பொது செய்தி

இந்தியா

பள்ளியில் தேசிய கொடி ஏற்ற மோகன் பாகவத் முடிவு

Added : ஜன 25, 2018 | கருத்துகள் (76)
Advertisement
பள்ளி,School,  தேசிய கொடி,National Flag, மோகன் பாகவத், Mohan Bhagwat, ஆர்.எஸ்.எஸ்.,RSS,குடியரசு தினம்,  Republic Day,முதல்வர் பினராயி விஜயன்,  Republic Day,கேரளா, Kerala,

திருவனந்தபுரம்: கேரள மாநிலம், பாலக்காட்டில், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு நடத்தும் பள்ளியில், குடியரசு தினத்தையொட்டி, நாளை நடக்கும் நிகழ்ச்சியில், அந்த அமைப்பின் தலைவர், மோகன் பாகவத், தேசியக் கொடியை ஏற்றுகிறார்.

கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி அரசு அமைந்துள்ளது. நாளை நடக்கும் குடியரசு தின விழாவில், தேசியக் கொடியை பயன்படுத்துவது குறித்த அறிவுரைகளை, மாநில அரசு பிறப்பித்துள்ளது.

அதன்படி, அரசு அலுவலகங்கள், கல்லுாரி, பள்ளிகளில் அதிகாரிகள், கல்லுாரி முதல்வர்கள், தலைமை ஆசிரியர்கள் மட்டுமே, தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என, கூறப்பட்டுள்ளது.இந்நிலையில், பாலக்காடு மாவட்டத்தில், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் துணை அமைப்பான, வித்யாபாரதி நடத்தும் பள்ளியில், ஆர்.எஸ்.எஸ்., தலைவர், மோகன் பாகவத், தேசியக் கொடியை ஏற்றுவார் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்தாண்டு, ஆக., 15ல், சுதந்திர தினத்தையொட்டி, இந்தப் பள்ளியில், மோகன் பாகவத், தேசியக் கொடியை ஏற்றினார். அரசு விதிகள் மீறப்பட்டதாக புகார் எழுந்ததால் சர்ச்சையானது. 'அரசு உத்தரவு, அரசு பள்ளிகளுக்கு மட்டுமே பொருந்தும்; தனியார் பள்ளிகளுக்கு அது பொருந்தது' என, ஆர்.எஸ்.எஸ்., சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது தேசியக் கொடி ஏற்றுவது தொடர்பாக, அரசு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், பாலக்காட்டில் தேசியக் கொடியை ஏற்றப் போவதாக, ஆர்.எஸ்.எஸ்., கூறியுள்ளது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (76)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mohammed Jaffar - Chennai,இந்தியா
25-ஜன-201821:02:38 IST Report Abuse
Mohammed Jaffar ஏன் தனியார் ஆட்கள் ஏற்றக்கூடாது?? இந்தியன் உணர்வு இருக்குற யார் வேண்ணா தேசிய கொடியை ஏத்தலாம், மோகன் பாகவத் ஆதரிச்சு சொல்லலை.. மற்றபடி.. அரசாங்க ஊழியர்கள் எவ்வளவு பேர், ஒரு உணர்வு பூர்வமா இந்தியா, இந்தியர், தேசியகொடி, தேசியகீதம்.. மரியாதையை கொடுக்கணும் நினைக்கிறாங்க? சும்மா பேருக்கு வந்து கொடி ஏத்திட்டு போய்டுவாங்க.. அதற்கு அதை நேசிக்கும் ஒருவர் அது ஏத்துறதுல என்ன தப்பு??? கேரளா அரசாங்கம் தப்பு பண்ணுது.... .. நாம எங்கேதான் இருந்தாலும், என்ன தான் பண்ணினாலும் நமது தேசியகீதம் ஜன கன இசைக்கும் பொது வரும் அந்த உணர்வு, உடனே எழுந்து நின்று.. நினைக்கும் போதே சந்தோசமா இருக்கு. இந்து, முஸ்லீம் என்ற வேறுபாடு இல்லாமல்.. அனைவரும் ஒற்றுமையை.. இந்தியர் என்னும் பெருமையும் வாழ்வோம். ஜெய்கிந்த்.. எல்லாருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்.
Rate this:
Share this comment
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
26-ஜன-201809:30:50 IST Report Abuse
Agni Shivaமுகமது..சரியான கோணத்தில் சிந்திக்கிறீர்கள். இதை தான் எங்களை போன்றவர்கள் கேட்டுக்கொள்வது. நீங்கள் எப்போது சரியாக கோணத்தில் சிந்திக்கிறீர்களோ அப்போது சனாதன மதத்தின் சிறப்பை, உண்மையை, அறிவிற்கு உகந்த, அமைதியான அதன் மான்பை உணர துவங்கி விட துவங்கி விட்டீர்கள் என்று அர்த்தம். சனாதன தர்மத்திற்கு அழைக்கிறேன். வாருங்கள். உங்களுக்கு குடியரசு தின வாழ்த்துக்கள்....
Rate this:
Share this comment
Cancel
Endless - Chennai,இந்தியா
25-ஜன-201820:21:57 IST Report Abuse
Endless திரு மோகன் பாகவத் அவர்கள் நாளை தேசிய கொடியை ஏற்றுவார்.... கிறிஸ்துவ போராளிகளான "கம்யூனிஸ்டுகள்", முடிந்தால் தடுக்கட்டும்... வாழும் நம் பரதம்... வளரும் நம் பாரத பாரம்பர்யம்......
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
25-ஜன-201817:52:25 IST Report Abuse
தமிழ்வேல் இந்த கொடியே வேணாம்னு சொன்னவனுங்க எதுக்கு இப்போ கொடியை ஏத்தனும் ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X