அரசியல் செய்தி

தமிழ்நாடு

நடிகர், குடும்ப ஆட்சி எடுபடாது : தமிழிசை பேச்சு

Added : ஜன 25, 2018 | கருத்துகள் (21)
Advertisement
நடிகர், குடும்ப ஆட்சி எடுபடாது : தமிழிசை பேச்சு

மதுரை: தமிழகத்தில் நடிகர்கள், தி.மு.க., போன்ற குடும்ப ஆட்சிக்கு இனி இடமிருக்காது,'' என, மதுரையில் பஸ் கட்டண உயர்வை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ., மாநில தலைவர் தமிழிசை பேசினார்.
அவர் பேசியதாவது: போக்குவரத்து நிர்வாகத்தில் அரசு துாங்கியதால், கட்டண உயர்வு ஏற்பட்டது. போக்குவரத்து ஊழியர் சம்பள
பேச்சுவார்த்தையில் பங்கேற்ற தி.மு.க., கம்யூ., தொழிற்சங்கத்தினர், பஸ் கட்டணத்தை உயர்த்த கூறினர்.
தற்போது கட்டண உயர்வுக்கு எதிராக போராடுகின்றனர். மக்களுக்காக போராட தி.மு.க., கம்யூ., காங்.,க்கு அருகதை இல்லை. எம்.எல்.ஏ.,க்களுக்கு சம்பளத்தை உயர்த்தியபோது நிதிபற்றாக்குறை இல்லையா. ஸ்டாலின் பேசுகையில், புதிய பறவைகளால் வெகு துாரம் பறக்கமுடியாது.
துடித்த பறவைகள் கூட பறக்கும். நடித்த பறவைகளால் முடியாது,' என்றார். தமிழகத்தில் நடிகர்கள், குடும்ப ஆட்சி எடுபடாது.
நடிகர் கமல், கஜானாவை நோக்கி போகவில்லை என்கிறார். ஏற்கனவே அரசு கஜானாவை காலி செய்துவிட்டது. கஜானாவை எதிர்பார்த்து செயல்படாத ஒரே கட்சி பா.ஜ., கட்டண உயர்வில் ஆந்திராவை ஒப்பிடும் முதல்வர் பழனிசாமி,
அங்குள்ள தொழில் வளர்ச்சி தமிழகத்தில் இல்லை என்பதை
உணர்வாரா.
இங்கு இலவசத்தை கொடுத்து, வரி மூலம் மக்களை பழி
வாங்குகின்றனர், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rangaraj - Coimbatore,இந்தியா
28-ஜன-201806:36:32 IST Report Abuse
Rangaraj குண்டு சட்டிக்குள் குதிரை ottomans தமிழிசை
Rate this:
Share this comment
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
26-ஜன-201800:36:05 IST Report Abuse
Mani . V தமிழிசை "நடிகர்களின் பேச்சு எடுபடாது" என்று யாரை மனதில் வைத்து சொல்கிறார் என்று புரியவில்லை? "டிஜிட்டல் இந்தியா, தூய்மை இந்தியா, கருப்பு பணம் மீட்பு, ஒவ்வொருவரின் வங்கி கணக்கில் 15 லட்சம் வரவு" என்று சொன்னதை இங்கு சுட்டிக்காட்டி "நடிப்பு" என்று சொல்லவில்லை என்று நினைக்கிறேன். இருந்தாலும் தமிழிசைக்கு தைரியம் கூடத்தான். "கட்டண உயர்வில் ஆந்திராவை ஒப்பிடும் முதல்வர் பழனிசாமி, அங்குள்ள தொழில் வளர்ச்சி தமிழகத்தில் இல்லை என்பதை உணர்வாரா?. இங்கு இலவசத்தை கொடுத்து, வரி மூலம் மக்களை பழி வாங்குகின்றனர்" என்று கூறும் தமிழிசை ஏன் இது போன்ற மக்கள் விரோத அரசை பதவி நீக்கம் செய்ய தங்கள் மேலிடத்தில் பரிந்துரைக்கவில்லை?
Rate this:
Share this comment
Cancel
TamilReader - Dindigul,இந்தியா
25-ஜன-201819:59:50 IST Report Abuse
TamilReader அதே போல் காவி கட்சிக்கும் இங்கு (தமிழகத்தில்) இடமில்லை
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X