அதிரடி: ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.,க்கள் 20 பேர் தகுதி நீக்கம் Dinamalar
பதிவு செய்த நாள் :
 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ., AAP MLA,கெஜ்ரிவால்,Kejriwal, தேர்தல் கமிஷன், Election Commission, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், President Ramnath Govind,  சட்டசபை தேர்தல்,Assembly Election,  பார்லிமென்ட் செக்ரட்டரி, Parliament Secretariat, ஆம் ஆத்மி ,Aam Aadmi, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ,Delhi Chief Minister Arvind Kejriwal,

புதுடில்லி:ஆதாயம் தரும் பதவி வகித்த, ஆம் ஆத்மி கட்சியின், 20 எம்.எல்.ஏ.,க்களை, தேர்தல்
கமிஷனின் பரிந்துரையை ஏற்று, தகுதி நீக்கம் செய்ய, ஜனாதிபதி, ராம்நாத் கோவிந்த்
ஒப்புதல் அளித்துள்ளார். ஆட்சிக்கு பாதிப்பில்லை என்றாலும்,இந்த அதிரடி நடவடிக்கையால், டில்லி முதல்வர், அரவிந்த் கெஜ்ரிவால் அரசு தர்மசங்கடத்தில் தவிக்கிறது.

 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ., AAP MLA,கெஜ்ரிவால்,Kejriwal, தேர்தல் கமிஷன், Election Commission, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், President Ramnath Govind,  சட்டசபை தேர்தல்,Assembly Election,  பார்லிமென்ட் செக்ரட்டரி, Parliament Secretariat, ஆம் ஆத்மி ,Aam Aadmi, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ,Delhi Chief Minister Arvind Kejriwal,


டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலை மையில், ஆம் ஆத்மி அரசு அமைந்துள்ளது. 2015ல் நடந்த சட்டசபை தேர்தலில், மொத்தமுள்ள, 70 தொகுதிகளில், ஆம் ஆத்மி, 67 தொகுதிகளில் வென்றது. முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு உதவுவதற்காக, 20 எம்.எல்.ஏ.,க்கள், 'பார்லிமென்ட் செக்ரட்டரி' எனப்படும், கேபினட் அமைச்சர் அந்தஸ்து உள்ள பதவியில் நியமிக்கப்பட்டனர்.வழக்கு
கெஜ்ரிவால் அமைச்சரவையில், அதிகபட்சம் ஏழு பேர் மட்டுமே அமைச்சராக முடியும் நிலை இருந்ததால், முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு உதவுவதற்காக, பார்லி., ,

செக்ரட்டரி என்ற பதவியில், இந்த, 20 எம்.எல்.ஏ.,க்கள் நியமிக்கப்பட்டனர். 'இது, ஆதாயம் தரும் பதவி' என, எதிர்க்கட்சியினர் குற்றச்சாட்டுகளை சுமத்தினர். 'எம்.எல்.ஏ. பதவியுடன், ஆதாயம் பெறும் மற்றொரு
பதவியையும் வகிப்பதால், 20 பேரையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும்' என, டில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.


'துணை நிலை கவர்னரின் ஒப்புதல் பெறாத தால், பார்லி., செக்ரட்டரி பதவியில், எம்.எல்.ஏ.,க்கள் தொடர முடியாது' என, டில்லி உயர் நீதிமன்றம், கடந்த ஆண்டு தீர்ப்பு அளித்தது.இது தொடர்பாக, ஜனாதிபதிக்கும் புகார் அனுப்பப்பட்டது. இது குறித்து விசாரிக்கும் படி, தேர்தல் கமிஷனுக்கு, ஜனாதிபதி உத்தரவிட்டிருந்தார்.விசாரணை நடத்திய தேர்தல் கமிஷன், 'ஆதாயம் தரும் பதவியில் இருந்த, 20 எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்யலாம்' என, சமீபத்தில் பரிந்துரை அனுப்பியிருந்தது.


அந்தப் பரிந்துரையை ஏற்று, ஆம் ஆத்மி கட்சியின், 20 எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்ய, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், தற்போது ஒப்புதல் அளித்துள்ளார். இந்தத் தகவலை, மத்திய சட்ட அமைச்சகம் நேற்று வெளியிட்டது.


விசாரணைஇதற்கிடையே, தகுதி நீக்கம் செய்யும் தேர்தல் கமிஷனின் பரிந்துரையை எதிர்த்து, ஆம் ஆத்மி,

Advertisement

எம்.எல்.ஏ.,க்கள் டில்லி உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு, இன்று விசாரணைக்கு வருகிறது. ஜனாதிபதியின் உத்தரவையடுத்து, தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள, 20 எம்.எல்.ஏ.,க் களின் தொகுதிகள் காலியாக உள்ளதாக, டில்லி சட்டசபை சபாநாயகர் அறிவிக்க வேண்டும். அதைத் தொடர்ந்தே, அந்த தொகுதிகளுக்கு தேர்தல் கமிஷன் இடைத் தேர்தலை நடத்தும்.தற்போதைய நிலையில், இந்த, 20எம்.எல்.ஏ.,க்களும் தகுதி நீக்கம் செய்யப் பட்டாலும், அரவிந்த் கெஜ்ரிவால் அரசுக்கு ஆபத்து இல்லை.


சட்டசபையில் தற்போது, 66 ஆக உள்ள,ஆம் ஆத்மியின் பலம், 46 ஆக குறைந்து விடும். பெரும்பான்மைக்கு, 35 எம்.எல்.ஏ.,க் களின் ஆதரவு தேவை என்பதால், அரசுக்கு பாதிப்பு இருக்காது. 'இந்த, 20 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடந்தால், அனைத்திலும் ஆம் ஆத்மிக்கு மீண்டும் வெற்றி வாய்ப்பு கிடைப்பதற்கு வாய்ப்பில்லை' என, அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர். அதனால், அரசியல் ரீதியில் இந்த நடவடிக்கை, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.


ஜனநாயகத்துக்கு அபாயம்
ஆம் ஆத்மி, எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்து, ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு, அரசியல்அமைப்பு சட்டத்துக்கு எதிரானது. ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய ஆபத்தாகவும் அமைந்துள்ளது. தங்கள் தரப்பு வாதத்தை தெரிவிக்க, எம்.எல்.ஏ.,க்களுக்கு வாய்ப்பு அளித்திருக்க வேண்டும்.

அசுதோஷ், மூத்த தலைவர், ஆம் ஆத்மி


பாதுகாக்கப்பட்டுள்ளதுஆம் ஆத்மி, எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்ய, ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளதன் மூலம், ஜனநாயகத்தின் மாண்பு பாதுகாக்கப் பட்டுள்ளது. ஆதாயம் தரும் பதவி மூலம் கிடைத்த பலன்களை, இந்த, எம்.எல்.ஏ.,க்கள் திருப்பித் தர வேண்டும்.

மனோஜ் திவாரி, டில்லி மாநில தலைவர், பா.ஜ.,


Advertisement

வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Prabaharan - nagercoil,இந்தியா
22-ஜன-201813:34:20 IST Report Abuse

Prabaharanதமிழ்நாட்டில் மட்டும் இந்த விஷயம் வேலை செய்ய வில்லை. பிடிக்காதவர்கள் ஆளும் மாநிலத்தில் மட்டுமே நடவடிக்கை.

Rate this:
ஆனந்த் - நாகர்கோவில் ,இந்தியா
22-ஜன-201812:51:03 IST Report Abuse

ஆனந்த் சமோசா போச்சே

Rate this:
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
22-ஜன-201811:44:44 IST Report Abuse

pradeesh parthasarathyகொள்ளைக்காரனும் , ஊழல்வாதிகளும் எம் எல் எ வாக தொடரலாம் ... ஆனால் நேர்மயானவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள் .... ஊழல்வாதிகள் தேர்தலில் நிர்ப்பதற்கு சிகப்பு கம்பளம் வீசும் தேர்தல் கமிஷன் எந்த ஊழல் குற்றச்சாட்டும் இல்ல இந்த எம் எல் எ க்களை தகுதி நீக்க செய்ய பரிந்துரைத்திருப்பது பிஜேபி யின் சித்து விளையாட்டின் ஒரு பகுதி .... பிஜேபி மேலும் ஒரு படி தன்னை தாழ்த்தி அரசியல் செய்கிறது ....

Rate this:
22-ஜன-201813:48:44 IST Report Abuse

KeshavNaiduenna nermai ? why they have to be in two govt post?...

Rate this:
மேலும் 18 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X