கமல் அரசியல் பிரவேசம்: பிப்.,21ல் கட்சி பெயர்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

கமல் அரசியல் பிரவேசம்: பிப்.,21ல் கட்சி பெயர்

Updated : ஜன 17, 2018 | Added : ஜன 17, 2018 | கருத்துகள் (51)
Advertisement

சென்னை: பிப்.,21ம் தேதி கட்சியின் பெயரை அறிவிக்கும் கமல், ராமநாதபுரத்தில் இருந்து தனது சுற்றுப்பயணத்தை துவங்குகிறார்.

இதுகுறித்து கமல் வெளியிட்டுள்ள அறிக்கை: ஜனநயகத்தின் நாயகர்களை சந்திக்க சுற்றுப்பயணம் செய்ய உள்ளேன். உங்கள் ஆதரவோடு இந்த பயணத்தை துவக்குகிறேன். தலைவன் வழிநடத்தவே இருக்க வேண்டும். என்னை வளர்த்தெடுத்த சமூகத்திற்கு நன்றி தாண்டி ஆற்ற வேண்டிய கடமைகள் உள்ளன. இந்த சந்திப்பு புரட்சிக்காகவோ, கவர்ந்திழுக்கவோ அல்ல; எனது புரிதல் மற்றும் எனது கல்விக்காக மட்டுமே.

குடியரசில் குடிமக்களை உயர்த்த வேண்டும். அதை நோக்கி என் பயணம் இருக்கும். நாம் சேர்ந்து தேரை இழுக்கிறோம் என்ற எண்ணம் வேண்டும். அதுவே ஜனநாயகம். கரம் கோரத்திடுங்கள்; களத்தில் சந்திப்போம். இவ்வாறு அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பிப்.,21ல் கட்சி பெயர்

பிப்.,21ல் தனது கட்சி பெயரை அறிவிக்கும் கமல், அன்றே ராமநாதபுரத்தில் சுற்றுப்பயணத்தை துவங்குகிறார். முதற்கட்டமாக மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட மக்களை சந்திக்க உள்ளார்.

ஏற்கனவே ரஜினி அரசியல் பிரவேசம் குறித்து வெளியிட்டுள்ள நிலையில், தற்போது கமலும் தனது அரசியல் பிரவேசம் குறித்து அறிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Advertisement
வாசகர் கருத்து (51)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rajaram - delhi,இந்தியா
17-ஜன-201814:42:29 IST Report Abuse
rajaram கட்சியின் சின்னம் முத்தம்
Rate this:
Share this comment
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
17-ஜன-201813:22:05 IST Report Abuse
S.Baliah Seer கமலா, ரஜினியா என்றால் -கமல்தான் தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்தவர். ரஜினி தமிழ் மக்களிடம் சம்பாதித்ததை கர்நாடகாவில் முதலீடு செய்திருப்பதாக கூறுகிறார்கள். ரஜினி சினிமா டிக்கட்டுகள் குறைந்தது 1000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. காவிரி நதி நீர் பிரச்சினையில் வாயைக்கூட திறக்காத ரஜினியால் தமிழ் மக்களுக்கு நன்மைக்குப் பதிலாக தீமை மட்டுமே கிட்டும். கர்நாடக, தமிழ்நாடு இடையே மோதல்கள் உருவாகும். கமலை விமர்சிப்பவர்கள் ரஜினியை விமர்சிக்காதது ஆச்சரியமாக உள்ளது.அரசியலை வியாபாரமாக்கும் போக்கு விபரீதத்தில் தான் முடியும். ரஜினி ஒரு வியாபாரி. எல்லாவற்றிற்கும் மேலாக ஆன்மீகத்தின் பெயரால் ஊரை ஏமாற்றுபவர். கமல் நியாயவாதி மட்டுமல்ல, மிதவாதியும் கூட. இந்த இருவரில் நியாயவாதிகள் கமல் பக்கமே நிற்பார்கள்.
Rate this:
Share this comment
Ramesh M - COIMBATORE,இந்தியா
18-ஜன-201819:11:48 IST Report Abuse
Ramesh M1992 ல் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் காவேரிக்க உண்ணாவிரதம் இருந்தார் கர்நாடகாவுக்கு எதிராக. அப்பொழுது திரு. ரஜினிகாந்த் அவர்கள் நேரிடியாக உண்ணாவிரத இடத்திற்கு சென்று பூங்கொத்து கொடுத்து விவசாயிகள் நீர் தேவைக்காக முதல்வேரே உண்ணாவிரதம் இருந்ததை நேரிடியாக சென்று பாராட்டி வந்தார். இதனால் கர்நாடகாவில் ரஜினிக்கு எதிர்ப்பு முதன்முதலில் வந்தது. கர்நாடகாவை பகைத்துக்கொண்டு தமிழ் நாட்டிற்க்காக அன்று யாருடைய தூண்டுதலோ இல்லாமல் நடிகர்கள் மற்றும் கலைத்துறை சேர்த்தவர்கள் யாரும் குரல் கொடுக்காததற்கு முன்பே நடந்தது. 2 . பிறகு 1995 ல் முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு எதிராக குண்டு கலாச்சாரத்திற்கு எதிராக திரு ரஜினிகாந்த் அவர்கள் குரல் கொடுத்ததால் அன்று இருவருக்கும் பகை உருவானது. அப்பொழுது திரு ரஜினிகாந்த் அவர்கள் கட்சி ஆரம்பிப்பர் என ஊடகங்கள் தங்கள் வியாபாரதிக்காக பிரசுரித்தார்கள். அப்பொழுது வேறு ரசிகர்மன்றத்தை சேர்த்தவர்கள் மக்கள் தங்கள் சுய நலத்திற்க்காக ரஜினிகாந்த் ரசிகர்மன்றத்தில் சேர வந்தார்கள். இது ஒரு தவறானதாக ஆகிவிடும் என்று தன் சுயநலம் கருதாமல் ரசிகர்மன்ற சேர்ப்பை நிறுத்தினார். வியாபாரியாக இருந்திருந்தால் தன் சுயநலனுக்காக இந்த நிகழ்வை பயன்படுத்தியிருப்பார்கள்....
Rate this:
Share this comment
Cancel
A.SENTHILKUMAR - Neyveli,இந்தியா
17-ஜன-201813:16:07 IST Report Abuse
A.SENTHILKUMAR கமல் சாருக்கு வாழ்த்துக்கள், முதலில் உங்களுடைய சுற்றுப்பயணம் முழுவதும் கிராமங்களில் இருக்கவேண்டும். அப்பொழுதுதான் உங்களால் வெற்றிபெறமுடியம். கிராம மக்களிடம் நல்ல அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள். இதைத்தான் நாங்கள் உங்களிடத்தில் எதிர்பார்க்கிறோம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X