பதிவு செய்த நாள் :
ஆலோசனை!
லோக்சபா தேர்தலை முன்னதாகவே நடத்த பிரதமர் மோடி...
புது உற்சாகம் பெற்றுள்ள காங்கிரசை வீழ்த்த அதிரடி வியூகம்
அதிருப்தி குரல்கள் அதிகரிக்கும் முன் முந்திக்கொள்ள திட்டம்

எதிர்க்கட்சிகள் முழுவதுமாக தயாராவதற்கு முன், மத்திய அரசுக்கு எதிராக அதிருப்தி குரல்கள் அதிகரிக்கும் முன், இந்த ஆண்டிலேயே, லோக்சபா தேர்தலை நடத்த, பிரதமர் மோடி மற்றும், பா.ஜ., தேசிய தலைவர், அமித் ஷா திட்டமிட்டு உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.

லோக்சபா தேர்தலை முன்னதாகவே நடத்த பிரதமர் மோடி  ஆலோசனை: அதிருப்தி குரல்கள் அதிகரிக்கும் முன் முந்திக்கொள்ள திட்டம்


இதன் வாயிலாக, குஜராத் தேர்தலால், புது உற்சாகம் பெற்றுள்ள காங்கிரசை வீழ்த்த, அதிரடி வியூகம் வகுக்கப்பட்டு உள்ளது.சட்டசபை தேர்தலும், லோக்சபா தேர்தலும், ஒரே நேரத்தில் நடத்தப்பட வேண்டும் என, பிரதமர் மோடி அடிக்கடி கூறி வருகிறார். அதனால், செலவு குறையும் என்பது, முக்கிய காரணமாக கூறப்பட்டாலும், மத்திய - மாநில அரசுகளுக்கு, ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினால், அது, தேசிய கட்சிகளுக்கு சாதகமாக இருக்கும் என, பிரதமர் மோடியும், அமித் ஷாவும் நம்புவதாக, பா.ஜ., தலைவர்கள் கூறுகின்றனர்.

விமர்சனம்



பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே, ஆட்சிக்கு வந்த மோடி தலைமையிலான, மத்திய, பா.ஜ., அரசின் பதவிக்காலம், 2019 மே மாதம் முடிவடைகிறது.

காங்கிரசை போல், பெரிய ஊழல் புகாரில், இதுவரை சிக்காவிட்டாலும், பண மதிப்பிழப்பு நடவடிக்கை, பசுக் காவலர்களால் ஏற்பட்ட பிரச்னை, கீழ்மட்ட தலைவர்களின் சர்ச்சை பேச்சு போன்ற பல அம்சங்கள், நடுத்தர வகுப்பினரிடையே, லேசான அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளன; விவசாயிகள்பிரச்னையும், பல இடங்களில் பெரிதாக வெடித்துள்ளது.எதிர்பார்த்த அளவிற்கு, வேலைவாய்ப்புகள் உருவாகவில்லை என்ற விமர்சன குரல்களும், சமீப நாட்களாக எழ துவங்கி உள்ளன.
இது போன்ற அதிருப்தி குரல்கள் அதிகரிக்கும் அபாயம் உள்ளதால், முன்கூட்டியே தேர்தல் நடத்துவது உகந்தது என, பா.ஜ., கருதுகிறது.மோடி, அமித் ஷா ஆகியோரின், சொந்த மாநிலமான குஜராத்தில், மீண்டும் ஆட்சியை பிடிப்பதற்கு, பிரதமர் மோடி, 100 முறைக்கு மேல் சென்று, பிரசாரம் செய்ய வேண்டியதாகி விட்டது.

குஜராத் முடிவுகள், பொலிவிழந்திருந்த எதிர்க்கட்சியான காங்கிரசுக்கு, புது உற்சாகத்தை தந்துள்ளது.அதனால், லோக்சபா தேர்தலில், அந்த கட்சியின் தலைவர்களும், தொண்டர்களும், மேலும் ஊக்கத்துடனும், உற்சாகத்துடனும் பணியாற்றுவர். அத்துடன், சில மாதங்களில், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும்கர்நாடகாவில், சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.பொதுவாக, ஆட்சிக் காலத்தின் இறுதியில், ஆளுங்கட்சிக்கு ஏற்படும் பாதிப்பு, பா.ஜ., ஆளும் மாநிலங்களான, ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசத்திலும் ஏற்படலாம் என, கருதப்படுகிறது.கர்நாடகாவில், சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ், பா.ஜ.,வுக்கு

Advertisement

கடும் சவால் தர காத்திருக்கிறது. மேலும், மோடி என்ற தனி மனித பிம்பத்தை மட்டுமே, பா.ஜ., பெரிதும் நம்பி உள்ளது.அந்த மவுசு குறைவதற்கு முன், அதை முழுவதுமாக பயன்படுத்த வேண்டியுள்ளது. இவற்றையெல்லாம் மனதில் வைத்து, லோக்சபா தேர்தலை முன்கூட்டியே நடத்த, பா.ஜ., திட்டமிட்டு உள்ளது.

அவகாசம் கூடாது




மேலும், எதிர்க்கட்சிகள், குஜராத்தை போல் வியூகம் அமைக்க, அவகாசம் தந்துவிடக் கூடாது என்பதிலும், பா.ஜ., தலைவர்கள் கவனமாக உள்ளனர். மேலும், அடுத்து வரும் சட்டசபை தேர்தல்களில், ஒரு மாநிலத்தில், பா.ஜ., தோற்றாலும், அது, லோக்சபா தேர்தல் பிரசாரத்தை பெரிதும் பாதிக்கும்.எனவே, இந்த ஆண்டு இறுதியிலேயே, லோக்சபா தேர்தலை நடத்த, பிரதமர் மோடியும், பா.ஜ., தலைவர், அமித் ஷாவும், தீவிரமாக ஆலோசித்து வருவதாக, பா.ஜ., மேலிட வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. - நமது நிருபர் -

Advertisement

வாசகர் கருத்து (74)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ganapati sb - coimbatore,இந்தியா
29-ஜன-201812:40:32 IST Report Abuse

ganapati sbமாநில தேர்தல்களில் மாநில நிலவரம் பொறுத்து எப்படி முடிவு வந்தாலும்எப்போது தேர்தல் வந்தாலும் மத்தியில் மோடிக்கே மக்கள் ஆதரவு அளிப்பர்

Rate this:

P.ஜனா,அறந்தாங்கி.எத்தனை வியூகங்கள் வகுத்தாலும் லோக்சபா தேர்தலில் பாஜக மண்னை கவ்வுவது உறுதியாகிவிட்டது.

Rate this:
K.Sugavanam - Salem,இந்தியா
28-ஜன-201821:48:55 IST Report Abuse

K.Sugavanamமோடிக்கே ஆட்டம் கண்டுடுச்சு போல...

Rate this:
மேலும் 71 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X