ஹஜ் மானியம் ரத்து: மத்திய அரசு அறிவிப்பு

Updated : ஜன 16, 2018 | Added : ஜன 16, 2018 | கருத்துகள் (223) | |
Advertisement
புதுடில்லி: ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள முஸ்லிம்களுக்கு அளித்து வந்த மானியத்தை மத்திய அரசு ரத்து செய்தது. 2012ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உததரவின் அடிப்படையில், இந்த முடிவு எடுக்கப்பட்டதாக, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவுக்கு ஆண்டு தோறும் ஏராளமான முஸ்லிம்கள் புனிதப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்தியாவிலிருந்து
ஹஜ், புனித பயணம், முஸ்லிம்கள்,  மத்திய அரசு, அதிரடி

புதுடில்லி: ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள முஸ்லிம்களுக்கு அளித்து வந்த மானியத்தை மத்திய அரசு ரத்து செய்தது. 2012ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உததரவின் அடிப்படையில், இந்த முடிவு எடுக்கப்பட்டதாக, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவுக்கு ஆண்டு தோறும் ஏராளமான முஸ்லிம்கள் புனிதப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்தியாவிலிருந்து செல்லும் ஹஜ் பயணியருக்கு மத்திய அரசு, கடந்த 1954ம் வருடம் முதல் மத்திய அரசு மானியம் மானியம் வழங்கி வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும், இந்தியாவிலிருந்து சராசரியாக 1.5 லட்சம் பேர் ஹஜ் யாத்திரை மேற்கொள்கின்றனர். இவர்கள் ஒவ்வொருவரின் தலைக்கும் விமான டிக்கெட் கட்டணமாக 74 ஆயிரம் ரூபாயும், தினசரி செலவாக ரூ. 2,700ம் செலவு செய்யப்படுகிறது.கடந்த 2017 ம் வருடம் இதற்காக 700 கோடி ரூபாய் ஒதுக்கியிருந்தது. இது பழைய கணக்கு.கல்விக்கு செலவழிக்கப்படும்: அமைச்சர்இந்நிலையில், ஹஜ் மானியம் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி இந்த நடைமுறை அமல்படுத்தப்படுகிறது. இதனை மத்திய சிறுபான்மை துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்தார். மேலும், இந்த நிதி சிறுபான்மை பெண் குழந்தைகளின் கல்விக்காக செலவிடப்படும். கடல் வழியே யாத்திரை மேற்கொள்ள வழிவகை செய்யப்படும். சவுதி அரசு இதனை ஏற்று கொண்டுள்ளது. என்றும் கூறினார்.

மத்திய அரசின் அறிவிப்பால், இந்த வருடம் 1.75 லட்சம் பேர் மானியம் இல்லாமல் ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள வேண்டி இருக்கும்.


காரணம் என்ன2012 மே மாதம் ஒரு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் அப்போதைய நீதிபதிகள் அல்டாமஸ் கபீர் மற்றும் ரஞ்சனா தேசாய் அடங்கிய பெஞ்ச், ஹஜ் மானியத்தை அடுத்த 10 ஆண்டுகளுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கும்படி உத்தரவிட்டிருந்தது. அதன்படியே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement
வாசகர் கருத்து (223)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh - Kerala,இந்தியா
22-ஜன-201819:03:30 IST Report Abuse
Ramesh இங்க யாருக்காவது பிஜேபி அரசை எதிர்க்கணும்னா முதல்ல போய் உங்க ஒவைசிய கேளுங்க.... என்ன அவரு தான் ஹஜ் மானியம் வேண்டாம்னு கேஸ் போட்டவர்....
Rate this:
Cancel
Mubarak - Chennai,இந்தியா
17-ஜன-201819:21:55 IST Report Abuse
Mubarak ஹஜ் மானியம் என்பதே சுத்த மோசடி ஹஜ் பயணம் செல்வோருக்கு மத்திய அரசு ஒரு பைசா கூட மானியமாக வழங்குவதில்லை. மாறாக ஒவ்வொரு ஹஜ் பயணியிடமிருந்தும் பல்லாயிரம் ரூபாய்களை மத்திய அரசு சுரண்டி கொள்ளையடிக்கின்றது என்பதே உண்மையாகும். சவூதி அரசாங்கம் இந்திய முஸ்லிம்களில் எத்தனை பேருக்கு விசா வழங்க ஒப்பந்தம் செய்துள்ளதோ, அதில் எழுபது சதவிகிதம் பேரை ஹஜ் கமிட்டி மூலம் மத்திய அரசு அனுப்பி வைக்கிறது. மீதி முப்பது சதவிகிதம் பயணிகள் அரசின் அங்கீகாரம் பெற்ற தனியார் சுற்றுலா நிறுவனங்களுக்கு ஒதுக்கப்படுகிறது. ஹஜ் கமிட்டி மூலம் பயணம் செய்பவர்கள் இந்திய அரசுக்குச் சொந்தமான ஏர் இந்தியா, சவூதி அரசுக்குச் சொந்தமான சவூதி ஏர்லைன்ஸ் ஆகிய இரு விமானங்களில் மட்டும் தான் பயணிக்க வேண்டும் என்று சட்டம் இயற்றி வைத்துள்ளார்கள். ஹஜ் நேரத்தில் விமானக் கட்டணத்தை 25 ஆயிரத்தில் இருந்து ஒரு லட்சமாக உயர்த்துவார்கள். இந்தக் காலகட்டத்தில் மற்ற விமானங்களில் 20 ஆயிரமே கட்டணமாக இருக்கும். ஆனால் ஹஜ் கமிட்டி மூலம் தேர்வானவர்கள் அந்த விமானங்களில் பயணிக்க அனுமதி இல்லை. அதாவது விமானக் கட்டணம் 25 ஆயிரத்தை ஒரு லட்சமாக உயர்த்துவதால் நம்மிடம் வாங்கிய தொகையில் மீதமிருந்த 25 ஆயிரத்தையும் எடுத்துக் கொண்டு ஒவ்வொரு ஹஜ் பயணிக்காகவும் ஏர் இந்தியாவுக்கு (அதாவது தனக்குத்தானே) அரசு ஐம்பதாயிரம் ரூபாய்களை மானியம் என்ற பெயரில் வழங்கும். ஹாஜிகளுக்கு வழங்காது. மானியம் என்பது ஹஜ் பயணிகளுக்கு அல்ல. இந்திய அரசின் விமான நிறுவனத்துக்குத்தான். அதைத்தான் ஹஜ் மானியத்துக்கு இந்திய அரசு கோடிக்கணக்கில் செலவிடுவதாக பொய்ப் பிரச்சாரம் செய்து முஸ்லிம்களையும், முஸ்லிமல்லாத மக்களையும் ஒரே நேரத்தில் மூடர்களாக்கி வருகிறார்கள்.
Rate this:
jagan - Chennai,இலங்கை
18-ஜன-201807:00:05 IST Report Abuse
jaganஏர் இந்தியா நஷ்டத்தில் போவதே இந்த ஹஜ் யாத்திரியால தான்...
Rate this:
Azhagan Azhagan - Chennai,இந்தியா
18-ஜன-201812:13:35 IST Report Abuse
Azhagan Azhaganஇந்த விளக்கத்தை மானியம் ரத்து செய்வதற்கு முன்னால் சொல்லியிருந்தால் உண்மை என்று நம்பலாம். ரத்து செய்த பின்னால் கூறுவது புலம்பல் என்று என்ன தோணுகிறது...
Rate this:
Cancel
Ramesh - Ann Arbor,யூ.எஸ்.ஏ
17-ஜன-201801:34:17 IST Report Abuse
Ramesh நான் பிறப்பால் ஹிந்து அனால் எந்த மதத்தையும் பின்பற்றவில்லை அனால் வரிகட்டுகின்றேன் எந்த மதமாக இருந்தாலும் ஏன் வரிப்பணத்தை வீணடிக்க வேண்டும்?? இது ஒரு நல்ல முடிவு நான் வரவேற்க்கின்றேன்
Rate this:
விமர்சகன் - kovai,இந்தியா
19-ஜன-201813:47:11 IST Report Abuse
விமர்சகன்வங்கியில் கடன் வாங்கிட்டு கட்டாமல் இருக்குறவங்கள பிடிக்க சொல்ல வேண்டியதுதானே அதுவும் மக்கள் வரி பணம்தானே...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X