சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வட்டார போக்குவரத்து அதிகாரிகள் மாற்றம் : லஞ்ச சோதனையில் சிக்கியவர்கள் தூக்கியடிப்பு

Added : ஜன 23, 2018 | கருத்துகள் (5)
Share
Advertisement
திண்டுக்கல்: லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்திய வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் உள்ள அலுவலர், ஊழியர்கள் கூண்டோடு மாற்றப்பட்டு வருகின்றனர்.கடந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு பல மாவட்டங்களில் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் வசூல் வேட்டை கொடி கட்டி பறந்தது. இதை மோப்பம் பிடித்த லஞ்ச ஒழிப்பு போலீசார், ஒரே நேரத்தில் 16 மாவட்டங்களில் சோதனை நடத்தினர்.இதில் கணக்கில்

திண்டுக்கல்: லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்திய வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் உள்ள அலுவலர், ஊழியர்கள் கூண்டோடு மாற்றப்பட்டு வருகின்றனர்.
கடந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு பல மாவட்டங்களில் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் வசூல் வேட்டை கொடி கட்டி பறந்தது. இதை மோப்பம் பிடித்த லஞ்ச ஒழிப்பு போலீசார், ஒரே நேரத்தில் 16 மாவட்டங்களில் சோதனை நடத்தினர்.
இதில் கணக்கில் வராத பல லட்சம் ரூபாய் சிக்கியது. இதையடுத்து வட்டார போக்குவரத்துத்துறை கமிஷனருக்கு லஞ்சஒழிப்புத்துறையினர் கடிதம் அனுப்பினர். இதில், லஞ்ச ஒழிப்பு சோதனையில் சிக்கிய அலுவலர்கள் மீது துறைவாரியான நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அலுவலர்கள் வேறு ஊர் களுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர்.

கூண்டோடு மாற்றம் : அதிகாரி ஒருவர் கூறுகையில், 'தமிழகம் முழுவதும் இதுவரை 6 ஆய்வாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர். இன்னும் பலர் மாறுதல் பட்டியலில் உள்ளனர். கீழ் மட்ட ஊழியர்கள் வரை அனைவரும் கூண்டோடு மாற்றப்பட உள்ளனர்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
24-ஜன-201800:15:41 IST Report Abuse
Mani . V தமிழகமே லஞ்ச, ஊழலில் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இருந்து வர வேண்டிய "கட்டிங்க்" வரவில்லை போலும். அதனால் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள்.
Rate this:
Cancel
வேழவேந்தன்.க - Pudukkottai,இந்தியா
23-ஜன-201813:37:45 IST Report Abuse
வேழவேந்தன்.க இலஞ்சத்தை ஒழிக்க முடியாத துறைகளில் போக்குவரத்துத் துறை(RTO ),பதிவுத் துறை. நில அளவைத்துறை (Survey Dept ), வருவாய்த் துறை,உள்ளாட்சிகள் மற்றும் காவல்துறை ஆகியவைகள் முதன்மையானவை என்பதில் ஐயமில்லை
Rate this:
Cancel
Guru Swamy - Madurai,இந்தியா
23-ஜன-201808:26:54 IST Report Abuse
Guru Swamy தூக்கியடிச்சு என்ன பலன்?அங்க போய் அதே லஞ்சம் தான் வாங்கப்போறான்.புது இடம் அவ்வளவுதான்.பிடிபட்டு நிரூபணமானால் வேலையை விட்டு தூக்குங்க.தெருவில விடுங்க.படித்து வேலை இல்லா பட்டதாரிகள் கோடிக்கணக்கில் இருக்கிறார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X