சென்னை : அரசு பஸ் கட்டணத்தை உயர்த்தும் உத்தரவை தமிழக அரசு நேற்று அதிரடியாக வெளியிட்டுள்ளது. இந்த புதிய கட்டண உயர்வு இன்று (ஜன.,20) முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன்படி, எந்த ஊரில் எவ்வளவு கட்டணம் உயர்ந்துள்ளது என்ற விபரம் :
சென்னையில் கட்டண விபரம் :
சாதாரண பஸ் - ரூ.6 முதல் ரூ.25 வரை
எக்ஸ்பிரஸ் பஸ்கள் - ரூ.9 முதல் ரூ.37 வரை
டீலக்ஸ் பஸ்கள் - ரூ.13 முதல் ரூ.51 வரை
இரவு பஸ்கள் - ரூ.11 முதல் ரூ.49 வரை
வால்வோ பஸ்கள் - ரூ.28 முதல் ரூ.159 வரை
தற்போது அரசு விரைவுப்பேருந்தில் மதுரைக்கு ரூ.325-ஆக உள்ள கட்டணம் இனி ரூ.510-ஆக உயரும். அதே போல குமரிக்கு தற்போது ரூ.505-ஆக உள்ள விரைவுப் பேருந்து கட்ணம் ரூ.250 அதிகரித்து ரூ.755 ஆகியுள்ளது. இதே போல கட்டண உயர்விற்கு பின் நெல்லைக்கு செல்ல சென்னையிலிருந்து டிக்கெட் கட்டணம் அரசு விரைவுப் பேருந்தில் ரூ.664 ஆக அதிகரித்துள்ளது. தற்போது இந்த கட்டணம் ரூ.440 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இருந்து திருவண்ணாமலை செல்லும் பஸ் கட்டணம் ரூ.150 லிருந்து ரூ.206 ஆக உயர்வு. சென்னையில் இருந்து புதுச்சேரி செல்லும் பஸ் கட்டணம் ரூ.125 லிருந்து ரூ.196 ஆக உயர்கிறது. சென்னையில் இருந்து காரைக்குடி செல்லும் பஸ் கட்டணம் ரூ.300 லிருந்து ரூ.480 ஆக உயர்கிறது. சென்னையில் இருந்து ஓசூர் செல்லும் பஸ் கட்டணம் ரூ.225ல் இருந்து ரூ.350 ஆக உயர்கிறது. சென்னையில் இருந்து கும்பகோணம் செல்லும் பஸ் கட்டணம் ரூ.215ல் இருந்து ரூ.345 ஆக உயர்கிறது. சென்னையில் இருந்து சேலம் செல்லும் பஸ் கட்டணம் ரூ.240ல் இருந்து ரூ.383 ஆக உயர்கிறது. சென்னையில் இருந்து திருச்சி செல்லும் பஸ் கட்டணம் ரூ. 200ல் இருந்து ரூ.308 ஆக உயர்கிறது. சென்னையில் இருந்து கோவை செல்லும் பஸ் கட்டணம் ரூ.400ல் இருந்து ரூ.600 ஆக உயர்கிறது.