அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
மதுரை திருவனந்தபுரம் இடையே
இரட்டை ரயில் பாதை

நாகர்கோவில்: மதுரை - நாகர்கோவில் - திருவனந்தபுரம் ரயில் பாதையை, 3,628 கோடி ரூபாய் மதிப்பில், இரட்டை ரயில் பாதையாக்கும் திட்டத்திற்கு, மத்திய ரயில்வே இணை அமைச்சர், அடிக்கல் நாட்டினார்.

மதுரை,Madurai, திருவனந்தபுரம்,Trivandrum, இரட்டை ரயில் பாதை, ரயில்வே , Railway,அமைச்சர் ராஜன் கோஹைன், Minister Rajan Cohein, அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், Minister Ponnathirakshanan,


மதுரை - வாஞ்சி மணியாச்சி - துாத்துக்குடி, 160 கி.மீ., வாஞ்சி மணியாச்சி - திருநெல்வேலி - நாகர்கோவில், 102 கி.மீ., கன்னியாகுமரி - நாகர்கோவில் - திருவனந்தபுரம், 86.38 கி.மீ., ரயில் பாதைகளை, இரட்டை பாதையாக மாற்ற, 3,628 கோடி ரூபாய் செலவில், திட்டம் தயாரிக்கப்பட்டு, நேற்று, நாகர்கோவில் ரயில் நிலையத்தில், அடிக்கல் நாட்டு விழா நடந்தது.


அடிக்கல் நாட்டி, மத்திய ரயில்வே இணை அமைச்சர், ராஜன் கோஹைன் பேசியதாவது: குறைந்த கட்டணத்தில், பாதுகாப்பான,

வேகமான பயணத்தை தர, ரயில்வே முயற்சிக்கிறது. ரயில்வே திட்ட மதிப்பீடு, 65 ஆயிரம் கோடி ரூபாயில் இருந்து, ஒரு லட்சம் கோடிரூபாயாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.


இந்திய ரயில்களில், தினமும், 2.50 கோடி பேர் பயணிக்கின்றனர். இது, ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகையை விட அதிகம். தெற்கு ரயில்வேயில், 80 லட்சம் பேர் பயணிக்கின்றனர். மதுரை - சென்னை வழித்தடத்தில், 25 கி.மீ., மட்டுமே, இரட்டை பாதையாக மாற்றப்பட வேண்டியுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


மத்திய நிதி மற்றும் கப்பல் துறை இணை அமைச்சர், பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.தமிழக செய்தி துறை அமைச்சர், ராஜு, அ.தி.மு.க., ராஜ்யசபா, எம்.பி., விஜயகுமார் மற்றும் தி.மு.க., -காங்., எம்.எல்.ஏ.,க்கள் பேசினர்.


புறக்கணித்த கேரளா


* விழா அழைப்பிதழில், கேரளாவில் இருந்து இரு அமைச்சர்கள், நான்கு, எம்.பி.,க்கள், ஐந்து, எம்.எல்.ஏ.,க்கள் பெயர்கள் இடம் பெற்றிருந்தன. ஆனால், ஒருவர் கூட பங்கேற்கவில்லை.

Advertisement

திருவனந்தபுரம் கோட்டத்தில் இருந்து, கன்னியாகுமரி மாவட்டத்தை பிரிக்க முயற்சி நடப்பதால், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், புறக்கணிப்பு செய்ததாக கூறப்படுகிறது


* பா.ஜ., - அ.தி.மு.க.,வினர், அவரவர் தலைவர் களை வாழ்த்தி கோஷம் எழுப்பியதால், கூச்சலும், குழப்பமுமாக இருந்தது. இதற்கு, பொன்.ராதாகிருஷ்ணன் முற்றுப்புள்ளி வைத்தார்


* குளச்சல் காங்., - எம்.எல்.ஏ., பிரின்ஸ் பேசிய போது, அவரை பேச விடாமல், பா.ஜ.,வினர் கோஷமிட்டபடி இருந்தனர்.


Advertisement

வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ரத்தினம் - Muscat,ஓமன்
27-ஜன-201809:08:37 IST Report Abuse

ரத்தினம்தென்மேற்கு தமிழ்நாட்டு பகுதி தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. சென்னை - செங்கோட்டை பொதிகை ரயிலுக்கு அதிகமாக ஒரு பகல் வண்டி வேண்டும். பல ஆண்டுகளுக்கு முன்பே தினசரி இரண்டு வண்டிகள் ஓடிக்கொண்டிருந்தன. அகலப்பாதை ஆகியபிறகு அது குறைக்கப்பட்டுள்ளது வேடிக்கை. பயணிகள் கூட்டம் அதிகம் உள்ள வழித்தடம் இது. செங்கோட்டையில் இருந்து கோயமுத்தூருக்கும் ஒரு ரயில் விடலாம்.

Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
25-ஜன-201810:40:04 IST Report Abuse

ஜெய்ஹிந்த்புரம்குளச்சல் காங்., - எம்.எல்.ஏ., பிரின்ஸ் பேசிய போது, அவரை பேச விடாமல், பா.ஜ.,வினர் கோஷமிட்டபடி இருந்தனர்.

Rate this:
mupaco - Madurai,இந்தியா
24-ஜன-201819:03:45 IST Report Abuse

mupacoThe day train from nagarcoil, tiruchendur, tirunelveli, sengottai was needed.

Rate this:
மேலும் 25 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X