பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
'மாற்றுத்திறனாளிகளுக்கு தேர்தலில்
போட்டியிட வாய்ப்பு அளிக்க வேண்டும்'

புதுடில்லி:''மாற்றுத் திறனாளிகள், தேர்தலில் போட்டியிட வாய்ப்பு ஏற்படுத்தித் தர வேண்டும்,'' என, தலைமை தேர்தல் கமிஷனராக புதிதாக பதவியேற்றுள்ள, ஓம் பிரகாஷ் ராவத் தெரிவித்து உள்ளார்.

மாற்றுத் திறனாளிகள், தேர்தல்,Election, ஓம் பிரகாஷ் ராவத்,Om Prakash Rawat, தேர்தல் கமிஷர்,Elections Commissioner, சமூக ஊடகங்கள், தேர்தல் கமிஷன்,Elections Commission,  பேஸ்புக், Facebook, யூ டியூப் , youtube


மாற்றுத் திறனாளிகள் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிப்பது மற்றும் அதன் அவசியத்தை வலியுறுத்துவது குறித்த மாநாடு, டில்லியில் நேற்று நடந்தது. இதில், தலைமை தேர்தல் கமிஷனர் ராவத் பேசியதாவது:தற்போதுள்ள தொழில்நுட்ப வளர்ச்சியால், எல்லா துறைகளுமே அதிவேகமாக வளர்ச்சி அடைந்து வருகின்றன. இன்று காண்பது, அடுத்த நாளே மாறிவிடுகிறது.

இந்த மாற்றத்துக்கு இணையாக, நாமும் வேகமாக மாறி வருகிறோம்.
ஆனால், நம்மைப் போல இல்லாமல், நம்மை விட பின்தங்கிய நிலையில், பலர் இங்கு உள்ளனர். அவர்களைப் பற்றி சிந்தித்துப்
பார்க்க தவறி விடுகிறோம்; அந்த நிலை இனியும் தொடரக் கூடாது.இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில், நம்மைப் போலவே தேர்தல் கடமையாற்றும் முழு உரிமை மாற்றுத் திறனாளிகளுக்கும் உள்ளது.அதற்கான முழு அதிகாரத்தை, அவர்களுக்கு வழங்க வேண்டும்; அது, நம் நாட்டின் வளர்ச்சிக்கு அவசியமாகிறது.

மாற்றுத் திறனாளிகள், தேர்தலில் போட்டியிட தேவையான அனைத்து வசதிகளையும் தேர்தல் கமிஷன் செய்து தரும். அவர்கள் சார்பில், ஒரு மக்கள் பிரதிநிதி இருந்தால் தான்,அவர்களுக்காக குரல் கொடுக்க முடியும். இதற்கான முயற்சி உண்மையான அக்கறையுடன் செயல்படுத்தப்பட வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement

சமூக வலைதளங்களில் தேர்தல் கமிஷன்நம் நாட்டில், பேஸ்புக், யூ டியூப் போன்ற சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில், பகிரப்படும் தகவல்கள், உடனடியாக மக்களை சென்றடைகின்றன. அதனால், தேர்தல் கமிஷன் குறித்த தகவல், செய்திகளை, சமூக ஊடகம் மூலமாகவும் பகிர முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக, பேஸ்புக் மற்றும் யூ டியூப் ஆகியவற்றில், தேர்தல் கமிஷன் கணக்கு துவங்கி உள்ளது. இதை, தலைமை தேர்தல் கமிஷனர், ராவத், நேற்று துவக்கி வைத்தார்.


Advertisement

வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pasupathi Subbian - trichi,இந்தியா
25-ஜன-201814:27:11 IST Report Abuse

Pasupathi Subbianஇப்போது என்ன தடையாக இருக்கிறது. தனியாக இவர்களுக்கு அனுமதி வேண்டுமா?

Rate this:
Prabaharan - nagercoil,இந்தியா
25-ஜன-201814:02:43 IST Report Abuse

Prabaharanசாதாரண மக்களுக்கு வழி இல்லை. கோடீஸ்வரர்களும் மட்டுமே வாய்ப்பு

Rate this:
Devarajan - Tamil nadu,இந்தியா
25-ஜன-201814:02:36 IST Report Abuse

DevarajanMaattru thiranaligal uthavi thogai vaangave VAO 2000,to 5000 varai kudakanam ithu than tamilagathin nilai

Rate this:
மேலும் 10 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X