நடிகர், குடும்ப ஆட்சி எடுபடாது : தமிழிசை பேச்சு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

நடிகர், குடும்ப ஆட்சி எடுபடாது : தமிழிசை பேச்சு

Added : ஜன 25, 2018 | கருத்துகள் (21)
நடிகர், குடும்ப ஆட்சி எடுபடாது : தமிழிசை பேச்சு

மதுரை: தமிழகத்தில் நடிகர்கள், தி.மு.க., போன்ற குடும்ப ஆட்சிக்கு இனி இடமிருக்காது,'' என, மதுரையில் பஸ் கட்டண உயர்வை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ., மாநில தலைவர் தமிழிசை பேசினார்.
அவர் பேசியதாவது: போக்குவரத்து நிர்வாகத்தில் அரசு துாங்கியதால், கட்டண உயர்வு ஏற்பட்டது. போக்குவரத்து ஊழியர் சம்பள
பேச்சுவார்த்தையில் பங்கேற்ற தி.மு.க., கம்யூ., தொழிற்சங்கத்தினர், பஸ் கட்டணத்தை உயர்த்த கூறினர்.
தற்போது கட்டண உயர்வுக்கு எதிராக போராடுகின்றனர். மக்களுக்காக போராட தி.மு.க., கம்யூ., காங்.,க்கு அருகதை இல்லை. எம்.எல்.ஏ.,க்களுக்கு சம்பளத்தை உயர்த்தியபோது நிதிபற்றாக்குறை இல்லையா. ஸ்டாலின் பேசுகையில், புதிய பறவைகளால் வெகு துாரம் பறக்கமுடியாது.
துடித்த பறவைகள் கூட பறக்கும். நடித்த பறவைகளால் முடியாது,' என்றார். தமிழகத்தில் நடிகர்கள், குடும்ப ஆட்சி எடுபடாது.
நடிகர் கமல், கஜானாவை நோக்கி போகவில்லை என்கிறார். ஏற்கனவே அரசு கஜானாவை காலி செய்துவிட்டது. கஜானாவை எதிர்பார்த்து செயல்படாத ஒரே கட்சி பா.ஜ., கட்டண உயர்வில் ஆந்திராவை ஒப்பிடும் முதல்வர் பழனிசாமி,
அங்குள்ள தொழில் வளர்ச்சி தமிழகத்தில் இல்லை என்பதை
உணர்வாரா.
இங்கு இலவசத்தை கொடுத்து, வரி மூலம் மக்களை பழி
வாங்குகின்றனர், என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X