இந்திய மீனவர்கள் 17 பேர் கைது

Added : ஜன 20, 2018
Advertisement

புதுடில்லி:பாக்., கடல் எல்லையில் மீன் பிடித்ததாக, இந்திய மீனவர்கள், 17 பேர், அந்நாட்டு கடற்படை வீரர்களால் கைது செய்யப்பட்டனர்.

அரபிக் கடலில் மீன் பிடிக்க சென்ற இந்திய மீனவர்கள், 17 பேர், நம் நாட்டு கடல் எல்லையை தாண்டி, பாக்., கடல் எல்லையில் நுழைந்ததாக, அந்நாட்டு கடற்படை வீரர்களால், நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை, சிறையில் அடைக்க, பாக்., கோர்ட் உத்தரவிட்டதை அடுத்து, அவர்கள் அனைவரும், கராச்சி சிறையில் அடைக்கப்பட்டனர்.

கைதான மீனவர்களில் பெரும்பாலானோர், குஜராத்தைச் சேர்ந்தவர்கள். பாக்., சிறையில் வாடிய, 145 இந்திய மீனவர்கள், டிச., 28ல் விடுதலை செய்யப்பட்ட நிலையில், தற்போது, இந்திய மீனவர்கள் மீண்டும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X