புதுடில்லி:''நடப்பு நிதியாண்டில், 20 பொதுத் துறை வங்கிகளுக்கு, 88 ஆயிரத்து, 139 கோடி ரூபாய் பங்கு மூலதனமாக வழங்கப்படும்,''என, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்துள்ளார்; இதில்,ஐ.டி.பி.ஐ., வங்கிக்கு மட்டும்,10 ஆயிரத்து, 610 கோடி ரூபாய் வழங்கப்பட உள்ளது.
பொதுத் துறை வங்கிகளில், வாராக் கடன் மிகவும் அதிகரித்துள்ளது. 2015 மார்ச்சில், பொதுத் துறை வங்கிகளின் வாராக் கடன், 2.73 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது; இது, 2017, ஜூலையில், 7.33 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்தது; இதனால், வங்கிகள் நிதி நெருக்கடியில் தத்தளிக்கின்றன.
ரூ.2.11 லட்சம் கோடி
இதையடுத்து, கடந்தாண்டு, மத்திய நிதியமைச்சர், அருண் ஜெட்லி கூறுகையில், 'அடுத்த இரண்டு ஆண்டுகளில், பொதுத் துறை வங்கிகளில், 2.11 லட்சம் கோடி ரூபாய் பங்கு மூலதனம் மேற்கொள்ளப்படும்.
இதில், 1.35 லட்சம் கோடி ரூபாய், மறு முதலீட்டு பத்திரங்கள் மூலமும், மீதமுள்ள, 76 ஆயிரம் கோடி ரூபாய், பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு மூலமும் கிடைக்க, வழிவகை செய்யப்படும்' என்றார்.இந்நிலையில்,
டில்லியில், மத்திய நிதியமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, அருண் ஜெட்லி கூறியதாவது: மத்திய நிதியமைச்சகம் தீவிர ஆய்வுக்கு பின், நடப்பு நிதியாண்டில், 20 பொதுத் துறை வங்கிகளில், 88 ஆயிரத்து 139 கோடி ரூபாய், பங்கு மூலதனம் மேற்கொள்ள முடிவு
செய்யப்பட்டு உள்ளது. வங்கி களை சீரமைக்கும் நடவடிக்கையாக நிர்வாக தரம்
உயர்த்தப்படும்.
ஏற்கனவே நடந்த தவறுகள், மீண்டும் நடக்காமல் தடுக்கப்பட வேண்டும். வாராக்கடன் பிரச்னைக்கு தீர்வு காணப்பட வேண்டும்.பிரச்னைக்கு தீர்வு காண்பதுடன், அந்த தவறு மீண்டும் நடக்காமல், தடுக்கப்பட வேண்டியது அவசியம். பொதுத்துறை வங்கிகளை ஆரோக்கியமாகவும், சிறப்பாகவும் வைத்திருப்பது தான், அரசின் லட்சியம்.
வங்கிகளில் கோடிக் கணக்கில் கடன் வழங்கு வதற்கு கடும் விதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. பெரும் தொகை கடன் வாங்கி திருப்பி செலுத்தாத வர்களை கண் காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப் படும்.இவ்வாறு அவர் கூறினார்.
சிறப்பு குழு
நிதிசேவை துறையின் செயலர் ராஜிவ் குமார் கூறுகையில், ''வாராக் கடனை வசூலிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், செயல்பாடுகள் ஆகியவற்றை வைத்துதான், வங்கிகளின் பங்கு மூலதனம் அதிகரிக்கப்படும்.
250 கோடி ரூபாய்க்கு மேல் வழங்கப்படும் கடன்களை கண்காணிக்க, சிறப்பு குழு அமைக்கப்படும்,''என்றார்.
வாராக் கடன் அதிகரிப்பு
கடந்த ஆண்டு, ஜூலை -
டிசம்பரில், வாராக் கடன், அதிகரித்துள்ளதாக, 58சதவீத வங்கிகள்
தெரிவித்து உள்ளன.எப்.ஐ.சி.சி.ஐ., எனப்படும், இந்திய வர்த்தக மற்றும் தொழில்
கூட்டமைப்பு மற்றும் ஐ.பி.ஏ., எனப்படும், இந்திய வங்கிகள் சங்கம் ஆகியவை
இணைந்து நடத்திய ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது:கடந்த ஆண்டு, ஜூலை - டிசம்பர் மாதம் வரை, வாராக் கடன் அதிகரித்து உள்ளதாக, 58சதவீத வங்கிகள் தெரிவித்து உள்ளன. அதற்கு முன் நடத்திய ஆய்வில், 80சதவீத வங்கிகள், வாராக் கடன் அதிகரித்து உள்ளதாக தெரிவித்திருந்தன.
வாராக் கடனில், உள்கட்டமைப்பு, பொறியியல் சாதனங்கள், உலோகத்துறை ஆகியவையே முக்கிய பங்கு வகித்துள்ளன. கடன்களை மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என, ௨௮ சதவீத வங்கிகள் கோரியுள்ளன. இதற்கு முன், ௪௦ சதவீத வங்கிகள், இதேபோல், கோரிக்கை விடுத்திருந்தன.மேலும், பிப்1ல், தாக்கல் செய்யப்பட உள்ள, மத்திய பட்ஜெட்டில், சில அறிவிப்புகள் இடம் பெற வேண்டும் என, வங்கிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
வாராக் கடன்களுக்கான வரியை ரத்து செய்ய வேண்டும்; கார்ப்பரேட் வரி விகிதத்தை குறைக்க வேண்டும்; உள்கட்டமைப்பு துறை யில், முதலீடுகளை அதிகரிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட அறிவிப்புகள் இடம் பெற வேண்டும் என, விரும்புகின்றன. இவ்வாறு ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (40)
Reply
Reply
Reply