பதிவு செய்த நாள் :
பீஹார்,Bihar, லாலு பிரசாத் யாதவ், Lalu Prasad Yadav, ஜெகன்னாத் மிஸ்ரா , Jagannath Mishra, கால்நடை தீவன ஊழல், Animal feed scam, சிறை தண்டனை, Jail, சி.பி.ஐ நீதிமன்றம்,CBI Court, முதல்வர் நிதிஷ் குமார்,Chief Minister Nitish Kumar, ஐக்கிய ஜனதா தளம்,United Janata Dal, ராஷ்ட்ரீய ஜனதா தளம் ,Rashtriya Janata Dal,நீதிபதி ஷிவ்பால் சிங்,Judge Shivpal Singh,மாட்டுத் தீவன  ஊழல், Cow Fodder Scandal

ராஞ்சி: கால்நடை தீவன ஊழல் வழக்கில், பீஹார் முன்னாள் முதல்வர்கள், லாலு பிரசாத் யாதவ், ஜெகன்னாத் மிஸ்ரா ஆகியோருக்கு, தலா, ஐந்து ஆண்டு சிறை தண்டனை விதித்து, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் என, 48 பேருக்கும் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கால்நடை தீவனம் தொடர்பான மூன்றாவது ஊழல் வழக்கில், லாலுவுக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவருக்கு எதிரான, மேலும் இரண்டு வழக்குகளில், விரைவில் தீர்ப்பு அளிக்கப்பட உள்ளது.

பீஹார்,Bihar, லாலு பிரசாத் யாதவ், Lalu Prasad Yadav, ஜெகன்னாத் மிஸ்ரா , Jagannath Mishra, கால்நடை தீவன ஊழல், Animal feed scam, சிறை தண்டனை, Jail, சி.பி.ஐ நீதிமன்றம்,CBI Court, முதல்வர் நிதிஷ் குமார்,Chief Minister Nitish Kumar, ஐக்கிய ஜனதா தளம்,United Janata Dal, ராஷ்ட்ரீய ஜனதா தளம் ,Rashtriya Janata Dal,நீதிபதி ஷிவ்பால் சிங்,Judge Shivpal Singh,மாட்டுத் தீவன  ஊழல், Cow Fodder Scandal

பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி அரசு அமைந்துள்ளது. மாநிலத்தில், 1990களில், கால்நடை தீவனம் வாங்கியதில் ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது.போலி பில்கள் கொடுத்து, கருவூலங்களில் இருந்து, 950 கோடி ரூபாய் பணம் எடுத்து, முறைகேடு நடந்தது தொடர்பாக, சி.பி.ஐ., விசாரித்தது.
இந்த வழக்குகள், ஜார்க்கண்ட் மாநிலம்,

ராஞ்சியில் உள்ள, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத் தில் விசாரிக்கப்பட்டன. முன்னாள் முதல் வரும், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவருமான, லாலு பிரசாத்துக்கு எதிராக, ஐந்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. முதல் வழக்கில், லாலுவுக்கு, ஐந்து ஆண்டு சிறை தண்டனை விதித்து, 2013ல் தீர்ப்பு அளிக்கப்பட்டது.


இரண்டாவது வழக்கில், மூன்றரை ஆண்டு சிறை தண்டனை விதித்து, சமீபத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதையடுத்து, அவர் சிறை யில் அடைக்கப்பட்டுள்ளார். இந் நிலையில், சாய்பாசா மாவட்ட கருவூலத்தில் இருந்து, 33.67 கோடி ரூபாய் எடுத்து, ஊழல் செய்தது தொடர்பான வழக்கில், ராஞ்சி சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்ற நீதிபதி, ஷிவ்பால் சிங், நேற்று தீர்ப்பு அளித்தார்.


இந்த வழக்கில், லாலு பிரசாத் யாதவுக்கு ஐந்து ஆண்டு சிறை தண்டனை மற்றும் ஐந்து லட்சம்
ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த, முன்னாள் முதல்வர் ஜெகன்னாத் மிஸ்ராவுக்கும், ஐந்து ஆண்டு சிறை மற்றும் ஐந்து லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் என, 48 பேரும் குற்ற வாளிகள் என, சிறப்பு நீதிமன்றம் அறிவித்து, அவர்களுக்கான தண்டனையையும்

Advertisement

அறிவித்துள்ளது.கால்நடை தீவனம் தொடர்பான மேலும் இரண்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. தும்கா கருவூலத்தில் இருந்து, 3.97 கோடி ரூபாய் எடுத்து மோசடிசெய்த வழக்கு, இறுதி கட்டத்தில் உள்ளது. அதே நேரத்தில், 184 கோடி ரூபாய் மோசடி நடந்த டோரண்டா கருவூல வழக்கும் விசாரணையில் உள்ளது. இந்த வழக்குகளில், விரைவில் தீர்ப்பு அளிக்கப்பட உள்ளது.

கருணை காட்டுங்க!


தியோகர் மாவட்ட கருவூலத்தில் நடந்த ஊழல் தொடர்பான வழக்கில், மூன்றரை ஆண்டு தண்டனை விதிக்கப்பட்ட லாலு பிரசாத் யாதவ், ராஞ்சியில் உள்ள பிர்சா முன்டா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஜாமின் கோரி அவர் தாக்கல் செய்த மனு விசாரணையில் உள்ளது.திறந்தவெளி சிறையில் அடைக்கும் சலுகையை அளிக்க, நீதிமன்றம் முன்வந்தது. அங்குள்ள காட்டேஜில் குடும்பத்தாருடன் தங்க முடியும். ஆனால், ''என்னுடன் தங்குவதற்கு தொண்டர்கள் நிறைய பேர் வந்துவிடுவர்; அதனால், சட்டம் - ஒழுங்கு பாதிக்கப்படும்,'' என, அந்த கோரிக்கையை ஏற்க, லாலு மறுத்துவிட்டார்.''அடுத்த வழக்கிலாவது, தண்டனை வழங்கும் போது கொஞ்சம் கருணை காட்ட வேண்டும்,'' என, நீதிபதியிடம் நேற்று லாலு, கோரிக்கை வைத்தார்.


மக்களின் ஹீரோ


பீஹார் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ்: என் தந்தை லாலு பிரசாத் யாதவ், மக்களின் ஹீரோ. சி.பி.ஐ., நீதிமன்ற தீர்ப்பு இறுதியானதல்ல;இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்.


Advertisement

வாசகர் கருத்து (38)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
25-ஜன-201817:30:34 IST Report Abuse

Srinivasan Kannaiyaபனம் காட்டு நரிக்கு இதெல்லாம் ஜூஜிபி

Rate this:
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
25-ஜன-201817:00:27 IST Report Abuse

Malick Rajaஉச்ச நீதிமன்றம் தீர்ப்பு சில தடவைகளில் காலம் தாழ்ந்து குற்றவாளி மரணித்த பின்போ அல்லது மரண தருவாயிலேயோ தான் வெளிவரும் .. லல்லு வுக்கு இருமுறை இருதய அறுவை சிகிச்சை நடந்து இருக்கிறது இப்போதோ அப்போதொ என்ற தருவாயில் தீர்ப்பு வந்து என்ன பயன் . அதற்குப்பதிலாக சொத்துக்களை அனைத்தையும் விற்று அந்த மாநிலத்தில் வாழும் வறுமை கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கு பிரித்து கொடுத்து இருக்கலாம் லாலூவின் சொத்துக்களை பிடுங்காமல் அவரை உள்ளே தள்ளி யாருக்கு என்ன பயன் .. மருத்துவ அடிப்படியில் அவருக்கு சிறையில் வேலை கொடுக்கவும் முடியாது ஆக இதையெலலாம் உச்ச நீதிமன்றம் ஏன் கணக்கிலெடுக்கவில்லை

Rate this:
Lion Drsekar - Chennai ,இந்தியா
25-ஜன-201816:49:30 IST Report Abuse

Lion Drsekarஇந்த ஒரு ஆளுக்கே எத்தினை லட்சம் கோடி அரசு பணம் வீணாகப் போகிறதோ தெரியவில்லை, இவனுடன் மற்ற கொள்ளையர்கள் படித்த படிப்புக்கு ஏற்ப அவர்களுக்கும் இதே சலுகை என்றால் நாடு தாங்காது, வந்தே மாதரம்

Rate this:
மேலும் 35 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X