எம்.ஜி.ஆரை மறந்த ஆளுங்கட்சி; போலீஸ் ஸ்டேஷனில் குறுநில மன்னர்களின் ஆட்சி

Added : ஜன 25, 2018
Advertisement
பொங்கல் கொண்டாட்டம் முடிந்து ஒரு வாரமாகியும், திருப்பூர் மந்தநிலையில் உள்ளதுபோல், சித்ராவும், தனது வீட்டில் "ஹாயாக' அமர்ந்து, "டிவி' பார்த்து கொண்டிருந்தாள். காலிங்பெல் அடிக்கேவ, கதவை திறந்து பார்த்ததும், ""ஏ... மித்து இவ்ளோ நேரம், சரி வா உட்காரு,'' என்று சொல்லி, கிச்சனுக்குள் புகுந்து, சூடான போண்டா, டீ கப்போடு வந்தாள். டீபாயின் மீது வைத்து விட்டு, ""ரொம்ப
எம்.ஜி.ஆரை மறந்த ஆளுங்கட்சி; போலீஸ் ஸ்டேஷனில் குறுநில மன்னர்களின் ஆட்சி

பொங்கல் கொண்டாட்டம் முடிந்து ஒரு வாரமாகியும், திருப்பூர் மந்தநிலையில் உள்ளதுபோல், சித்ராவும், தனது வீட்டில் "ஹாயாக' அமர்ந்து, "டிவி' பார்த்து கொண்டிருந்தாள். காலிங்பெல் அடிக்கேவ, கதவை திறந்து பார்த்ததும், ""ஏ... மித்து இவ்ளோ நேரம், சரி வா உட்காரு,'' என்று சொல்லி, கிச்சனுக்குள் புகுந்து, சூடான போண்டா, டீ கப்போடு வந்தாள். டீபாயின் மீது வைத்து விட்டு, ""ரொம்ப டயர்டா இருக்குதா. பார்த்தாலே தெரியுதே. டீயை குடி. சரியாயிடும்,'' என்றாள் சித்ரா.போண்டாவை சாப்பிட்டவாறே, ""ஏன், பேன் ஓடலை. இப்போதெல்லாம் அடிக்கடி கரன்ட் "கட்' ஆகிறது,'' என்றவாறே, மித்ரா ஆரம்பித்தாள். ""கரன்ட் போனாலும் பரவாயில்லை. இந்த "யுபிஎஸ்' வேலை செய்யறதில்ல,'' என்றாள் சித்ரா.""யுபிஎஸ்' பேட்டரி என்றதும் தான் நினைவுக்கு வருது. லிங்கேஸ்வரர் ஊரில் உள்ள ஒன்றில் அலுவலக பயன்பாட்டுக்கு ஒரு "யுபிஎஸ்' வைச்சிருக்காங்க. அதிகாரிகள் அறை, விளக்கு, மின் விசிறி, கம்ப்யூட்டர் இணைப்பு கொடுத்திருக்காங்க. பேட்டரி ரிப்பேர் ஆனதால, புதுசா வாங்கியிருக்காங்க,'' என்று மித்ரா பேசபேவே, ""இதிலென்ன இருக்கு?'' என்றாள் சித்ரா.""மேட்டர் இருக்கு. பழைய பேட்டரிகளை காணோமாம். எந்த டெண்டரும் விடலை. யாருக்கும் தெரியாமல், ஸ்டோர் ரூமில் இருந்த பேட்டரி மட்டும் எப்டி மாயமாச்”ன்னு? ஆபீசுல ஊழியர்கள் பேசிக்கிறாங்களாம்,'' என்று விளக்கினாள் மித்ரா.""அதே ஆபீசில், விதி மீறி கட்டிய காம்ப்ளக்ஸை, சபாநாயகரை வைச்சு, திறக்கலான்னு ஆபீசரு, பார்த்தாரு. ஆனால், இந்த விவகாரம், சபாநாயகர் காதுக்கு போனதால, அவர் உஷாராயிட்டாராம். இதுபற்றி, கூடவே இருக்கற பிரண்ட்ஸ் கேட்டதற்கு, "காம்ப்ளக்ஸூக்கு முன்னாடி இருக்கற, டிரான்ஸ்பார்மரை மாத்திட்டு, கண்டிப்பாக, திறப்பு விழா நடக்கும்,' என்று சொல்லி சமாளிக்கிறாராம்,''""ஏற்கனவே, இந்த பில்டிங் கட்டியதில், ஏகப்பட்ட விதிமீறல் இருக்கு. இதில், டிரான்ஸ்பார்மரை மாற்றும் விவரம் தெரிஞ்ச, பக்கத்துல இருக்கிற வேன் ஸ்டாண்ட்கறாங்க, போர்க்கொடி தூக்கப் போறாங்களாம்,'' என்று சித்ரா மேடைப்பேச்சு மாதிரி நீட்டி முழக்கினாள்.""ஓஹோ... விஷயம் அப்படி போ குதா. சரிங்க... இந்த விஷயத்தையும் கேளுங்க. அதே லிங்கேஸ்வரர் ஊரில், இந்திரா காலனியில், வீட்டை காலி பண்ண மாட்டேன்னு ஒருத்தர் தகராறு செஞ்சாராம். ஹவுஸ் ஓனருக்கு சொந்தக்காரர் ஒருத்தரு, சிறுத்தை கட்சியில முக்கிய பொறுப்பில இருக்கறதால, அவங்க ஆட்கள் போய், ஓடுகளை பிரிச்ச வீசி கலாட்டா பண்ணாங்க. இதுபற்றி, குடியிருக்கிறவரு, போலீசில், "கம்ளைண்ட்' செஞ்சாரு. மூணு பேரை மட்டுமே அரெஸ்ட் பண்ணிட்டு, மெயினான ஆளை விட்டுட்டாங்க,'' என்று கூறி, மீண்டும் டீயை குடித்து விட்டு, தொடர்ந்தாள்.""அப்புறம், இந்த மேட்டர், பேஸ்புக்குல, வாட்ஸ்அப்பில் ஓடி, எஸ்.ஐ.,க்கு சிக்கலாச்சு உடேன, நம்ம "கர்மவீரர்' அதிகாரி, சம்பந்தப்பட்டவரை எப்படியோ பேசி, அவரை, நாலு நாள் கழிச்சு, அரெஸ்ட் செஞ்சாங்களாம்,'' என்றாள் மித்ரா.""அமைதிக்கு பேர் போன அந்த ஊர்ல, இப்பெல்லாம், அடிக்கடி இந்த மாதிரி ரகளை நடக்கறது, அதிகமாயிட்டே வருதுன்னு, கேள்விப்பட்டேன்,'' என்று சித்ரா சொல்ல, ""ஆமா, போலீசார், "ஸ்டிரிக்ட்டா' நடவடிக்கை எடுத்தா பரவாயில்லை. அவங்க எதையுமே, கண்டுக்கறதில்லையே. 24 மணி ேநரம் சரக்கு, ஒரு நம்பர் லாட்டரின்னு, எல்லா சமூக விரோத செயல்களா நடக்குது. மேலதிகாரியும் கண்டுக்கறதில்லை,'' என்று மித்ரா ஆதங்கப்பட்டாள்.""அட... விடுப்பா... எல்லாத்தையும், அந்த அவிநாசியப்பர் பார்த்துப்பாரு,'' என்று சித்ரா கூறியதும், மித்ரா ஆ”வாசப்பட்டாள்.இருவரும் சுவாரசியமாக பேசிக்கொண்டே இருந்த போது, மதுரையில் நடந்த, எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழா பற்றி, "டிவி'யில் காட்சி ஒளிபரப்பானது. அதைப்பார்த்ததும், மித்ரா, ""வழக்கமா, எம்.ஜி.ஆர்., பிறந்தநாள் விழான்னாலே, திருப்பூர்ல, 10 ஆயிரம் பேருக்கு அன்னதானம், அப்படி இப்படீன்னு பலமா இருக்கும். ஆனா, நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை, காகித பூ மாதிரி மணமில்லாம நடத்தி முடிச்சுட்டாங்களே?,'' என்று ஆச்சரியமாக கேட்டாள்.""ஆமாம், ரொம்ப கரெக்ட்டா சொன்னே. உள்ளாட்சி பிரதிநிதிகளும், மாநகர் மாவட்டத்துல அமைச்சர் இருந்தப்பவும், போட்டி போட்டு செலவு செய்வாங்க. இப்ப, எம்.எல்.ஏ.,க்கள் இருந்தும் "சிம்பிளா' முடிச்சுட்டாங்க. சிலைக்கு மாலை போட்டு, பாலாபிஷேகம் மட்டும் செஞ்சுட்டு போயிட்டாங்க,'' என்று சித்ரா ஆதங்கப்பட்டாள்.""ஒரு ஆள் இல்லைனா, நிலைமை தலைகீழா மாறீடுச்சேன்னு, தொண்டர்கள் வேதனைப்படறாங்க. 2011ல் தீர்மானம் போட்டும், திருப்பூர் வடக்குல இதுவரைக்கும், எம்.ஜி.ஆர்., சிலை வைக்க முடியலை. அமைச்சர், மேயர், எம்.எல்.ஏ.,க்கள் இருந்து என்ன பிரயோஜனம்னு கட்சிக்காரங்க டென்ஷனில் இருக்காங்க. சரி, பொங்கல் பரிசு நிலவரம் எப்படி இருக்குதுங்க?,'' என்றாள் மித்ரா.""அமைச்சர், எம்.எல்.ஏ.,க்கள் இருக்கும் வார்டுல இலவச வேட்டி, சேலை, கரும்போட பொங்கல் பரிசு போய் சேர்ந்திருக்கு. மத்த பக்கம் கரும்பு இல்லாம, பரிசை கொடுத்திருக்காங்க. வேட்டி, சேலை இன்னமும் வரலையாம்,'' என்றாள் சித்ரா.""என்னக்கா, ஸ்டேஷன் பக்கேம போகலையா?,'' என்று மித்ரா கேட்டதும், ""ஓ... போனேன. அனுப்பர்பாளையம் ஸ்டேஷனில், ரெண்டு ஏட்டோட அதிகாரம் கொடி கட்டி பறக்குது. ஏக்ஸிடென்ட் கேஸ் எது வந்தாலும், வைட்டமின் "ப' இல்லாமல், ஸ்டேஷனை விட்டு, நகர மாட்டாங்களாம். பெட்டிஷன் கொடுக்க வந்த மக்களும், "சரி, எப்படியாவது வேலையாகணுமேன்னு, "கவனிக்க'றாங்களாம். அதுவும், நேரடியா வாங்காமல், பக்கத்து டீக்கடையிலதான் "டீலிங்' நடக்குதாம். இந்த, இருவரை மீறி, மத்தவங்க, எதுவும் செய்ய முடியாத அளவுக்கு, செல்வாக்கை வளர்த்துட்டாங்களாம்,'' என்றாள் சித்ரா.அப்போது, "டிவி'யில், பழனிசாமி, செல்வவாஜூக்கு, பொன்னாடை அணிவித்து கவுரவிக்கப்படும்,' என்று ஒரு கட்சியின் பொதுக்கூட்ட காட்சி ஒளிபரப்பானது.""அப்போது, சூடாக டீ கொண்டு வந்தாள் மித்ரா. குளிருக்கு இதமாக, டீயை குடிக்க ஆரம்பித்த சித்ரா, ""வீரபாண்டி ஸ்டேஷன் லிமிட்டிலுள்ள பாறைக்குழி பகுதியில் "டாஸ்மாக்' "பார்' நடத்த ஆட்களுக்குள்ளே ஏதோ கருத்து வேறுபாடாம். இதனால, " பார்' யார் நடத்துவதுன்னு, பெரிய பட்டிமன்றேம நடக்குதாம். இதை கேள்விப்பட்ட போலீசார் சிலர், "நாங்க, பஞ்சாயத்து பண்ணிடேறாமுன்னு,' சொல்லி, குளிர் காயறாங்களாம்,'' என்றாள்.""நான் ஒரு போலீஸ் மேட்டரு சொல்றேன், கேளுங்க. இன்ஸ்பெக்டர்களே, டிரைவராகவும் வேலை பார்க்கறாங்க,'' என்று மித்ரா சொன்னதும், ""இன்ட்ரஸ்ட்டிங்கா, இருக்குகே. சீக்கிரம் சொல்லு,'' என்று சித்ரா ஆர்வமானாள். ""அனுப்பர்பாளையம், வேலம்பாளையம் இன்ஸ்பெக்டர்கள்தான், அப்பப்போ, ஜீப்பை எடுத்து ஓட்டிட்டு, "ரவுண்ட்ஸ்' போறாங்களாம். இதைப்பத்தி, ஸ்டேஷன் வட்டாரத்தில் கேட்டால், "ஷிப்ட்' மாத்தி விட வேற டிரைவர் இல்லாததால், இவங்கேள ஓட்டறாங்களாம்,' என்று மித்ரா முடித்தாள்.""அதனாலென்ன? மத்த விஷயங்களில், இன்ஸ்பெக்டர்தானே அதிகாரம் பண்றாரு. ஜீப் ஓட்டுனா, ஒண்ணும் குறைஞ்சு போகமாட்டாங்க,'' என்று சித்ரா கூறியதும், ""சரிக்கா, டைம் ஆயிடுச்சு. நான் கௌம்பேறன். "ரிபப்ளிக் டே' பங்ஷனில் சந்திக்கலாம்,'' என்று கூறிய மித்ரா, கிளம்பினாள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X