'எங்கள் வழியில் செல்ல தயார்'

Added : ஜன 28, 2018 | கருத்துகள் (23)
Advertisement
ஐதராபாத் : ''தே.ஜ., கூட்டணிக்கு நாங்கள் தேவைப்படா விட்டால், 2019 பொதுத் தேர்தலில், எங்கள் வழியில் செல்லத் தயார்,'' என, தெலுங்கு தேசம் கட்சித் தலைவர், சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.ஆந்திராவில், தெலுங்கு தேசம் கட்சித் தலைவர், சந்திரபாபு நாயுடு முதல்வராக உள்ளார். தெலுங்கு தேசம் கட்சி, மத்தியில் ஆளும், தே.ஜ., கூட்டணியில் இடம்பெற்றுள்ளது.இந்நிலையில், ஆந்திர அரசு குறித்து,
'எங்கள் வழியில்  செல்ல தயார்'

ஐதராபாத் : ''தே.ஜ., கூட்டணிக்கு நாங்கள் தேவைப்படா விட்டால், 2019 பொதுத் தேர்தலில், எங்கள் வழியில் செல்லத் தயார்,'' என, தெலுங்கு தேசம் கட்சித் தலைவர், சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.

ஆந்திராவில், தெலுங்கு தேசம் கட்சித் தலைவர், சந்திரபாபு நாயுடு முதல்வராக உள்ளார். தெலுங்கு தேசம் கட்சி, மத்தியில் ஆளும், தே.ஜ., கூட்டணியில் இடம்பெற்றுள்ளது.இந்நிலையில், ஆந்திர அரசு குறித்து, மாநில, பா.ஜ.,வைச் சேர்ந்த சில தலைவர்கள் கூறிய கருத்துக்களால், சந்திரபாபு நாயுடு அதிருப்தி அடைந்து உள்ளதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக, முதல்வர் சந்திரபாபு நாயுடு, நேற்று முன்தினம், நிருபர்களிடம் கூறியதாவது:மத்தியில் ஆளும், தே.ஜ., கூட்டணிக்கு நாங்கள் தேவையில்லை என்றால், 2019 பொதுத் தேர்தலில், எங்கள் வழியில் செல்லத் தயாராக உள்ளோம்.

பா.ஜ.,வுடன் கூட்டணி அமைக்க, ஒய்.எஸ்.ஆர்., - காங்., விருப்பம் தெரிவித்துள்ளது பற்றி கவலைப்படவில்லை. அதன் தலைவர், ஜெகன்மோகன் ரெட்டி நாடகமாடுகிறார்.இவ்வாறு அவர் கூறினார்.

தே.ஜ., கூட்டணியில் இருந்து விலகப்போவதாக, சிவசேனா கூறி வருகிறது. அதேபோல், தற்போது, தெலுங்கு தேசம் கட்சியும் கூறியுள்ளதால், பரபரப்பு நிலவுகிறது.


Advertisement


வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
hasan - Chennai,இந்தியா
28-ஜன-201820:00:04 IST Report Abuse
hasan ரொம்ப சந்தோசம்
Rate this:
Cancel
ramana - kumbakonam,இந்தியா
28-ஜன-201817:25:47 IST Report Abuse
ramana மோடிக்கு கிரிமினல் ஐடியா கொடுத்து நாட்டு மக்களை சீரழிக்கும் சந்திரபாபு நாயுடு இன்னும் நிறைய சீரழிவார்.
Rate this:
Cancel
Sukumaran Sankaran Nair - Taiping (Perak).,மலேஷியா
28-ஜன-201814:10:49 IST Report Abuse
Sukumaran Sankaran Nair கட்சி அரசியல் (Partisan Politic) என்பதை மக்கள் நிராகரிக்கும் காலம் கனிந்து வருகிறது.மனித நாகரிக மேம்பாடு திரும்பமுடியாத உலகளாவிய முறைக்கு நகர்ந்து கொண்டிருக்கும் காலகட்டத்தை நோக்கி பயணிக்கும் அரங்கம் நிர்மாணிக்கப்பட்டுவிட்டது. ஆனாலும் விடமாட்டேன் என்று தாங்களே குழம்பிய நிலையில், குட்டையை மேலும் குழப்புகின்றனர்.பிரிவினைவாதிகள் ஒரு பக்கம் பயங்கரவாதிகள் என மறுபக்கம் அரசியல் அறத்தை பழைய சித்தாந்தங்களின் பிடிவாதமாக பினபற்றலாமென்றே,அரசியல் வாதிகள் கருதிக்கொண்டிருக்கிறாரகள். மாண்பும்,உயர்நெறிகளுடனுமான அரசியல் அமைப்பு ,தெய்வீக நாகரிக கட்டமைப்புக்கான அத்திவாரமானது ,மக்கள் தாங்களே தங்கள் ஆளுமையை ஏற்படுத்திக்கொள்ள , தனிநபர்,குடும்ப சமூகம்,நிறுவனம் என்ற கூறுகளால், இணையப்பெற்ற நல்லாட்சி முறைக்கு,மக்களையும் ,நாட்டையும் காக்கும், உரிமை ஏற்கும் தகுதியை நிரணயித்துக்கொள்ளவே,. தினமும் ஆற்றவேண்டிய கடமைகளான ஆன்மிக போராட்டத்தில்,வெற்றி காண தன்மை மாற்றம் எனும் ஆன்மிக கல்விப்பயிற்சி வட்டங்களில் கலந்து,மனித வள ஆற்றலை பெருக்கும் நடவடிக்கைகளில் ,அனைவரும் பங்கேற்போம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X