பொது செய்தி

தமிழ்நாடு

அடையாளச்சேரியில் பாதிரியார் தற்கொலை

Added : ஜன 21, 2018
Advertisement

கூவத்துார் : அடையாளச்சேரியில், கிறிஸ்துவ பாதிரியார் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.சென்னை அடுத்த, ராஜாகீழ்பாக்கத்தைச் சேர்ந்த, வேலு மகன் ராமமூர்த்தி என்கிற கிதியோன், 44; தற்போது, கூவத்துார் அடுத்த, அடையாளச்சேரி, கிழக்கு கடற்கரை சாலை அருகில், சில ஆண்டுகளுக்கு முன், குடிசையில், தேவாலயம் ஏற்படுத்தி, மதபோதகராக இருந்து வந்தார்.இந்நிலையில், நேற்று, காலை 9:00 மணிக்கு, அங்கு பணிபுரியும் சிறுமி, தேவாலயத்தை துப்புரவு பணி செய்ய, சென்றபோது, பாதிரியார் துாக்கில் தொங்கி, இறந்து கிடந்ததை கண்டார். அப்பகுதியினரிடம், இதுகுறித்து, தெரிவித்தார்.இது குறித்து, அணைக்கட்டு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வருமுன், அப்பகுதியினர் உடலை துாக்கிலிருந்து அப்புறப்படுத்தி, கீழே கிடத்தி வைத்தனர். போலீசார் வர தாமதமானதால், பகல், 12:30 மணிக்கு, கிழக்கு கடற்கரை சாலையில், மறியலில் ஈடுபட்டனர்.இதையறிந்த, மாமல்லபரம் போலீஸ் டி.எஸ்.பி., சுப்பாராஜூ, மதுராந்தகம் டி.எஸ்.பி., மற்றும் போலீசார் விரைந்தனர். வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி அனுப்பப்பட்டது.பாதிரியாரை ஒரு தரப்பினர் எதிர்த்து வந்ததாகவும், அவர் அணிந்திருந்த நகைகளை காணவில்லை, என்றும், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும், அப்பகுதியினர் வாக்குவாதம் செய்தனர். போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி, உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பினர்.இதே கோரிக்கையை, வலியுறுத்தி, செங்கல்பட்டிலும் மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து, அவரது அக்கா மல்லிகா அளிதத் புகாரை அடுத்து, அணைக்கட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X