பாதை எங்கும் வாகனம் தேவை கவனம்| Dinamalar

பாதை எங்கும் வாகனம் தேவை கவனம்

Added : ஜன 17, 2018 | கருத்துகள் (4)
 பாதை எங்கும் வாகனம் தேவை கவனம்

ந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப விபத்துக்களும், உயிர்பலிகளும் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்தியாவில் 2016ம் ஆண்டில் 4,80,652 விபத்துகள் நடந்துள்ளன. இதில் 1,36,071 பேர் பலியாகி
யுள்ளனர்.இதில் 33.8 சதவீதவிபத்துகள் டூவீலர்களால் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 2016அக். வரை 71,431 விபத்துக்கள் நடந்துள்ளன. இதில் 17,218 பேர் பலியாகியுள்ளனர். 2017 அக். வரை 55,508 விபத்துக்கள் நடந்துஉள்ளன. இதில் 14,077 பேர் பலியாகியுள்ளனர்.


விபத்து நடைபெறும் இடங்கள்சாலை சந்திப்புகள், ரவுண்டானா, நான்கு வழிச்சாலைகளில் மத்திய இடைவெளி பகுதிகள், வளைவுகள், பாதசாரிகள் சாலையை கடக்கும் இடங்கள், பேருந்து நிறுத்தங்கள், பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் பெரும்பாலான விபத்துகள் நடைபெறுவது ஆய்வில் தெரிய வந்துள்ளது.


காரணங்கள்
அதிக வேகம், அலைபேசியில் பேசிக் கொண்டு வாகனத்தை இயக்குவது, மது அருந்தி வாகனம் இயக்குவது, சரக்கு வாகனத்தில் அதிக பாரம் ஏற்றுதல், துாக்க கலக்கத்தில் இயக்குவது, சாலை விதிகள், சிக்னல்கள், சின்னங்களை மதிக்காதது, அஜாக்கிரதையாக, அவசரம், சைகைகள் காண்பிக்காமல் வாகனத்தை திருப்புவது போன்றவைகளால் விபத்துக்கள் ஏற்படுகிறது. முன் செல்லும் வாகனத்திலிருந்து போதிய இடைவெளி இல்லாமல் வாகனத்தை பின் தொடர்வது.
வளைவுகள் மற்றும் வாகனம் எதிரில் வரும் போது முன் செல்லும் வாகனத்தை முந்துவது.போதிய ஓய்வு இல்லாமல் வாகனத்தை தொடர்ந்துஇயக்குவது போன்றவைகளால் விபத்துக்கள் ஏற்படுகிறது.
நான்கு வழிச்சாலைகளில்

நான்கு வழி சாலையில் வாகனங்களை இடதுபக்க பாதையில் ஓட்டிச்செல்வது மிகவும் பாதுகாப்பாக அமையும். வலதுபக்க பாதையில் வாகனத்தை ஓட்டவேண்டிய சூழ்நிலையில், சாலையை பிரிக்கும் தடுப்பு சுவரை ஓட்டியபடி வாகனத்தை இயக்காமல், தடுப்பு சுவரிலிருந்து ஒன்றரை அடி துாரம் இடைவெளி விட்டு இடது புறமாக வாகனத்தை செலுத்தினால், மத்திய தடுப்பு சுவரில் வாகனம் மோதுவதை தவிர்க்கலம்.உரிய முறையில் சிக்னல் செய்யாமல் பாதை மாறுவதையும், முன் செல்லும் வாகனத்தை தொடர்ந்து ஒட்டியபடியும், அதி வேகமாக செல்வதையும் தவிர்த்தால் விபத்தை தவிர்க்க முடியும். நான்கு வழிச்சாலையில் இரண்டு சக்கர வாகனத்தை எதிர் திசையில் ஒட்டி வருவதாலும், வாகனத்தை திருப்புவதற்கு அமைக்கப்பட்டுள்ள இடமான மத்திய இடைவெளி பகுதியில் வாகனத்தை திருப்பாமல் சாலைகளை பிரிக்கும் மத்திய தடுப்பு சுவரின் வழியாக பாதை அமைத்து திடீரென சாலையை கடப்பதாலும் விபத்துக்கள்
ஏற்படுகிறது.இரண்டு சக்கர வாகனம் செல்வதற்காக சாலையில் இடதுபுறமாக 3 அடி அகலத்தில் அமைக்கப்பட்டு வெள்ளை கோட்டால் பிரிக்கப்பட்டுள்ள பாதையில் இயக்காமல், ரோட்டின் மையப்பகுதியில் செல்வதால், விபத்து ஏற்படுகிறது. கிராமத்து சாலை சந்திப்புகள்மற்றும் நான்கு திசை சாலை சந்திப்புகள், நான்கு வழிச்சாலையை ஒட்டி கிராமங்கள் அமைந்துள்ள இடங்கள்.பாதசாரிகள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் திடீரென சாலையை கடப்பதற்கு வாய்ப்புஉள்ளதால், அந்த இடங்களில் வாகனத்தின் வேகத்தை குறைத்து, கவனமாக செல்ல வேண்டும். வாகனம் பழுது அடைந்தால் உடனடியாக வாகனத்தை அகற்றி சர்வீஸ் சாலையில் நிறுத்த வேண்டும். இதனால் சாலையில் பின்பக்கமாக வரும் வாகனங்கள் மோதாமல் விபத்து தவிர்க்கப்படுகிறது.


அதிவேகம்


அதிவேகமாக வாகனத்தை ஓட்டுவது விபத்துக்கு வழிவகுக்கிறது. வேகம் வீரத்தின் அடையாளம் அல்ல; விவேகத்தின் பலவீனம் என்பதை ஒவ்வொரு ஓட்டுனரும் உணர்ந்து பாதுகாப்பான வேகத்திலேயே வாகனத்தை ஓட்டவேண்டும். காரில் பயணம் செய்யும் அனைவரும் சீட்பெல்ட் அணிய வேண்டும். இருசக்கர வாகனத்தை தவிர்த்து மற்ற வாகன ஓட்டுநர்கள் சீட் பெல்ட் கட்டாயம் அணிய வேண்டும். இரு சக்கர வாகன ஓட்டுநர்கள் தலைக்கவசம் அணிந்து வாகனத்தை இயக்க வேண்டும்.


பெற்றோர் கவனிக்க
பெற்றோர் தங்களின் பிள்ளை


களுக்கு 18 வயது பூர்த்தி ஆன பின்பு, ஓட்டுநர் உரிமம் எடுத்த பின்பே வாகனத்தை இயக்க கொடுக்க வேண்டும். நெடுந்துாரம் செல்வதற்கு அனுமதிக்க கூடாது. அதிக கனதிறன் கொண்ட வாகனங்களை இயக்க தரக்கூடாது. இளங்கன்று பயமறியாது என்பார்கள். அவர்கள் ஆர்வக் கோளாறால் வாகனத்தை அதிவேகமாகவும், குறுக்கும் நெடுக்குமாக இயக்குவது, மூன்று அல்லது நான்கு பேர்களாக பயணிப்பது மற்றும் மற்றவர்களைஅச்சுறுத்தும் வகையில் பல குரல் ஒலிப்பான்களை பொருத்தி கொண்டு வாகனத்தை இயக்குவது போன்ற தவறுகளை செய்வதன் மூலம் விபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

சாலை விதிகள்

சாலை விதிகளை முழுமையாக கடைபிடிப்பதுடன், விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையுடனும், பொறுமையுடனும் கோபப்படாமலும் கனத்தை இயக்க வேண்டும். ஓட்டுனர் மனநிலை, உடல்நிலை, வாகனத்தின் நிலை சரியாக இருந்தால் மட்டுமே வாகனத்தை இயக்க வேண்டும்.உடல் நலத்திற்காக, சாப்பிடுவதில் கவனம்செலுத்துவோம். நட்பை மதிப்பதாக உணர்ந்தால், மரியாதை செலுத்துவோம். பணத்தை மதிப்பதாக உணர்ந்தால், அவசிய செலவுகள் செய்வோம்.உறவுகளை மதிப்பதாக உணர்ந்தால் முறிக்கமாட்டோம். தொழிலை மதிப்பதாக உணர்ந்தால், ர்ப்பணிப்புடன் செய்வோம். வாழ்க்கையை மதிப்பதாக உணர்ந்தால், உயர்ந்த நோக்கத்துடன் வாழ்வோம். சாலை விதிகளை மதிப்போம், விலைமதிப்பற்ற உயிர்களை காப்போம்.விபத்து இல்லாத தமிழகத்தை உருவாக்க, ஒவ்வொருவருக்கும் பங்கு உள்ளது என்பதை உணர்ந்து சாலை விதிகளை கடைபிடித்து விபத்தை ஏற்படுத்தாத ஓட்டுனராக இருக்க வேண்டும். அப்போது தான் விபத்து இல்லாத தமிழகத்தை உருவாக்க முடியும். விபத்து ஏற்பட நான் காரணமாக இருக்க மாட்டேன்; விபத்து என்னால் ஏற்படாது என்று உறுதி எடுத்து விபத்துஇல்லாத தமிழகத்தை உருவாக்குவோம்.-நா.ரவிச்சந்திரன்வட்டார போக்குவரத்துஅலுவலர், ஸ்ரீவில்லிபுத்துார்99424 61122

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X