டாவோஸ்: சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் நடக்கும், உலக பொருளாதார மாநாட்டில் பங்கேற்க, பிரதமர் நரேந்திர மோடி, மூத்த மத்திய அமைச்சர்கள், தொழிலதிபர்கள் சென்றுள்ளனர்.
இந்தியாவில் முதலீடுகளை குவிக்கும் நோக்கில், உலக நாடுகளின் தலைவர்கள், தொழிலதிபர்கள் மத்தியில், பிரதமர் மோடி, இன்று சிறப்புரை ஆற்றுகிறார்.
பா.ஜ., தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, 2014ல் ஆட்சிக்கு வந்தது. வரும், 2019ல், லோக்சபா தேர்தல் நடக்கவுள்ளது. தே.ஜ., கூட்டணி அரசு, நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில், ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான, சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில், உலக பொருளாதார மாநாடு நடக்கிறது.
பங்கேற்பு
இந்த மாநாட்டில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல், பிரான்ஸ் அதிபர் மேக்ரன், பிரிட்டன் பிரதமர் தெரசா மே உட்பட, 70 நாடுகளின் தலைவர்கள்,
தொழிலதிபர்கள் பங்கேற்கின்றனர்.
வளர்ச்சி
இந்தியா சார்பில், இம்மாநாட்டில் பங்கேற்க, பிரதமர் நரேந்திர மோடி, வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர், சுரேஷ் பிரபு, ரயில்வேஅமைச்சர் பியுஷ் கோயல், பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் மூத்த அதிகாரிகள் சென்றுஉள்ளனர்.
வரும், 1ம் தேதி, பார்லிமென்டில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதற்கான ஆவணங்கள் தயாராகி வரும் நிலையில், நிதியமைச்சர் அருண் ஜெட்லியும், நாளை மறுதினம், டாவோஸ் செல்கிறார்.நாட்டின் முன்னணி தொழிலதிபர்களான, ரிலையன்ஸ் நிறுவனத்தின் முகேஷ் அம்பானி, டாடா குழும தலைவர் சந்திரசேகரன், விப்ரோ அதிபர் அஸிம் பிரேம்ஜி, அவரது மகன் ரிஷாத்... பஜாஜ் நிறுவன அதிபர் ராகுல் பஜாஜ், அவரது மகன் சஞ்ஜீவ், பாரத் போர்ஜ் நிறுவன அதிபர் பாபா கல்யாணி, பிரிட்டனைச் சேர்ந்த இந்திய வம்சாவளி தொழிலதிபர் லஷ்மி மிட்டல் உள்ளிட்டோர், இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.
பாரத ஸ்டேட் வங்கி தலைவர், ரஜ்னீஷ்குமார், ஐ.சி.ஐ.சி.ஐ., தலைவர் சந்தா கோச்சார், கோடக் மஹிந்திரா வங்கி துணைத் தலைவர் உதய் கோடக் ஆகியோரும், பாலிவுட் நடிகர் ஷாருக் கானும் பங்கேற்கின்றனர்.பிரதமர்
மோடி கூறுகையில், ''இந்தியாவின் எதிர்கால வளர்ச்சிக்காக, என் எண்ணங்களை, கனவுகளை, சர்வதேச தலைவர்களுடன், டாவோஸ் மாநாட்டின் போது பகிர்ந்து கொள்வேன்,'' என்றார்.
வாய்ப்புகள்
இதனால், இந்தியாவில் முதலீடுகளை குவிக்க, இந்த மாநாட்டை, பிரதமர் நரேந்திர மோடியும், மூத்த அமைச்சர்களும் பயன்படுத்திக் கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.உலக பொருளாதார மாநாடு, இன்று துவங்கி, நான்கு நாட்கள் நடக்கின்றன. இன்று நடக்கும் துவக்க நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி, முக்கிய உரையாற்ற உள்ளார். அப்போது, 'புதிய இந்தியா' என்ற பெயரில், இந்தியாவில் உலக நாடுகளின் முதலீட்டாளர்களுக்கு கொட்டிக் கிடக்கும் வாய்ப்புகள் பற்றி விரிவாக எடுத்துரைப்பார் என தெரிகிறது.முன்னதாக, டாவோஸ் நகரில் நேற்று, உலக நாடுகளின் முன்னணி தொழிலதிபர்களுக்கு, பிரதமர் நரேந்திர மோடி, இரவு விருந்து அளித்தார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (21)
Reply
Reply
Reply