அலட்சிய போலீசாரால் உயிரிழந்த இளைஞர்கள்

Added : ஜன 20, 2018
Advertisement

சஹாரன்பூர்:'கார் இருக்கையில் ரத்தக் கறை படிந்துவிடும்' எனக் கூறி, விபத்தில் அடிபட்டு, உயிருக்கு போராடிய இளைஞர்களை, காப்பாற்றத் தவறிய போலீசாரின் செயல், சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள, சஹாரன்பூரைச் சேர்ந்த இரு இளைஞர்கள், மோட்டார் சைக்கிளில் செல்லும் போது, சாலையில் உள்ள கம்பத்தில் மோதினர்.
இருவரும் பலத்த காயமடைந்து, ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்தனர்.
சற்று நேரத்தில், போலீஸ் ரோந்து கார், சம்பவ இடத்துக்கு வந்தது. அதிலிருந்த மூன்று போலீசாரும், இளைஞர்களை காப்பாற்றாமல் வேடிக்கை பார்த்தபடி நின்றனர். பதற்றமடைந்த பொதுமக்கள், உயிருக்கு போராடும் இளைஞர்களை, மருத்துவமனைக்கு துாக்கிச் செல்லும்படி, போலீசாரிடம் கூறினர்.

'இவர்களை காரில் ஏற்றினால், சீட்டில் ரத்தக் கறை படிந்துவிடும்' என, போலீசார் அலட்சியமாக பதிலளித்து உள்ளனர்.இவர்கள் பேசி கொண்டிருக்கும் போதே, உள்ளூர் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து வந்த ஜீப், இளைஞர்களை, மருத்துவமனைக்கு துாக்கிச் சென்றது. ஆனால், இரு இளைஞர்களும் ஏற்கனவே இறந்து விட்டதாக, டாக்டர்கள் தெரிவித்தனர்.

விபத்து நடந்த இடத்தில் இருந்த ஒருவர், போலீசாரின் அலட்சிய செயலை, மொபைல் போனில் பதிவு செய்துஉள்ளார். இந்த, 'வீடியோ' சமூக ஊடகங்களில் வேகமாக பரவுகிறது. இதையடுத்து, அலட்சியமாக செயல்பட்ட மூன்று போலீசாரும், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டு உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X