வைரமுத்து சொன்ன பொய்: ஆதாரப்பூர்வமாக அம்பலம்| Dinamalar

வைரமுத்து சொன்ன பொய்: ஆதாரப்பூர்வமாக அம்பலம்

Updated : ஜன 19, 2018 | Added : ஜன 18, 2018 | கருத்துகள் (404)
Advertisement
ஆண்டாள், ஸ்ரீரங்கம், வைரமுத்து,மாலிக்

சென்னை: ''ஆண்டாள் தேவதாசியாக வாழ்ந்தவர்'' என்று அபாண்டமான ஒரு குற்றச்சாட்டை பொதுமேடையில் வைத்த வைரமுத்துவின் கருத்துக்கு, ஆதாரப்பூர்வமான மறுப்பு கிடைத்துள்ளது. அவர் கூறியது மாபெரும் பொய் என்பதும் அம்பலமாகி உள்ளது.
ஜன.,7ம் தேதி ஸ்ரீவில்லிபுத்துாரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், 'தமிழை ஆண்டாள்' என்ற தலைப்பில் வைரமுத்து பேசும் போது, அமெரிக்காவின் இண்டியானா பல்கலைக்கழகம், சுபாஷ் சந்திர மாலிக்கை ஆசிரியராக கொண்டு வெளியிட்ட, indian movement: some aspects of dissent, protest and reform என்ற ஆய்வு நுாலில், ஆண்டாள் பற்றி இப்படி ஒரு குறிப்பு எழுதப்பட்டு இருக்கிறது. Andal was herself a devadasi who lived and died in srirangam temple என்று குறிப்பிட்டப்பட்டுள்ளது என்று கூறினார்.


ஆய்வே இல்லை:

ஆனால், அவர் குறிப்பிட்ட எஸ்.சி.மாலிக் புத்தகத்தை தேடும்போது இண்டியானா பல்லைக்கழகம் அப்படி ஒரு ஆய்வை நடத்தவேயில்லை என்பது தெரிய வந்தது. 1975ம் ஆண்டு சிம்லாவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் அட்வான்ட்ஸ் ஸ்டடீஸ் என்ற அமைப்பு ஒரு கருத்தரங்கை நடத்தியது. அதில், 45 இந்திய வரலாற்று அறிஞர்கள் பங்கேற்று, 26 கட்டுரைகளை வெளியிட்டனர். அந்த கட்டுரைகளின் தொகுப்பு பின்னர் Indian movements: Some Aspects of dissent protest and reform என்ற பெயரில் புத்தகமாக வெளியானது.
அந்த கட்டுரைகளை தொகுத்தவர் தான் எஸ்.சி.மாலிக்; எழுதியவர் அல்ல. அவரோ, இண்டியானா பல்கலையோ ஆண்டாள் பற்றிய ஆய்வை நடத்தவில்லை. அந்த புத்தகத்தில் ஆண்டாள் பற்றி, bhakti movements in south india என்ற கட்டுரையில் தான் ஆண்டாள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை எழுதியவர்கள் இந்தியாவை சேர்ந்த பேராசிரியர்கள் எம்.ஜி.எஸ்.நாராயணன் மற்றும் கேசவன். அதில் தான், Andal was herself a devadasi who lived and died in the Srirangam temple என்ற வரி இடம் பெற்றுள்ளது. இதற்கு, History of sri vaisnavas என்ற பெயரிலான டி.ஏ. கோபிநாத் ராவ் என்பவரின் புத்தகத்தின் ஐந்தாம் பக்கத்தில் தான் இதற்கான ஆதாரம் இருப்பதாக அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த புத்தகத்தின் ஐந்தாம் பக்கத்தில், ஆண்டாளின் முழு கதையும் இடம் பெற்றுள்ளது. பெரியாழ்வாரின் கனவில் கடவுள் தோன்றி ஆண்டாளை மணக்க சம்மதித்தாகவும், அவரை ஸ்ரீரங்கம் அழைத்து வரும்படி ஆணையிட்டதாகவும் அதில் சொல்லப்பட்டுள்ளது. அதன்படி பெரியாழ்வார் ஆண்டாளை ஸ்ரீரங்கம் கோவிலுக்கு அழைத்து சென்று பின்னர் தனியே ஸ்ரீவில்லிபுத்துார் திரும்பினார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பக்கத்தில் தேவதாசி என்ற வார்த்தையே இல்லை. பிறகு எப்படி ஆண்டாளை தேவதாசி என்று நாராயணன் குறிப்பிட்டார் என்று அவரிடம் தந்தி டிவி நிருபர் தொடர்பு கொண்டு கேட்ட போது அவர் அளித்த பேட்டி:
கே: அந்த கட்டுரையில் ஆண்டாள் ஸ்ரீரங்கம் கோவிலில் வாழ்ந்த ஒரு தேவதாசி என குறிப்பிடப்பட்டுள்ளதே? எந்த ஆதாரத்தின் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது?
நாராயணன்: ஆண்டாள் தேவதாசி என்பதற்கான பிரத்யேக குறிப்புகள் இல்லை.
கே: உங்களுடைய ஆய்வில் ஆண்டாள் தேவதாசி என்பதற்கான ஆவணங்கள் ஏதாவது கிடைத்ததா?
நாராயணன்: இல்லை. அது போன்று குறிப்பிட்ட ஆதாரங்கள் ஏதும் இல்லை.
கே: ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ள கல்வெட்டுகளிலோ, வேறு ஏதேனும் ஆவணங்களிலோ ஆண்டாள் தேவதாசி என்பதற்கான ஆதாரங்கள் உள்ளதா?
நாராயணன்: இல்லை. வாய்மொழியாக சொல்வதை வைத்து தான் பார்க்க வேண்டி உள்ளது. எழுத்துப்பூர்வமாக எதுவும் இல்லை.
கே: நேரடி ஆதாரங்கள் ஏதும் இல்லாத நிலையில், ஒரு புரிதலில் அந்த முடிவுக்கு வந்துள்ளீர்கள் என சொல்லலாமா?
நாராயணன்: இது ஒரு அனுமானம் தான்.
இவ்வாறு அவர் பேட்டி அளித்தார்.


வைரமுத்துவின் பதில் என்ன:

ஆண்டாள் தேவதாசி என்று சொல்லப்படுவதற்கு நேரடி ஆதாரம் இல்லை. அது அனுமானத்தின் பேரில் தான் என்பது தான் வைரமுத்து குறிப்பிட்ட கட்டுரையின் ஆசிரியர் தரும் விளக்கம்.

இது குறித்து ஒரு வைணவ அறிஞர் கூறும்போது, ‛‛எந்த ஆதாரமும் இல்லாத ஒரு தகவலை, ஆதாரப்பூர்வ தகவலைப் போன்று வைரமுத்து பேசி உள்ளார். அதுவும், நடக்காத ஒரு ஆய்வை, நடத்தாத ஒரு வெளிநாட்டு பல்கலைக்கழகத்தின் பெயருடன் அவர் எவ்வாறு குறிப்பிட்டார்.
அக்கட்டுரையை எழுதிய நாராயணன் என்பவரே, ஆண்டாள் பற்றிய செவி வழி செய்தியை மட்டுமே குறிப்பிட்டதாக கூறியுள்ளார். இப்படிப்பட்ட, ஆதாரமற்ற ஒரு தகவலை வைரமுத்து ஏன் பரப்பினார். இதன் மூலம் வேண்டுமென்றே ஆண்டாளை வைரமுத்து அசிங்கப்படுத்தி உள்ளார் என்பது புலனாகிறது. அவரது உள்நோக்கமும் புரிகிறது. கடவுளாக வணங்கும் ஒருவரைப் பற்றி, மாபெரும் பொய்யை பேசிய வைரமுத்து, இனிமேலாவது பொய் சொன்னேன் என ஒப்புக்கொள்வாரா. பகிரங்க மன்னிப்பு கேட்பாரா'' என்று கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (404)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh Tranz - perambalur,இந்தியா
24-ஜன-201810:16:38 IST Report Abuse
Pugazh Tranz சரியாக தெரியாமல் உளறக்கூடாது
Rate this:
Share this comment
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
23-ஜன-201813:21:58 IST Report Abuse
மலரின் மகள் வைரமுத்து போன்றோர், தேவதாசி முறைகளை சுதந்திர காலத்தில் அறவே ஒழிக்க பாடுபடுத்திய நல்லோர்கள் சான்றோர்கள் பற்றி படித்தாலும் அது அவர்கள் வக்கிர புத்தியில் ஏறாது போலும். புனிதமானவர்களை இன்றைய காலகட்டத்து சொற்றொடர் கொண்டு கேவலமாக சித்தரித்தது, வன்மையாக கண்டிக்க தக்கது. வைரமுத்து அதற்காக மன்னிப்பு கோரி தான் செய்தது மிகவும் தவறுதான், தவறாக புரிந்து கொண்டவன், என்று குற்றத்தை ஒப்பு கொள்ளவேண்டும். அவனுக்கு இன்று யார் வக்காலத்து வாங்குகிறார்கள் என்றால் இந்து மத கடவுள் எதிர்ப்பு கொண்டோர் தான். தமிழகம் சுபிக்ஸம் அடையவேண்டும். மும்மாரி மழை பொழிய வேண்டும். ஆண்டாள் ராமானுஜம் தழைக்க வேண்டும். பொலிக பொலிக தமிழகம் பொலிக. நல்லது நடக்கும்.
Rate this:
Share this comment
Pathu - tirupur,இந்தியா
24-ஜன-201810:28:34 IST Report Abuse
Pathuவைரமுத்து கூறிய அந்த புத்தகத்தில் இல்லை என்றாலும்,மற்றும் ஒரு புத்தகத்தில் உள்ளதை ஒரு தரப்பினர் ஒத்துக்கொள்கிறார்கள் அவ்வாறு இருக்கும்போது ,வைரமுத்து கூறியதை மட்டும் பெரிது படுத்தும் இவர்கள் ஏன் திரு நாராயணன் எழுதியதை கவனத்தில் எடுத்து அவரை கன்னிக்கவில்லை . ....
Rate this:
Share this comment
Namasivayam Chokkalingam - Appleton, WI ,யூ.எஸ்.ஏ
10-பிப்-201801:12:34 IST Report Abuse
Namasivayam Chokkalingamவைரமுத்து கசடன். நாராயணன் நாக்கில் ................. இருக்கிறது. அதானால் தான் அந்த துர்நாற்றம் ஆண்டாளை அவதூறு பண்ணினால் தமிழை அவதூறு பண்ணியிருக்கிறான்கள். தாயையும் தமிழையும் மதிப்பவன் எவனும் இனி சொத்தைமுத்துவை சீண்டமாட்டான்....
Rate this:
Share this comment
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
23-ஜன-201813:06:12 IST Report Abuse
மலரின் மகள் வைரமுத்து போன்றோர் போலியானவபர்கள் என்ற வாதம் என்றோ சொல்லப்பட்டது. பின்னாளில் தான் அவர் கண்ணதாசனை படித்து அவர் போன்று எழுதுவதற்காக காப்பி அடித்தவர். அத்தான் எண்ணத்தைத்தான் என்று தான் தான் என்று வரும் பாடலை அவர் விரும்பி அதன் படியே எழுதுவதற்கு காப்பி அடிக்க கற்று கொண்டு வந்தவர். அவர் மனைவி பொன்மணி வைரமுத்து திறமையானவர். அவர் எழுதி தந்த கவிதைகளை தனது பெயரில் பிரசுரித்தவர், குறிப்பாக சினிமா காதல் பாடல்கள். வைரமுத்து ஆணாதிக்கம் கொண்டவர் என்பதால் இவரால் பெண்ணின் மனஓட்டம் காதல் பற்றி எழுதுவதற்கு முடியவே முடியாது. இவர் கவிதையில் பெண்ணின் இயல்புகளை சரியாக எழுத தெரியாதவர். மனைவியால் உயரப்பெற்றவர் என்று சொல்லி கேள்வி பட்டிருக்கிறார்களாம் பலர். பின்னாளில் இவர் நிறைய அரைகுறையான போலியான செய்திகளை உண்மை கருத்து என்று நினைத்து படித்தவர், நிறைய படித்து இவர் வியாபார புத்தகங்களை தனக்குரிய பாணியில் எழுதியவராம். காதல் என்பதை விட காமத்தில் இவருக்கு ஆர்வம் உண்டு என்று இவரின் புத்தகங்களை படித்தவர்கள் உணர்வதாக சொல்கிறார்கள் சிலர். உதாரணமாக காட்டில் சிங்கம் எத்துணை முறை புணரும், என்பதை பற்றி இவர் எழுதி இருக்கிறார். இது எதற்கு இதனால் யாருக்கு என்ன பலன் என்று இவரை அறிய முயன்றவர்கள், இவரின் பாணியிலேயே ஒரு ஆசிரியரின் புத்தகம் அவரின் மனதை வெளிக்காட்டும் என்று இவர் கூறிய மொழியையே காட்டுகிறார்கள். விளக்கம் வேறு தருகிறார் செய்த தவற்றை மறப்பதற்கு. அந்த அறிஞர் கூறினார் இந்த அறிஞர் கூறினார் என்று அடுத்தவர் மீது பழிபோட்டு. ஆண்டாளை இவர் தனது தாய் என்று போற்றுகிறாராரம். தமிழ்பாளை அவரிடம் இருந்து உண்டாராம் என்று கூறிவிட்டு அவரை தவறான முறையில் சித்ததரிக்கிறார். நாய்க்கு புத்தி எப்படி இருக்கும் என்று அறிந்து கொள்ளவேணுமா? லூசுக்கள் பணத்திற்காக எப்படியும் பேசுவார்கள் போல.
Rate this:
Share this comment
Kurshiyagandhi - Arimalam,இந்தியா
24-ஜன-201810:23:24 IST Report Abuse
Kurshiyagandhiமிகவும் அருமை...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X