், ""சரி, வாங்க. கிளம்பலாம்,'' என்று மித்ரா சொன்னதும், சித்ரா வண்டியை ஸ்டார்ட் செய்தாள். "ஓலையக்கா கொண்டையிலே...' என ஒலிபெருக்கியில் பாடல் கேட்டதும், ""ரொம்ப,சூப்பரா இருந்துச்சுல்லே,'' என்று வண்டியை ஓட்டிக்கொண்டே, சித்ரா கூறவும், ""ம்..ம்..'' என்று மித்ராவும் ஆமோதித்தாள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X