'என் உயிருக்கு ஆபத்து' முத்தாலிக் அலறல்

Added : ஜன 20, 2018
Share
Advertisement

பெங்களூரு:'ஆர்.எஸ்.எஸ்., மூத்த தலைவர்களால், என் உயிருக்கு ஆபத்து' என, ஸ்ரீராம் சேனா நிறுவனத் தலைவர், பிரமோத் முத்தாலிக், பகிரங்கமாக குற்றஞ்சாட்டி உள்ளார்.கர்நாடகாவில், 2009 புத்தாண்டு கொண் டாட்டத்தின் போது, மங்களூரு, மதுபான பாரில் இருந்தவர்களை கண்மூடித்தனமாக தாக்கி பரபரப்பை ஏற்படுத்தியவர், ஸ்ரீராம் சேனா தலைவர், பிரமோத் முத்தாலிக்.
இவர், தனியார், 'டிவி'க்கு அளித்த பேட்டி:

எதிரிகள் யார் என்பது, எனக்கு நன்றாக தெரியும். காங்., கம்யூனிஸ்டுகள், பகுத்தறிவுவாதிகள், என் எதிரிகளாக உள்ளனர். எனக்கு எதிராக, அவர்கள் செயல்படுகின்றனர். ஆனால் சமீபகாலமாக, எனக்கு நெருக்கமானவர்களால், என் உயிருக்கு ஆபத்து உள்ளது.என் முதுகில் அவர்கள் குத்துகின்றனர்.

வி.எச்.பி., தலைவர், பிரவீன் தொகாடியாவுக்கு நேர்ந்த கொடுமை, எனக்கும் ஏற்படும் என, அஞ்சு
கிறேன். கர்நாடகாவில், ஆர்.எஸ்.எஸ்., மூத்த தலைவர், மங்கேஷ் பாண்டேவுக்கு என்னை பிடிக்கவில்லை. என்னை, கர்நாடகாவில் இருந்து வெளியேற்ற வேண்டும் என, அவர் சதித் திட்டம் தீட்டியுள்ளார். மக்களிடம் எனக்கு புகழ் பெருகி வருவது, அவர்களுக்கு பிடிக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.முத்தாலிக், சமீபத்தில், சிவசேனாவில் சேர்ந்தார். கர்நாடக சிவசேனா தலைவராக, முத்தாலிக் உள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X