பதிவு செய்த நாள் :
பா.ஜ.,வினருக்கு எதிரான வழக்கு வாபஸ்?
முதல்வர் ஆதித்யநாத் பரிசீலனை

முசாபர் நகர்:உ.பி., மாநிலம், முசாபர் நகரில் நடந்த கலவரம் தொடர்பாக, பா.ஜ., தலைவர்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை கைவிட, அம்மாநில முதல்வர், யோகி ஆதித்யநாத் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.

 பா.ஜ.,  BJP, ஆதித்யநாத்,Adityanath,முதல்வர் யோகி, Chief Minister Yogi, சுரேஷ் ராணா,Suresh Rana,  சஞ்சீவ் பல்யான், Sanjeev Balyan, பர்தேந்து சிங்,Pardendu Singh,  உமேஷ் மாலிக் , Umesh Malik, ஹரிஷ் சந்திரா,  Harish Chandra,


தகவல்


உ.பி.,யில், பா.ஜ.,வைச் சேர்ந்த,

யோகி ஆதித்யநாத் முதல்வராக உள்ளார். இம் மாநிலத்தில், 2013 ஆகஸ்டில் நடந்த வன்முறை களில், பலர் உயிரிழந்தனர். இந்த சம்பவங்கள் தொடர்பாக, பா.ஜ., மூத்த தலைவர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கை கைவிடுவது குறித்து, முதல்வர் ஆதித்யநாத் பரிசீலித்து வருவதாக, தகவல் வெளியாகி உள்ளது.


சுரேஷ் ராணா, சஞ்சீவ் பல்யான், பர்தேந்து சிங், உமேஷ் மாலிக் உள்ளிட்ட, பா.ஜ., தலைவர்களுக்கு எதிராக, நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள, எட்டு வழக்குகளை வாபஸ் பெற, உ.பி., அரசு நடவடிக்கை எடுப்பதாககூறப்படுகிறது.


கடிதம்இந்த வழக்கு தொடர்பாக, 13 அம்சங்கள் குறித்த விபரங்களை, சட்டத் துறை மூலம், மாநில அரசு

Advertisement

கேட்டுஉள்ளது. ஆனால் இத்தகவலை, முசாபர் நகர் மாவட்ட உயரதிகாரி, ஹரிஷ் சந்திரா மறுத்து உள்ளார்.அவர் கூறுகையில், ''வழக்குகள் வாபஸ் பெறுவது தொடர்பாக, எங்களுக்கு இது வரை, அரசிடம் இருந்து கடிதம் வர வில்லை. ''அதே சமயம், விரைவில், அத்தகைய கடிதம் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. அதிகாரபூர்வ கடிதம் வந்த பின், அது பற்றிய விபரங்களை தெரிவிப்போம்,'' என்றார்.


Advertisement

வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Abubacker - tirunelveli,இந்தியா
24-ஜன-201811:45:56 IST Report Abuse

Abubackerஇவருக்கு கோயில் கட்டி எல்லோரையும் கும்மிட சட்டம் இயற்றினாலும் இந்த அரசும், சட்டமும் , மக்களும் ஆதரிப்பார்கள்.

Rate this:
Mani . V - Singapore,சிங்கப்பூர்
23-ஜன-201800:38:49 IST Report Abuse

Mani . Vஉலகத்திலேயே தங்கள் மீது உள்ள வழக்குகளை தாங்களாகவே தள்ளுபடி செய்து கொள்ளும் ஒரு மட்டரகமான அரசுதான் பாஜக அரசு.

Rate this:
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
22-ஜன-201817:10:38 IST Report Abuse

Malick Rajaபாருக்குள்ளே நல்ல நாட்டு எம்பாரதநாடு .. என்பது உண்மை அதை யாராலும் மாற்ற முடியாது . நல்ல இடங்களில் தூய்மையான நிலங்களில் கூட சாக்கடைகள் வந்து போவது இயல்புதான் கடும் வெயில் வந்தவுடன் தானாக மறைவது போல அனைத்தும் மடிந்து எம்பாரதநாடு நல்ல நாடாகவே என்றும் விளங்கும்

Rate this:
மேலும் 28 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X