வங்கிகளில் ரூ.15 லட்சம் கோடி வாராக்கடன் Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
வங்கிகளில் ரூ.15 லட்சம் கோடி வாராக்கடன்
வசூலிக்க வழி சொல்கிறது ஊழியர் சம்மேளனம்

ஊட்டி:''வங்கிகளில் நிலுவையில் உள்ள, 15 லட்சம் கோடி ரூபாய் வாராக்கடனை வசூலிக்க, சம்பந்தப்பட்டவர்களின் தனிப்பட்ட சொத்து களை, 'ஜப்தி' செய்யவேண்டும்,''என, தமிழ்நாடு வங்கி ஊழியர் சம்மேளன பொதுச் செயலர், அருணாசலம் கூறினார்.

 வங்கிகளில்,ரூ.15 லட்சம் கோடி,வாராக்கடன்


ஊட்டியில் நடந்த, நீலகிரி மாவட்ட வங்கி ஊழியர் சங்கத்தின் மாநாட்டில் பங்கேற்று, அவர் கூறியதாவது:முந்தைய, காங்., அரசும், இப்போதைய, பா.ஜ., அரசும், பொதுத் துறை வங்கிகளை தனியார்மயமாக்குவதில் தான் குறியாக உள்ளன.அதன்படி, சில மாதங்களுக்கு முன், பாரத ஸ்டேட் வங்கியோடு, அதன் கிளை வங்கிகள் இணைக்கப்பட்டன.


அதுவரை சிறப்பாக செயல்பட்ட, பாரத ஸ்டேட்

வங்கி, கிளை வங்கிகள் இணைப்புக்கு பின், பின்னடைவை சந்திக்கிறது. சேமிப்புக்கான வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டன.நாட்டில்உள்ள, 19 பொதுத் துறை வங்கிகளை, 5 - 6 வங்கி களாக குறைக்க, மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இதனால், வங்கித் துறை மிகப்பெரிய பாதிப்பை எதிர்கொள்ளும்.நாட்டில் உள்ள வங்கிகளில், பெரு முதலாளிகள், 15 லட்சம் கோடி ரூபாய் வரை வாராக்கடன் வைத்துள்ளனர். இதில், 12 நிறுவனங் களின் வாராக்கடன் மட்டும், இரண்டு லட்சம் கோடி ரூபாய்.


விஜய் மல்லையா உட்பட, வாராக்கடன் வைத்து உள்ளவர்களின், தனிப்பட்ட சொத்துகளை ஜப்தி செய்தால் மட்டுமே, வாராக்கடன் வசூலாகும். வங்கிகளில், நகைக்கடன், கல்விக் கடன் வாங்கி திருப்பிச் செலுத்த முடியாதவர்களின் புகைப் படத்தை பிரசுரித்து, அவர்களிடம் இருந்து கடனை வசூலிப்பது போன்று...வாராக்கடன் வைத்துஉள்ள பெரு முதலாளிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, லோக்சபா நிலைக்குழு பரிந்துரை செய்துள்ளது, இதை, மத்திய அரசு ஏற்க வேண்டும்.


அரசியல் செல்வாக்கின் அடிப்படையில் நியமிக்கப்படும், வங்கிகளின் தலைவர், நிர்வாக இயக்குனர் போன்றோரின் நிர்வாக குளறுபடிகள் தான், இத்தகைய பிரச்னைகளுக்குகாரணம்.

Advertisement

முறைகேடு, ஊழல், வாராக்கடனுக்கு காரண மான, வங்கி உயரதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.திவாலாகும் வங்கிக் கிளைகளை, வாடிக்கையாளர்களின் டிபாசிட் தொகையை வைத்தே புனரமைக்கும், 'நிதி தீர்வு மற்றும் வைப்புத் தொகை காப்பீடு' மசோதா வால், தங்களின் டிபாசிட் தொகைக்கு பாதுகாப்பு இருக்காது என்ற அச்சம், வாடிக்கையாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.


இதனால், வங்கிகளில் உள்ள தங்கள் டிபாசிட் பணத்தை, அவர்கள் திரும்ப பெறுகின்றனர். எனவே, அந்த மசோதாவை, மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு அருணாசலம் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
g.s,rajan - chennai ,இந்தியா
23-ஜன-201813:42:35 IST Report Abuse

g.s,rajanசும்மா புருடா விடறானுங்க,300 அல்லது 400 லட்சம் கோடிகள் இருக்கும் என பத்திரிக்கை செய்திகள் தெரிவிக்கின்றன

Rate this:
அம்பி ஐயர் - நங்கநல்லூர், சென்னை - 600 061,இந்தியா
23-ஜன-201807:24:36 IST Report Abuse

அம்பி ஐயர்என்னய்யா சொல்றீங்க...... ஒண்ணும் புரியலை.....

Rate this:
Indhiyan - Chennai,இந்தியா
22-ஜன-201822:19:33 IST Report Abuse

Indhiyanரொம்ப சிம்பிளான கேள்வி. 15 லட்சம் கோடிக்கு செக்யூரிட்டி [நிலம்,சொத்து] போன்றவை இருக்குமே. முன்னப்பின்னே ஆனால் கூட 10 லட்சம் கோடிக்காவது இருக்குமே. அதை விற்று சரி கட்டலாமே. [செக்யூரிட்டி வாங்காமல் கடன் தந்திருந்தால் வங்கி மேனேஜரையும், அமைப்பு குறை காரணமாக RBI கவர்னரையும் ஜெயிலில் போடவேண்டும். அவர்கள் சொல்லட்டும், அரசியல் அழுத்தம் காரணமாக தவறாக கொடுக்கப்பட்டது என்று.

Rate this:
மேலும் 24 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X