கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
எம்.எல்.ஏ தகுதி நீக்கம், முதல்வர் பழனிசாமி, Chief Minister Palanisamy, சென்னை உயர் நீதிமன்றம், Chennai High Court, சசிகலா , Sasikala,வெற்றிவேல்,Vetrivel, தங்க தமிழ்செல்வன் , thanga tamilselvan, நீதிபதி எம்.துரைசாமி, Judge M Duraisamy, நீதிபதி இந்திரா பானர்ஜி,Judge Indira Banerjee,  நீதிபதி சுந்தர் ,justice Sundar,  நீதிபதி அப்துல் குத்துாஸ், Justice Abdul Kuddus,

சென்னை:முதல்வர் பழனிசாமிக்கு எதிராக, கவர்னரிடம் மனு அளித்த, ௧௮ எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கத்தை, ரத்து செய்யக் கோரிய வழக்கின் தீர்ப்பு, எப்போது வெளியாகும் என்ற
எதிர்பார்ப்பு, அரசியல் வட்டாரத்தில் எழுந்து உள்ளது. இந்த வழக்கை விசாரித்த, சென்னை உயர் நீதிமன்றம்,தேதி குறிப்பிடாமல், நேற்று தீர்ப்பை தள்ளி வைத்தது.

உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, அனைத்து தரப்பினரும், நேற்று எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்துள்ள நிலையில், அதற்கு பதிலளிக்கும் வகையில், கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்ய, வரும், 29 வரை அவகாசம் தரப்பட்டு உள்ளது. அரசியல் நிலவரத்தை அடியோடு மாற்றக் கூடிய தீர்ப்பு என்பதால், கட்சிகள் கிலி அடைந்துள்ளன.

எம்.எல்.ஏ தகுதி நீக்கம், முதல்வர் பழனிசாமி, Chief Minister Palanisamy, சென்னை உயர் நீதிமன்றம், Chennai High Court, சசிகலா , Sasikala,வெற்றிவேல்,Vetrivel, தங்க தமிழ்செல்வன் , thanga tamilselvan, நீதிபதி எம்.துரைசாமி, Judge M Duraisamy, நீதிபதி இந்திரா பானர்ஜி,Judge Indira Banerjee,  நீதிபதி சுந்தர் ,justice Sundar,  நீதிபதி அப்துல் குத்துாஸ், Justice Abdul Kuddus,


சசிகலா ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள், வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன் உள்ளிட்ட, 18பேர், கவர்னரை சந்தித்து, முதல்வர் பழனிசாமிக்கு எதிராக கடிதம் அளித்தனர். இதையடுத்து, 18 பேரையும் தகுதி நீக்கம்

செய்து, 2017செப்., 18ல், சபாநாயகர் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து, ௧௮ பேரும், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர்.


விசாரணை:


இம்மனுக்கள், முதலில் நீதிபதி, எம்.துரைசாமி முன், விசாரணைக்கு வந்தன. அப்போது, 18 தொகுதிகளுக்கும், தேர்தல் குறித்த அறிவிப்பாணை வெளியிட, தேர்தல் கமிஷனுக்கு, நீதிபதி இடைக்கால தடை விதித்தார். அதன்பின், நீதிபதி, ரவிச்சந்திரபாபு முன், வழக்கு விசாரணைக்கு வந்தது.வழக்கில் சட்டப் பிரச்னைகள் எழுப்பப்பட்டு உள்ளதால், விசாரணையை,இரு நீதிபதிகள் அடங்கிய, 'பெஞ்ச்' விசாரணைக்கு, அவர் பரிந்துரைத்தார்.

இதையடுத்து, தகுதி நீக்க வழக்கு மற்றும், தி.மு.க., தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களும், தலைமை நீதிபதி, இந்திரா பானர்ஜி, நீதிபதி, சுந்தர் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், 2017 நவம்பரில் விசாரணைக்கு வந்தன.


முதலில், 18எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கத்தை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள், விசாரணைக்கு எடுக்கப்பட்டன. தகுதி நீக்கம் செய்யப்பட்ட, ௧௮ பேர் சார்பில், மூத்த வழக்கறிஞர்கள், அபிஷேக் சிங்வி,

Advertisement

பி.எஸ்.ராமன், வழக்கறிஞர், ராஜா செந்துார்பாண்டியன் ஆஜராகினர்.


சபாநாயகர் மற்றும் சட்டசபை செயலர் சார்பில், மூத்த வழக்கறிஞர், அரிமா சுந்தரம், முதல்வர் பழனிசாமி சார்பில், மூத்த வழக்கறிஞர், வைத்தியநாதன், சட்டசபை கொறடா சார்பில், மூத்த வழக்கறிஞர், முகுல் ரோத்தகி ஆஜராகினர். இரு தரப்பு வாதங் களும்முடிந்ததை அடுத்து, எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்யும்படி, முதல் பெஞ்ச்உத்தரவிட்டு இருந்தது.

தள்ளிவைப்பு:


அதை தொடர்ந்து, முதல் பெஞ்ச் முன், 18 பேர் சார்பில், மூத்த வழக்கறிஞர், பி.எஸ்.ராமன், வழக்கறிஞர், ராஜா செந்துார் பாண்டியன் ஆஜராகி, ௫௫ பக்கங்கள் அடங்கிய, எழுத்துப் பூர்வ வாதங்களை தாக்கல் செய்தனர். சபாநாயகர், சட்டசபை செயலர், முதல்வர், சட்டசபை கொறடா தரப்பிலும், எழுத்துப்பூர்வ வாதங்கள் தாக்கலாகின.இதற்கு பதில் அளிப்பதாக இருந்தால், வரும், 29க்குள் தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டு, வழக்கின் தீர்ப்பை, தேதி குறிப்பிடாமல், முதல் பெஞ்ச் தள்ளி வைத்தது.


நம்பிக்கை தீர்மானத்துக்கு எதிராக ஓட்டளித்த, பன்னீர்செல்வம்உள்ளிட்ட,11எம்.எல்.ஏ.,க் களை தகுதி நீக்கம் செய்யக் கோரிய மனு மற்றும், தி.மு.க., தரப்பில் தொடரப்பட்ட மனுக்கள், பிப்ரவரி 2- வது வாரத்தில், விசாரணைக்கு எடுத்துக் கொள்ள படுகின்றன.


இந்த மனுக்களை, தலைமை நீதிபதி, இந்திரா பானர்ஜி, நீதிபதி,அப்துல் குத்துாஸ் அடங்கிய, முதல் பெஞ்ச் விசாரிக்கிறது. தற்போது, 18 எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்க வழக்கில், விசாரணை முடிந்து விட்டதால், பிப்.,2-வது வாரத்துக்குள் தீர்ப்பு வெளியாக லாம் என, வழக்கறிஞர்கள் தரப்பில் எதிர்பார்க்கப் படுகிறது. இந்த தீர்ப்பு, அரசியல் நிலவரத் தையே புரட்டிப் போடக்கூடியது என்பதால், சில கட்சிகள் கிலி அடைந்துள்ளன.


Advertisement

வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
24-ஜன-201816:23:02 IST Report Abuse

Endrum Indianவழக்கில் வென்றால் அவர்களை இந்த பக்கம் இழுக்க முயற்சி செய்வர் பணம் பதவி கொடுத்து. அவர்களும் இந்த கட்சிக்கு வந்து விட்டால் கட்சி பிழைக்கும், இல்லையென்றால் இடை தேர்தல் தான். ஆனால் வேடிக்கை இடைத்தேர்தல் நடந்தால் இப்பொழுது உள்ள ஒரு எம் எல் ஏ கூட அடுத்த முறை வெற்றி பெற முடியாது, அதற்கு தக்க உதாரணம் ஆர்.கே.நகர் ரூ.20 டோக்கன்.

Rate this:
rama - johor,மலேஷியா
24-ஜன-201816:14:42 IST Report Abuse

ramaமக்களமக்களால் தேர்ந்து எடுத்த உறுப்பினர்களை இப்படி அலைகளிபபதா

Rate this:
R.SANKARA RAMAN - chennai,இந்தியா
24-ஜன-201815:44:58 IST Report Abuse

R.SANKARA RAMANஎன்ன தீர்ப்பு வந்தாலும் இருக்கவே இருக்கிறது மேல் முறையீடு. இப்படியே இன்னும் மூன்று வருடங்கள் ஓட்டி விடலாம்

Rate this:
மேலும் 23 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X